ரஹ்மான்: இந்திய கலை, கலாசாரத்தை உச்சத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்

இந்திய கலைகளையும் கலாசாரத்தையும் உலகளாவிய நிலைக்கு உயர்த்த இன்னும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இந்திய கலாசாரம் முதல் பரிமாணத்திலேயே உள்ளது. இதனை இரண்டாம் பரிமாணத்திற்கு உயர்த்தி, உலகமே உள்வாங்கி பின்பற்றும் பிரபல கலாசாரமாக்க முடியும் என்று பிரபல இசைக்கலைஞர் ஏ. ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சில நேரங்களில், வட்டார கலாசாரங்களில் கவனம் செலுத்துவது அனைத்துலக அளவிற்கு கலையைக் கொண்டு செல்ல வழிவகுக்கும்.

இன்று உலகெங்கும் ஒலிக்கும் ‘எஞ்சோய் எஞ்சாமி’ பாடல் இதற்கு மிகச் சிறந்த உதாரணம் என்று கூறினார் அவர்.
தனிப்பட்ட கலைஞர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தர உருவாக்கப்பட்டுள்ள ரஹ்மானின் ‘மஜா’ இசை வெளியீட்டுத் தளத்தில் வெளியீடு கண்டிருக்கும் முதல் பாடல் இது.

சமூகமாக ஒன்றிணைந்தால் அழகான படைப்புகளை உருவாக்க முடியும் என்பதற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ, அறிவு ஆகியோர் உருவாக்கி உள்ள இந்தப் பாடல் ஓர் எடுத்துக்காட்டு என்றார் திரு ரஹ்மான்.

இந்த இலக்கில் மற்றொரு முயற்சியாக, ரஹ்மான் முதன் முதலில் திரைக்கதை எழுதி, தயாரித்து இசையமைத்துள்ள ‘99 சாங்ஸ்’ திரைப்பட வெளியீடு குறித்த இன்று மெய்நிகர் வழி நடந்த செய்தியாளர் கூட்டத்தில் திரு ரஹ்மான் பேசினார்.

‘சோனி மியூசிக்’ ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர், மலேசிய ஊடகங்கள் பங்குபெற்றன.

‘99 சாங்ஸ்’ படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் ஏப்ரல் 16ஆம் தேதி வெளியீடு காண்கிறது.

புது நடிகர்கள், புது பாடகர்கள், புது கலை உத்திகள் என்ற பல புது அம்சங்களை உள்ளடக்குவதால் படத்தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டது என்று அவர் விளக்கினார்.

“இளங்கன்று பயம் அறியாது என்பதுபோல, வழக்கமான திரைப்பட தயாரிப்பு முறைகள் பற்றி அறியாததால் ஒரு துணிச்சலான உணர்வு வந்தது. திரைப்பட உருவாக்கத்தில் நிறைய சுதந்திரம் இருந்ததால் அதை முறையாக தயாரிக்க காலம் எடுத்தது.

எனினும், திரைப்படத்தின் முன்னோட்ட காணொளியும் பாடல்களும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்கள் நல்லாதரவை அளித்துள்ளனர்,” என்று மகிழ்ச்சி யுடன் கூறினார் திரு ரஹ்மான்.

ஒரு வேறுபட்ட கலை வடிவிற்கு இப்படம் அடித்தளமாக அமையும் என்றும் குறிப்பிட்டார் அவர்.
ரஹ்மானுடன் இணைந்து திரைக்கதையை எழுதியிருக்கும் படத்தின் இயக்குநரான திரு விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

“அனைவரையும் படைப்பில் சமமான பங்காளியாக ஈடுபடுத்த திரு ரஹ்மான் முயற்சி எடுப்பார். கலை வடிவத்தை அச்சமில்லாமல் வெளிப்படுத்த உகந்த சூழலை உருவாக்குவார். அதே நேரத்தில் படைப்பு தரமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்,” என்றார் திரு விஷ்வேஷ்.

சிங்கப்பூருக்கு முதன் முதலாக வந்த அனுபவத்தை நினைவுகூர்ந்த திரு ரஹ்மான் சிங்கப்பூரின் சுத்தம், சுகாதாரத்தைப் பார்த்து “இதுதான் சொர்க்கமா” என்று வியந்துபோனதாகவும் இந்திய கலாசாரம் இனிமேல் எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற தெளிவு அப்போது கிடைத்ததாகவும் கூறினார்.
“அழகு என்பது கடவுளின் ஓர் அம்சம். அழகு என்பது மனித இனத்தின் ஓர் அம்சம்,” என்ற திரு ரஹ்மான், மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் அது பல நிலைகளில் ஆக்கபூர்வமான தாக்கத்தை உண்டாக்கும் என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!