ஒரே நாளில் 72,330 பேர் பாதிப்பு, 459 பேர் மரணம்

இந்தியாவில் 2வது கொரோனா அலை: நிபுணர்கள் எச்சரிக்கை

இந்­தி­யா­வில் கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 72,330 பேர் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அத­னால் மேலும் 459 பேர் உயி­ரி­ழந்­து­ விட்­ட­தா­க­வும் அந்­நாட்­டுச் சுகா­தார அமைச்சு நேற்­றுக் காலை வெளி­யிட்ட அறிக்கை தெரி­விக்­கிறது.

கடந்த ஆண்டு அக்­டோ­பர் 11ஆம் தேதிக்­குப் பிறகு பதி­வான ஆக அதிக பாதிப்பு இது. அன்­றைய நாளில் 74,383 பேர் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இதை­ய­டுத்து, பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 12,221,665 ஆக­வும் மாண்­டோர் எண்­ணிக்கை 162,927ஆக­வும் உயர்ந்­தது.

இப்­போ­தைக்கு, கிரு­மித்­தொற்­றுக்­காக 584,055 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

கடந்த இரண்டு வாரங்­க­ளாக இந்­தி­யா­வில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. இதனை, இரண்டாவது கொரோனா அலையாக நிபு­ணர்­கள் எச்சரித்து இருக்கின்றனர்.

சென்ற வாரத்­தில் அன்­றாட பாதிப்பு கிட்­டத்­தட்ட 60,000ஆக அதி­க­ரித்­ததை அடுத்து இந்­திய அர­சாங்­கம் கவலை தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில், கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பதி­வா­ன­தைக் காட்­டி­லும் நேற்று முன்­தி­னம் கிட்­டத்­தட்ட 19,000 பேர் அதி­க­மா­கப் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது மக்­க­ளி­டையே அச்­சத்தை ஏற்­ப­டுத்தி இருக்­கிறது.

ஹோலி பண்­டிகை கார­ண­மாக கொரோனா பரி­சோ­தனை குறைந்­ததே இவ்­வா­ரத் தொடக்­கத்­தில் கிரு­மித்­தொற்று பாதிப்பு குறை­வா­கப் பதி­வா­கக் கார­ணம் எனக் கூறப்­ப­டு­கிறது. கொரோனா பர­வல் மோச­மான நிலை­யில் இருந்து படு­மோ­ச­மான நிலைக்­குச் சென்று­விட்­ட­தாக மத்­திய அரசு நேற்று முன்­தி­னம் கூறி­யி­ருந்­தது குறிப்­பிடத்­தக்­கது.

நேற்­றுக் காலை 8 மணி நில­வரப்­படி, முந்­திய 24 மணி நேரத்­தில் பதி­வான பாதிப்­பு­களில் 84.73% எட்டு மாநி­லங்­களில் பதி­வா­ன­தா­க­வும் மகா­ராஷ்­டிர மாநி­லம் தொடர்ந்து முத­லி­டத்­தில் இருப்­ப­தா­க­வும் அமைச்­சின் அறிக்கை கூறி­யது. கடந்த 24 மணி நேரத்­தில் மகா­ராஷ்­டி­ரா­வில் மட்­டும் 39,544 பேரை கொரோனா தொற்றி­ விட்­ட­தா­க­வும் அத­னால் 227 பேர் இறந்­து­விட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

சட்­டீஸ்­கர், கர்­நா­டகா, கேரளா, தமிழ்­நாடு, குஜ­ராத், பஞ்­சாப், மத்­தி­யப் பிர­தே­சம் ஆகிய மாநி­லங்­களி­லும் கொரோனா பர­வல் ஏறு­மு­கத்­தில் இருக்­கிறது.

இத­னி­டையே, ஒரு மாதம் நடை­பெ­றும் கும்­ப­மேளா நேற்று தொடங்­கிய நிலை­யில், உத்­த­ரப் பிர­தேச மாநி­லம், ஹரித்­து­வார் நக­ரம் வழி­யா­கப் பாயும் கங்கை ஆற்­றில் நூற்­றுக்­க­ணக்­கான பக்­தர்­கள் புனித நீரா­டி­னர்.

தொற்று அதி­க­மாக உள்ள 12 மாநிலங்­களில் இருந்து வரு­வோர் 'தொற்று இல்லை' எனச் சான்­றி­தழ் அளித்­தால் மட்­டுமே புனித நீராட அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!