வாக்களிக்க திரண்டு சென்ற தமிழக மக்கள்

மாலை 5 மணி வரை 63.60% வாக்குப் பதிவு

தமி­ழக சட்­ட­மன்­றத் தேர்­த­லில் வாக்­க­ளிக்க மக்­கள் பேரார்­வம் காட்­டி­ய­தா­க­வும் காலை 7 மணிக்­குத் தொடங்­கி­ய­தில் இருந்தே வாக்­குப்­ப­திவு விறு­வி­றுப்­பாக நடை­பெற்­ற­தா­க­வும் தக­வல்­கள் வெளி­யா­யின. இந்திய நேரம் ப­கல் 11 மணி நில­வ­ரப்­படி மாநி­லம் முழு­வ­தும் உள்ள 234 தொகு­தி­களில் சரா­ச­ரி­யாக 26.9% வாக்குகள் பதி­வான நிலை­யில் மாலை 5 மணியளவில் அது 63.60% ஆக அதி­க­ரித்­தது.

இதே வேகம் மாலை வரை நீடித்­தது. சுட்­டெ­ரிக்­கும் வெயி­லை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் திரு­விழா கூட்­டம் காணப்­பட்­டது. கொவிட்-19 விதி­கள் கார­ண­மாக வாக்­கா­ளர்­கள் ஒரு மீட்­டர் இைடவெ­ளி­யில் நிற்க வைக்­கப்­பட்­ட­னர். கை சுத்­தி­க­ரிப்பு திர­வத்துளி­கள் வாக்­கா­ளர்­களுக்கு வழங்கப்பட்டன. உடல்­வெப்­ப­நி­லை­யும் பரி­சோ­திக்­கப்­பட்­டது.

சென்­னை­யி­லுள்ள ஆவ­டி­யிலும் கோவை­யின் அவி­னா­சி­யி­லும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்தை அழுத்­தும்­போது இரட்டை இலை சின்­னத்­தில் விளக்கு எரி­வ­தா­கப் புகார் எழுந்­தது. அதே­போல விருது ­ந­க­ரில் உள்ள ஒரு வாக்­குச்­சா­வ­டி­யில் உத­ய­சூ­ரி­யனுக்குப் பதில் தாமரை சின்­னத்­தில் விளக்கு எரி­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்ட புகா­ரைத் தொடர்ந்து அங்கு சிறிது நேரம் வாக்­க­ளிப்பு நிறுத்தி வைக்­கப்­பட்­ட தாகத் தகவல் வந்தது. ஆயினும் அதுபோன்ற தகவல்களை தமிழகத் தேர்தல் அதிகாரி மறுத்தார். உரிய சின்னத்திற்கு வாக்கு விழும் என்று அவர் உறுதியாகக் கூறினார். பர

­ப­ரப்பு தொற்­றிய நிலை­யில் வாக்­குப் பதிவு நடை­பெற்று முடிந்­துள்­ளது. மே 2ஆம் தேதி வாக்கு எண்­ணிக்கை நடை­பெ­று­கிறது.

தமி­ழ­கத்­தைப் போலவே கேரளா, புதுச்­சேரி ஆகிய மாநி­லங்­க­ளி­லும் நேற்று ஒரே கட்­ட­மாக சட்டமன்றத் தேர்தல் வாக்­குப் பதிவு நடை­பெற்­றது. பல கட்­டத் தேர்­தல் தொடங்கி­ விட்ட மேற்கு வங்­கா­ளம், அசாம் மாநி­லங்­களில் நேற்று மூன்­றாம் கட்ட வாக்­குப் பதிவு நடை­பெற்­றது.

அர­சி­ய­லில் பழுத்த அனு­ப­வம் பெறற கரு­ணா­நி­தி­யும் 2016 ேதர்­த­லில் துணிச்சலுடன் தனித்து களம் கண்டு அதி­மு­கவை தொடர்ந்து ஆட்­சி­யில் அமர வைத்த ஜெய­

ல­லி­தா­வும் உயி­ரு­டன் இல்­லாத நிலை­யில் நடை­பெற்றிருக்கும் முதல் சட்டமன்றத் தேர்­தல் இது. எனவே, இதன் முடி­வு­களை ஒட்டு­மொத்த இந்­தி­யாவே உற்­று­நோக்­கு­கிறது.

2016 தேர்­த­லில் அதி­முக 134 இடங்­க­ளி­லும் திமுக 89 இடங்­

க­ளி­லும் திமுக கூட்­ட­ணி­யில் போட்­டி­யிட்ட காங்­கி­ரஸ் 8 இடங்­க­ளி­லும் வெற்­றி­பெற்­றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

கண்டுபிடிக்க இன்னும் நிறைய இருக்கிறது

Before you head off, have you checked out these hot stories yet?.