ஜூன் மாதத்திலிருந்து முன்பதிவு செய்யலாம்

டாக்டர் ஜனில்: 45 வயதுக்குட்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசி

அனைத்­தும் திட்­ட­மிட்­ட­படி நடந்­தால் 45 வய­துக்­குட்­பட்­டோர் கொவிட்-19 தடுப்­பூசி போட வரும் ஜூன் மாதம் முதல் முன்­பதிவு செய்­யத் தொடங்­க­லாம் என்று சுகா­தார மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி தெரி­வித்­துள்­ளார்.

இம்­மா­தம் 3ஆம் தேதி நில­வரப்­படி, கிட்­டத்­தட்ட 1.05 மில்­லி­யன் பேர் குறைந்­தது முதல்­ தடுப்­பூ­சி­யையேனும் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். அவர்­களில் 468,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் இரண்­டா­வது தடுப்­பூ­சி­யைப் போட்டுக்கொண்டதாக டாக்டர் ஜனில் குறிப்பிட்டார்.

தடுப்­பூசித் திட்­டம் குறித்து நாடா­ளு­மன்ற உறுப்­பினர்­கள் முன்­வைத்த கேள்­வி­களுக்கு டாக்­டர் ஜனில் புதுச்­சேரி நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் பதி­ல­ளித்­துப் பேசி­னார்.

தற்­போ­து­வரை, 70 மற்­றும் அதற்­கு­மேல் வய­து­டைய தகுதி வாய்ந்த முதி­யோ­ரில் ஏறக்­கு­றைய 60 விழுக்­காட்­டி­ன­ரும், 60 முதல் 69 வய­துக்­குட்­ப­ட்டோ­ரில் 70 விழுக்­காட்­டி­ன­ரும் கொரோனா தடுப்­பூ­சி­ போட்­டுக்­கொண்டனர் அல்­லது அதற்கு முன்­ப­திவு செய்­துள்­ள­னர்.

அத்துடன், 45 முதல் 59 வய­து­டைய குடி­யி­ருப்­பா­ளர்­களில் ஏறக்­கு­றைய பாதி அல்­லது 500,000 பேர் தடுப்­பூசி போட முன்­ப­திவு செய்­துள்­ள­னர்.

"வலு­வான ஆத­ரவு ஊக்­கம் தருவதாக உள்ளது," என்ற டாக்டர் ஜனில், தடுப்­பூசி போடப் பதிவு செய்துகொண்டோருக்கு, தடுப்­பூசி போடும் நாள், நேரத்தை ஒதுக்குவதற்கான குறுஞ்­செய்தி படிப்­ப­டி­யாக அனுப்பப்படும் எனக்­ கூ­றி­னார்.

"பதி­வாகியுள்ள எண்­ணிக்­கை­யைப் பார்க்­கை­யில், இதற்­குச் சிறிது காலம் ஆக­லாம்," என்­றார் அவர். 45-59 வய­து­ப் பிரிவினரில் ஏறக்­கு­றைய 17 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர் அல்­லது தடுப்­பூசி போட நாள், நேரம் ஒதுக்­கி­யுள்­ள­னர்.

ஏனை­யோ­ருக்கு மே மாத நடுப்­ப­கு­தி­யில் குறுஞ்செய்தி கிடைக்கப் பெறு­வர். ஜூன் மாதத் தொடக்­கத்­தில் அவர்­கள் தடுப்­பூசி போடு­வதற்கு முன்­ப­திவு செய்­ய­லாம் என எதிர்­பார்க்­கப்­படு­ வ­தாக டாக்டர் ஜனில் கூறி­னார்.

தடுப்­பூசி போடும் மையங்­களின் எண்­ணிக்கை தற்­போது 31ஆக விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இம்மாத நடுப்­ப­கு­தி­யில் மொத்­தம் 40 தடுப்­பூசி மையங்­கள் தீவு முழு­வ­தும் செயல்­படும்.

தடுப்­பூசி தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யில்­தான் அவற்­றைத் தயா­ரிக்­க­மு­டி­யும் என்­ப­தால் சிங்­கப்­பூ­ருக்­கான தடுப்­பூசி விநி­யோ­கம் ஒரு வரம்­புக்கு உட்­பட்­ட­தாக உள்­ளது. அதே­நே­ரத்­தில் உல­க­ள­வில் தடுப்­பூ­சி­க­ளுக்­கான தேவை அதி­க­மாக உள்­ளது. அத­னால் அண்­மைய நாள்­களில், தடுப்­பூசி போட குறை­வான முன்­ப­தி­வு­களே ஏற்­கப்­பட்­ட­தாக டாக்­டர் ஜனில் குறிப்­பிட்­டார்.

தடுப்பூசிச் சான்றிதழ் நடைமுறை எளிதாக்கப்படும்

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோம் என்­பதை மக்­கள் காட்டுவதற்கான வழி­மு­றை­கள் எதிர்­கா­லத்­தில் எளி­தாக்­கப்­படும்.

தாங்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டதை தனி­ந­பர்­கள் எவ்­வாறு காண்­பிக்­க­லாம் என்­பது குறித்த விவ­ரங்­கள் தயா­ரா­ன­தும் சுகா­தார அமைச்சு அவற்றை வெளி­யி­டும் என்று சுகா­தார மூத்த துணை­ அ­மைச்­சர் ஜனில் புதுச்­சேரி நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

எல்லை தாண்­டிய பய­ணங்­களை அனு­ம­திப்­ப­தற்­காக தடுப்­பூ­சிச் சான்­றி­தழ்­க­ளுக்கு இரு­த­ரப்பு அங்­கீ­கா­ரம் அளிப்­ப­தற்­கான சாத்­தி­யம் குறித்து ஆராய சிங்­கப்­பூர் அர­சாங்க அமைப்­பு­கள், மற்ற நாடு­க­ளு­டன் சேர்ந்து கலந்­தா­லோ­சித்து வருகின்றன என்று டாக்­டர் ஜனி­லும் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங்­கும் தெரி­வித்­த­னர்.

இத­னி­டையே, அடுத்த மாதம் 1ஆம் தேதி­யில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு வரும் அனைத்­து­ல­கப் பய­ணி­கள், அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வ­ரத்­துச் சங்­கத்­தின் (IATA) 'டிரா­வல் பாஸ்' செய­லி­யைப் பயன்­ப­டுத்தி, பய­ணத்­திற்கு முந்­திய கொவிட்-19 பரி­சோ­தனை முடி­வு­க­ளைத் தாங்­கள் பய­ணம் செய்­யும் விமான நிறு­வனத்­து­டன் பகிர்ந்­து­கொள்­ள­லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!