கிருமித்தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஈஸ்டர் விடுமுறையில் பாதுகாப்பு விதிமுறைகளைத் தொடர ஹெங் வலியுறுத்து 900,000 பேர் முதல்முறை தடுப்பூசி போட்டுள்ளனர்

சிங்­கப்­பூ­ரில் 900,000க்கும் மேற்­பட்­டோர் குறைந்­தது முதல்­முறை கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­தாக துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் நேற்று தெரி­வித்­துள்­ளார்.

இருப்­பி­னும், இந்த ஈஸ்­டர் வார­யி­று­தி­யில் விழிப்­பு­டன் இருக்­கும்­படி­யும் பாது­காப்பு விதி­மு­றை­களைத் தொடர்ந்து கடைப்­பி­டிக்­கு­மா­றும் அவர் பொது­மக்­களை வலி­யு­றுத்­தி­னார்.

"கடந்த ஆண்டு கிரு­மிப் பர­வல் முறி­ய­டிப்பு நட­வ­டிக்­கை­கள் புனித வெள்­ளி­யின்­போது தொடங்­கி­யது. அப்­போது பயம், நிச்­ச­ய­மற்றதன்மை பர­வ­லாக இருந்­தது. ஓராண்டு கழிந்த நிலை­யில், நாம் அதிக நம்­பிக்கை, முன்­னேற்­றத்­து­டன் எதிர்­கா­லம் பற்­றிச் சிந்­திக்­க­லாம்" என்று திரு ஹெங் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 சூழல் கட்­டுக்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. தடுப்­பூசி போடும் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. படிப்­படி­யாக கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு, கூடு­தல் நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் தொடங்­கப்­ப­டு­கின்­றன என்றார் துணைப் பிர­த­மர்.

கிறிஸ்து­வப் பிரார்த்­த­னைக் கூட்­டங்­களில் 250 வரை­யி­லா­னோர் அனு­ம­திக்­கப்­ப­டு­வதை அவர் சுட்­டி­னார்.

பிரார்த்­த­னைக் கூட்­டங்­களில் பாடு­வ­தற்­கும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த வாரத்­தி­லி­ருந்து பிரார்த்­த­னைக் கூட்­டங்­களில் பங்கேற்­ப­வர்­கள் முகக்­க­வ­சம் அணிந்­து பாட அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்றார் திரு ஹெங்.

ஏப்­ரல் 5ஆம் தேதி­யி­லி­ருந்து வழி­பாட்­டுத் தலங்­களில் பிரார்த்­த­னை­யின்­போது பாடு­வ­தற்கு அனு­மதி அளிக்­கப்­படும் என்று கலா­சார, சமூக இளை­யர் துறை அமைச்சு புதன்­கி­ழமை அறி­வித்­தது. எனி­னும், முகக்­க­வ­சம் அணிந்­தி­ருப்­ப­து­டன் 30 நிமி­டங்­கள் வரை மட்­டுமே பாட முடி­யும்.

வழி­பாட்­டில் ஈடு­ப­டு­வோர் பாடு ­வ­தா­னால் நல்ல காற்­றோட்ட வசதி இருக்க வேண்­டும். கத­வு­க­ளை­யும் சன்­னல்­க­ளை­யும் திறந்து வைப்­ப­தன் மூலம் அல்­லது குளிர் சாதன வச­தி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தன் மூலம் சேர்ந்­துள்ள நீர்த்­துளி­களை அகற்ற, காற்­றோட்ட வச­தி­யைச் செய்து தர முடி­யும்.

வழி­பாட்­டுச் சேவை­க­ளுக்கு இடை­யில் வழி­பாடு நடை­பெ­றும் இடம் சுத்­தம் செய்­யப்­பட வேண்­டும். மேலும், பிரார்த்­த­னைக் கூட்­டங்­களில் கலந்­து­கொள்­வோர் பாடி­னால், அவர்­கள் அதி­க­பட்­சம் எட்­டுப் பேரைக் கொண்ட குழுக்­களா­கப் பிரிக்­கப்­பட வேண்டும். அக்­கு­ழுக்­களுக்­கி­டையே இரண்டு மீட்­டர் பாது­காப்பு தூர இடை­வெளி இருப்­பதை சமய அமைப்­பு­கள் உறுதி செய்ய வேண்­டும்.

அத்­து­டன், வழி­பாட்­டில் கலந்து­கொள்­வோர் பிரார்த்­தனை நூல்­க­ளை­யும் புனித நூல், வழி பாட்டுக்கான விரிப்பு போன்ற ஏனைய பொது­வான பொருட்­களை­யும் பகிர்ந்­து­கொள்­ளக்­கூ­டாது. தேவைப்­ப­டும்­போது, தங்­க­ளுக்­குத் தேவை­யான வழி­பாட்­டுப் பொருட்­களை வழி­பாட்­டில் ஈடு­ப­டு­வோர் கொண்டு வர­வேண்­டும்.

வழி­பாட்­டுச் சேவையை நடத்த 30 பேர் வரை மட்­டுமே அனு­மதிக்­கப்­ப­டு­வர். இதில் முகக்­க­வ­சம் அணி­யா­மல் பாட அனு­ம­திக்­கப்­படும் ஐவர் போக, முகக்­கவசம் அணிந்­த­வாறு பாட மற்­ற­வர்­களுக்கு அனு­மதி அளிக்­கப்­படு­கிறது.

பிர­த­மர் லீ சியன் லூங்­கும் புனித வெள்ளி குறித்து தமது ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டுள்­ளார்.

"பலர் நேர­டி­யாக சமய சேவை­களில் பங்­கேற்­கும் வகை­யில் கட்டுப்­பா­டு­க­ளைத் தளர்த்த முடிந்­த­தில் மகிழ்ச்சி," என்று அவர் குறிப்­பிட்­டார்.

பிர­த­மர் லீ, துணைப் பிர­த­மர் ஹெங் இரு­வ­ரும் கிறிஸ்­து­வர்­களுக்கு ஈஸ்­டர் வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக்­கொண்­ட­னர்.

திங்­கள்­கி­ழமை நில­வ­ரப்­படி 943,307 பேர் முதல்­முறை கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்­சின் இணை­யப்­பக்­கம் தெரி­வித்­துள்­ளது.

கிட்­டத்­தட்ட 375,605 பேருக்கு முழு­மை­யா­கத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. இது­வ­ரை­யில் மொத்­தம் 1,318,912 தடுப்­பூசி மருந்­து­கள் செலுத்­தப்­பட்­டுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!