கொண்டாட்டத்தில் கட்டுப்பாட்டை தொடருவது அவசியம்: பிரதமர் லீ

சிங்­கப்­பூர் இவ்­வாண்டு தொடக்­கத்­தில் கொவிட்-19 தடுப்­பூசி போடும் நடவடிக்கையைத் தொடங்கியதில் இருந்து 250,000 பேர் தங்களது முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­தாக பிர­த­மர் லீ சியன் லூங் (படம்) தெரி­வித்துள்­ளார்.

திட்­ட­மிட்­ட­படி தடுப்­பூசி விநி­யோ­கம் நடை­பெற்­றால் எல்­லா­ருக்­கும் அத­னைச் செலுத்த முடி­யும் என்­றும் கூறிய பிர­த­மர், பொது­மக்­க­ள் தங்­க­ளுக்­கான முறை வரும்­போது தங்­க­ளை­யும் தங்­க­ளது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளை­யும் பாது­காத்­துக்­கொள்ள தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முன்வ­ரு­மாறு கேட்­டுக்­கொண்­டார்.

“கொவிட்-19 தொற்­றி­லி­ருந்து நமது குடும்­பங்­களை பாது­காப்­பாக வைத்­தி­ருக்க வேண்­டும் என்ற நினைப்பே நம் எல்­லா­ரி­ட­மும் இருக்­கிறது,” என்று பிர­த­மர் லீ தமது சீனப் புத்­தாண்டு வாழ்த்­துச் செய்­தி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

“எந்­த­வோர் ஆண்­டும் இல்­லாத வகை­யில் இவ்­வாண்டு கொவிட்-19 சூழ­லில் நமது குடும்­பத்­தி­ன­ருக்கு பாராட்டு தெரி­விப்­பது முக்­கி­யம். நமது குடும்­பங்­கள் நமக்கு அளித்து வரும் அர­வ­ணைப்பு, ஆறு­தல் மற்­றும் ஆத­ரவு போன்­றவை மோச­மான கொவிட்-19 நிலை­யி­லி­ருந்து மீண்டுவர நமக்கு வலுவை அளித்­துள்­ளன,” என்­றார் பிர­த­மர்.

கடு­மை­யான கிரு­மிப் பர­வ­லைச் சந்­தித்து வரும் நாடு­கள், பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்­கை­யைக் குறைக்க தடுப்­பூ­சித் திட்­டத்தை தொடங்கி இருக்­கும் எச்­ச­ரிக்­கைப் போக்­கைச் சுட்­டிய அவர், “கொள்­ளை­நோய் ஒரு முடி­வுக்கு வந்த பின்­னர் மகிழ்ச்சி மிகுந்த கொண்­டாட்­டங்­களை நாம் எதிர்­பார்க்­க­லாம். போது­மான அள­வுக்கு தடுப்­பூ­சி­யைக் போட்­டுக்­கொண்­டால் தடுப்­பாற்­றல் நிறைந்­த­வர்­க­ளாக நாம் மாறு­வோம். ஆயி­னும் நாம் இன்­னும் அந்த நிலையை எட்­ட­வில்லை என்­ப­தால் பாது­காப்பு இடை­வெளி விதிமுறை பின்­பற்­றப்­ப­டு­வதை தய­வு­செய்து தொட­ருங்­கள். நீங்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டா­லும் இத­னைத் தொடர்ந்து கடைப்­பி­டி­யுங்­கள்,” என்றார் திரு லீ.

நடப்­பில் உள்ள கட்­டுப்­பா­டு­க­ளின்­படி பொது­மக்­கள் தங்­க­ளது வீட்­டில் நாள் ஒன்­றுக்கு எட்­டுப் பேரை மட்­டுமே வர­வேற்­க­லாம். அதே­போல உற­வி­னர்­க­ளைக் காண வெளி­யில் செல்­வோர் நாள் ஒன்­றுக்கு இரு வீடு­க­ளுக்கு மட்­டுமே செல்ல வேண்­டும். இந்த விதி­முறை ஏதோ ஒரு வகை­யில் கொண்­டாட்ட சூழலை மட்­டுப்­ப­டுத்­தும் என்­ப­தை­யும் குறிப்­பாக பெரிய குடும்­பங்­க­ளுக்கு சிர­மத்­தைக் கொடுக்­கும் என்­ப­தை­யும் ஒப்­புக்­கொண்ட திரு லீ, “உல­கம் முழு­வ­தும் கிரு­மிப் பர­வல் வேகம் நீடிப்­ப­தால் இத்­த­கைய கட்­டுப்­பா­டு­கள் அவ­சி­ய­மா­னவை,” என்­றார்.

ஆண்­டி­று­திக் கொண்­டாட்­டங்­க­ளின்­போது பலர் ஒன்­று­கூ­டி­ய­தா­லும் கட்­டுப்­பா­டு­க­ளைப் பின்­பற்­றத் தவ­றி­ய­தா­லும் ஜன­வரி மாதத்­தில் பெரும்­பா­லான நாடு­களில் புதிய கிரு­மிப் பர­வல் அலை உரு­வா­னதை அவர் எடுத்­து­ரைத்­தார்.“நாம் கற்­றுக்­கொண்டு தவிர்க்க வேண்­டி­ய­வற்­றில் சில இவை. வேறு வழி­யின்றி அர­சாங்­கம் விதித்த கடு­மை­யான கட்­டுப்­பா­டு­க­ளுக்கு தொடர்ந்து ஆத­ரவு அளித்து வரும் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் எனது நன்­றியை தெரி­விக்­கி­றேன். நமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களை பாது­காப்­பு­டன் வைத்­துக்­கொள்­ளும் முன்­னெச்­ச­ரிக்­கைப் போக்கு அவ­சி­ய­மா­னது.

“எனவே, ரீயூ­னி­யன் நிகழ்­வை­யும் நண்­பர்­கள், குடும்ப உறுப்­பி­னர்­க­ளு­டன் சேர்ந்து கொண்­டா­டு­வ­தை­யும் மாற்று வழி­களில், அதா­வது காணொளி அழைப்­பு­கள் வழி­யா­கவோ இணையச் சந்­திப்­பு­கள் வழி­யா­கவோ நிறை­வேற்­றிக்கொள்­வீர்­கள் என்ற நம்­பிக்கை எனக்கு உள்­ளது,” என்று பிர­த­மர் லீ தெரி­வித்­தார்.

இந்த கொள்­ளை­நோய் பர­வல் காலத்­தில் சிங்­கப்­பூ­ரர்­க­ளைப் பாது­காப்­பது, குறிப்­பாக முதி­யோர்க­ளைப் பாது­காப்­பது அர­சாங்­கத்­தின் தலை­யாய கடமை என்­றும் அவர் கூறி­னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!