இந்தியா: புதிய உச்சத்தால் பேரச்சம்; நூறாயிரம் பேருக்கு மேல் தொற்று

அமெ­ரிக்­கா­விற்­குப் பின் ஒரே நாளில் நூறா­யி­ரம் பேருக்கு மேல் கொவிட்-19 பாதிப்பு பதி­வான நாடாக இந்­தியா உரு­வெ­டுத்து இருக்­கிறது.

அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு நேற்­றுக் காலை 8 மணிக்கு வெளி­யிட்ட அறிக்­கை­யின்­படி, கடந்த 24 மணி நேரத்­தில் 103,558 பேருக்கு கொரோனா தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து, ஒட்­டு­மொத்த கிரு­மித்­தொற்று பாதிப்பு 12,589,067 ஆனது.

சென்ற ஆண்டு செப்­டம்­ப­ர் மாதம் ஒரே நாளில் 99,181 பேர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டதே முந்­தைய உச்­ச­மாக இருந்­தது.

குறிப்­பாக, மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் கிரு­மித்­தொற்று மிக வேக­மா­கப் பரவி வரு­கிறது. அங்கு மட்­டும் கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 57,074 பேர் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இதையடுத்து, மாநிலம் முழு­வ­தும் உண­வ­கங்­கள், கடைத்­தொ­கு­தி­கள், திரை­ய­ரங்­கு­கள் வரும் 30ஆம் தேதி வரை மூடப்­பட்­டி­ருக்­கும்.

தலை­ந­கர் மும்­பை­யில் நேற்று முன்­தி­னம் மட்­டும் 11,206 பேரை கிருமி தொற்­றி­யது. இதை­ய­டுத்து, இம்­மாத இறுதிவரை அங்கு 144 தடை உத்தரவு பிறப்­பிக்­கப்­பட்­டு இருக்கிறது.

வார­யி­று­தி­யி­லும் இரவு நேரத்­தி­லும் அங்கு ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில், அங்கு விரை­வில் பொது முடக்­கம் அறி­விக்­கப்­ப­ட­லாம் எனும் அச்­சத்­தில் அங்கு பணி­யாற்றி வரும் பீகார், உத்தரப் பிரதேசம், மத்­தி­யப் பிர­தே­சம், மேற்கு வங்­கம் ஆகிய வெளி­மா­நில ஊழி­யர்­கள் சொந்த ஊர் திரும்­பத் தொடங்­கி­யுள்­ள­னர்.

இந்தியாவில் மேலும் 478 பேர் கொரோனா தொற்றால் மாண்டு விட்டனர். அவர்களில் 222 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து, கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 165,101 ஆனது.

இதனிடையே, இதுவரை 79 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.

அமெ­ரிக்­கா­வில் கடந்த நவம்­பர் முதல் வாரத்­தில் ஒரு­நாள் பாதிப்பு நூறா­யி­ரத்­தைத் தாண்­டி­யது. இப்­போது அங்கு நாளொன்­றுக்கு கிட்­டத்­தட்ட 65,000 பேரை கிருமி தொற்­று­வ­தாக ஜான் ஹாப்­கின்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத் தர­வு­கள் தெரி­விக்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!