இயற்கைமீது பொங்கும் நன்றியுணர்வு

மனித வாழ்­க்கையில் இயற்கை மிக வலி­யது என்­ப­தற்கு கொவிட்-19 தொற்று சிறந்த எடுத்­துக்­காட்டு என்­பதை இயற்­கை­யு­டன் இயைந்த பொங்­கல் திரு­நாள் தமக்கு நினை­வூட்­டு­வ­தா­கக் கூறி­னார் ஓய்­வு­பெற்ற அஞ்­சல்­துறை அதி­காரி திரு சோம­சுந்­த­ரம் ராம­லிங்­கம், 71.

இருப்­பி­னும், அர­சாங்­கத்­தின் கட்­டுப்­பா­டு­கள் நல்ல பல­ன­ளித்­து இ­ருப்­ப­தால் மூன்­றாம் கட்­டத் தளர்­விற்­குப் பொங்­கல் திரு­நா­ளைக் கொண்­டாட முடி­வதை எண்ணி திரு ராம­லிங்­கம் மகிழ்ச்சி தெரி­வித்­தார்.

“முல்­லைக்­குத் தேர் தந்த பாரி வள்­ள­லின் கதை மூலம் இயற்­கை­மீது தமி­ழர்­க­ளுக்கு இருக்­கும் வலு­வான பிணைப்பு புலப்­ப­டு­கிறது. அந்த உற­வைப் பொங்­கல் திரு­நாள் காட்­டு­கிறது,” என்­றார் இவர்.

கடந்த தீபா­வ­ளி­யைப் போலன்றி, இம்­முறை எட்­டுப் பேர் வரை கூடிக் கொண்­டா­ட­ முடிவதில் இவ­ரின் மனைவி 61 வயது வாசு­கிக்கும் மகிழ்ச்சி.

பர­ப­ரப்­பான வாழ்­வில் நன்­றி­ உணர்­வைக் கொண்­டா­டு­வ­தால் பொங்­கல் திரு­நாள் எக்­கா­லத்­திற்­கும் உகந்­தது என்­றார் திரு ராம­லிங்­கத்­தின் மகன் பிர­கா­சம், 41. இயந்­தி­ர­வி­யல் நிர்­வா­கி­யான இவர், பொங்­கல் கொண்­டாட்­ட ஏற்­பா­டு­கள் எப்­போ­தும் தமக்கு உற்­சா­க­ம­ளிப்­ப­தா­கச் சொன்­னார்.

“பிள்­ளை­க­ளி­டம் நமது பண்­பாட்டு விழு­மி­யங்­களை எடுத்­து­உரைக்க பொங்­கல் போன்ற திரு­நாள்­கள் ஏற்­றவை,” என்­றார் பகுதி­நேர மொழி­பெ­யர்ப்­பா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் திரு பிர­கா­சத்­தின் மனைவி உஷா­நந்­தினி, 35.

பொங்கல் கொண்டாட்டத்தின் போது அம்­மா­வுக்கு உதவி செய்­வ­தும் பொங்­கலோ பொங்­கல் எனக் கூவு­வ­தும் தனக்­குப் பிடிக்­கும் என்றார் ஆறு வயது ராகவ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!