கோயில்களின் தங்க ஆபரணங்களைக் கண்காணித்து பாதுகாக்க இந்து அறக்கட்டளை வாரியம் நடவடிக்கை

சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம் நிர்வகிக்கும் நான்கு கோயில்களுக்கிடையே தங்க பொருள்கள் கொண்டு செல்லப்படுவதைக் கண்காணிக்கும் நடைமுறையை வாரியம் மேம்படுத்துகிறது. கோயிலின் தங்க ஆபரணங்களை மோசடி செய்து அடகு வைத்ததன் தொடர்பில் கோயிலின் முன்னாள் தலைமை குருக்கள் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கோயில்களின் நிர்வாகக் குழுக்கள் கோயில்களின் தங்க பொருள்களின் கண்காணிப்பை வலுப்படுத்தும் என கலாசார, சமூக, இளையர் பிரிவு அமைச்சர் எட்வின் டோங் இன்று (மார்ச் 1) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், ஒவ்வோர் ஆண்டும் கூடுதல் எண்ணிக்கையில் தணிக்கைகள் நடத்தப்படும். அவற்றில் சில முன்னறிவிப்புகள் இன்றியும் செய்யப்படும்.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நிகழ்ந்த நகை மோசடி சம்பவம் தொடர்பில் இந்து அறக்கட்டளை வாரியம் மறு ஆய்வு செய்ததா, அத்தகைய சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என புக்கிட் பாத்தோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை திரு எட்வின் டோங்கிடம் கேள்வி எழுப்பினார்.

149 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் 172 தங்க ஆபரணப் பொருள்களை மோசடி செய்ததாக அந்தக் கோயிலில் முன்பு தலைமை குருக்களாக இருந்த 37 வயது கந்தசாமி சேனாபதி என்பவர் மீது கடந்த மாதம் 16ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டதாகவும் நகைகளை $2 மில்லியனுக்கும் அதிகமான தொகைக்கு அடமானம் வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கோயிலின் தலைமை குருக்கள் பொறுப்பிலிருந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நம்பிக்கை மோசடி செய்த ஊழியர், மோசடியிலிருந்து பெற்ற பணத்தை சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது என 5 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.

கோயிலின் மூலஸ்தானத்தில் வைக்கப்படும், வழிபாடுகளின்போது அடிக்கடி பயன்படுத்தப்படும் தங்க ஆபரணங்களை கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதிக்கு உட்பட்ட காலத்தில் மோசடி செய்து அடமானம் வைத்ததாகக் கூறப்படுகிறது.

கந்தசாமி சேனாபதிக்கு பணம் தேவைப்பட்டபோது கோயில் நகைகளை எடுத்து அடமானம் வைத்ததாகவும் பின்னர் பணம் இருக்கும்போது அந்த நகைகளை மீட்டு கோயிலில் திருப்பி வைத்ததாகவும் கூறப்பட்டது.

அனைத்து நகைகளையும் கந்தசாமி சேனாபதி தற்போது கோயிலிடம் ஒப்படைத்துவிட்டார்.

ஸ்ரீ மாரியம்மன் கோயில் உட்பட வாரியத்தால் நிர்வகிக்கப்படும் நான்கு கோயில்களிலும், தங்க ஆபரணங்களைக் கணக்கெடுக்க, வழக்கமான தணிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் திரு டோங் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தக் கோயில்களின் தங்க பொருள்களைச் சரிபார்க்க சிறப்பு தணிக்கைக் குழுவை வாரியம் அமைத்தது. வேறு விதிமீறல்கள் நடைபெறவில்லை என்பதை குழு கண்டுபிடித்தது என்றார் திரு டோங்.

கோயில்களின் தங்க பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவது, நிர்வகிக்கப்படுவது போன்றவற்றை வலுப்படுத்துவது குறித்து அறக்கொடை அமைப்புகளின் ஆணையத்துடனும் இந்து அறக்கட்டளை வாரியம் அணுக்கமாக செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

“குறிப்பாக, கோயில்களுக்குள் தங்க பொருள்கள் கொண்டு செல்லப்படுவதைப் பதிவு செய்யும் முறையை இந்து அறக்கட்டளை வாரியம் மேம்படுத்துகிறது,” என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!