கழிவுப்பொருள் நிர்வாக ஊழியர் நலனில் கவனம்

கழிவுப்பொருள் நிர்­வாக ஊழியர்களுக்கான படிப்படியான சம்­பள உயர்வு முறையை உரு­வாக்­க புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஊழி­யர்­க­ளுக்கு இக்­குழு பயிற்­சிப் பாதை ஒன்­றை­யும் நடை­மு­றைப்­ப­டுத்­தும் என்று கூறப்­பட்­டது.

படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை மூலம் கழி­வுப்­பொ­ருள் நிர்­வா­கத் துறை­யில் உள்ள குறைந்த ஊதிய ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளத்தை உயர்த்­து­வ­தி­லும் அவர்­க­ளின் நல்­வாழ்வை மேம்­ப­டுத்­து­வ­தி­லும் புதிய முத்­த­ரப்­புக் குழு­மம் கவ­னம் செலுத்­தும் என மனி­த­வள அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

இத்­து­றை­யில் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறையை அறி­மு­கப்­படுத்­தும் யோச­னையை முதன்­மு­த­லில் தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் சென்ற ஆண்டு முன்­வைத்­தது.

இத்­திட்­டம் நிறை­வே­றி­னால், 3,000 உள்­ளூர் ஊழி­யர்­கள் இதன்­வழி பல­ன­டை­வர் என்று கூறப்­பட்­டது. புதி­தாக அமைக்­கப்­பட்ட குழு­வில் என்­டி­யுசி பிர­தி­நி­தி­கள், முத­லா­ளி­கள், தொழில்­து­றைச் சங்­கங்­கள், வாடிக்­கை­யா­ளர்­கள், அர­சாங்க அதி­கா­ரி­கள் ஆகி­யோர் இடம்­பெறு­வர். இவ்­வாண்டு பிற்­பா­தி­யில் குழு அதன் பரிந்­து­ரை­களை வெளி­யி­டும் என்று அமைச்சு கூறி­யது.

கழி­வுப்­பொ­ருள் துறைக்­கென வேலைப்­ப­யிற்­சிப் பாதை­கள், பயிற்சி பெறு­வ­தற்­கான தகு­தி­கள், சம்­பள அள­வீடு­கள் போன்­ற­வற்­றைக் குழு உரு­வாக்­கும் என அமைச்சு விளக்­கி­யது.

என்­டி­யுசி செயல்­பாடு மற்­றும் அணிதிரட்டல் பிரிவின் இயக்குநர் ஃபாமி அலி­மான், சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னத்­தின் கௌர­வத் துணைச் செய­லா­ளர் ஃபிலிக்ஸ் லோ ஆகி­யோர் இக்­கு­ழு­வுக்­குத் தலைமை ஏற்­றுள்­ள­னர்.

சம்­பள உயர்­வைத் திட்­ட­மி­டு­வ­தால் இத்­து­றை­யில் உள்ள ஊழி­யர்­க­ளுக்­கான வேலை முன்­னேற்­றப் பாதை தெளி­வாக அமைந்­திடும். சம்­ப­ளம் உயர வேண்­டு­மா­னால், ஊழி­யர்­கள் தங்­க­ளின் திறன் மேம்­பாட்­டுக்­காக ஏற்படுத்தப்­பட்ட பயிற்­சித்திட்டங்களுக்குச் செல்ல வேண்­டும்.

தற்போது பாது­கா­வல், துப்­பு­ரவு, நிலவனப்புத் துறை­களில் உள்ள சுமார் 80,000 ஊழி­யர்­க­ளுக்­குப் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அதை­ய­டுத்து இதே­போல் அமைக்­கப்­பட்ட குழு ஒன்று மின்­தூக்கி, மின்­ப­டி­கள் துறைக்­கெ­ன செய்­தி­ருந்த பரிந்­து­ரை­களை அர­சாங்­கம் 2018ஆம் ஆண்­டில் ஏற்­றுக்­கொண்­டது. இத்­து­றைக்­கான படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை 2022ஆம் ஆண்டு முதல் நடப்­புக்கு வரு­கிறது. இனி, ஐந்­தா­வது துறை­யாக கழி­வுப்­பொ­ருள் நிர்­வா­கத்­தில் உள்ள ஊழி­யர்­க­ளுக்கு இந்­தச் சம்­பள உயர்வு முறை விரி­வாக்­கம் காண­லாம்.

படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை குறித்து செப்­டம்­பர் மாதம் பேசிய சுகா­தார மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன், அதை மேலும் விரை­வாக விரி­வு­ப­டுத்­த­வும் அனைத்து துறை­க­ளி­லும் அமல்­ப­டுத்­த­வும் கேட்­டுக்­கொண்­டார்.

அதையடுத்து இத­ர துறை­களுக்­கும் இது விரிவு­ப­டுத்­தப்­படும் என்று துணைப் பிர­த­மர் ஹெங் அக்­டோ­ப­ரில் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!