விரைவாக கட்டப்பட்ட தங்குவிடுதிகளில் தனிமை உத்தரவை நிறைவேற்றலாம்

கட்டுமானம், கடல்துறை, பதனிடுதல் தொழில்துறை ஆகியவற்றில் புதிதாக சேரும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களுக்குப் பிறப்பிக்கப்படும் வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவின் பெரும்பாலான பகுதியை விரைவாக கட்டப்பட்ட தங்குவிடுதிகளில் நிறைவேற்றலாம் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 15ஆம் தேதியில் இருந்து கொவிட்-19 அபாயம் அதிகம் உள்ள நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் வேலை அனுமதி அட்டை, எஸ்-பாஸ் ஊழியர்களுக்கு இந்த ஏற்பாடு பொருந்தும்.

ஊழியர்கள் இங்கு வந்தவுடன் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

பரிசோதனை முடிவுகள் வெளிவரும் வரை ஊழியர்கள் நான்கு நாட்களுக்கு ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவர்.

கிருமித்தொற்று இல்லை என்று உறுதியான பிறகு, அவர்கள் விரைவாக கட்டப்பட்ட தங்குவிடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

அங்கு அவர்கள் மீதமுள்ள தனிமைப்படுத்தும் காலத்தைக் கழிப்பர்.

ஏற்கெனவே உள்ள தங்குவிடுதிகளைவிட விரைவாக கட்டப்பட்ட தங்குவிடுதிகளில் கூடுதல் வசதிகள் உள்ளன.

விரைவாக கட்டப்பட்ட தங்குவிடுதிகளில் தங்கியவாறு வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களுக்கான கட்டாய அறிமுகத் திட்டத்தில் ஈடுபடலாம் என்றும் ஒரே இடத்தில் இருந்தவாறு மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றும் மனிதவள இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“மற்ற நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து இங்கு கொவிட்-19 கிருமி பரவும் அபாயத்தைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என்றார் டாக்டர் டான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!