கருணை அடிப்படையில் பயண அனுமதி மே 17 முதல் இருநாட்டு எல்லை கடந்து மக்கள் சென்றுவர சிங்கப்பூர்-மலேசியா ஏற்பாடு

சிங்­கப்­பூர்-மலே­சிய மக்­கள் எல்லை கடந்து சென்று வர மே 17 முதல் கருணை அடிப்­ப­டை­யில் இரு நாடு­களும் அனு­மதி வழங்க இருக்­கின்­றன.

இத்­த­கைய பயண ஏற்­பாடு பற்­றிய விவ­ரங்­கள் பின்­னர் வெளி­யி­டப்­படும். இதன்­படி, கொவிட்-19 பரி­சோ­த­னை­கள், தனி­மைப்­ப­டுத்­திக்கொள்­ளு­தல் போன்ற நிபந்­த­னை­களை மக்­கள் நிறை­வேற்ற வேண்டி இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

மலே­சி­யா­வின் வெளி­யு­றவு அமைச்­சர் ஹிசா­மு­தீன் ஹுசைன் இரண்டு நாள் அதி­கா­ர­பூர்வ பய­ணம் மேற்­கொண்டு சிங்­கப்­பூர் வந்­தி­ருந்­தார். அவ­ரும் சிங்­கப்­பூ­ரின் வெளி­யு­றவு அமைச்­சர் டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ண­னும் சேர்ந்து நேற்று இந்த அறி­விப்பை வெளி­யிட்­டனர்.

உடல்­நிலை மோச­மாக இருக்­கும் உற­வி­ன­ரைப் பார்க்க அல்­லது இறு­திச்­சடங்கு­களில் கலந்­து­கொள்ள வேண்­டிய தேவை இருக்­கும் மக்­க­ளுக்கு இந்­தக் கருணை அடிப்­ப­டை­யி­லான அனு­மதி பொருந்­தும் என்று மலே­சிய அமைச்­சர் தெரி­வித்­தார்.

அதே­வே­ளை­யில், மலே­சி­யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடை­யில் இருந்து வரும் ஆழ்ந்த உறவு கார­ண­மாக இந்த ஏற்­பாடு தேவைப்­ப­டு­கிறது என்று டாக்­டர் விவியன் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் சந்­தித்­த­போது இரு தலை­வர்­களும் இரு நாடு­க­ளுக்கு இடை­யில் இரு தரப்பு விமா­னப் பயண ஏற்­பாடு சாத்­தி­யமா என்­பது பற்றி விவா­தித்­த­னர்.

எதிர்­கா­லத்­தில் எல்லை கடந்து மக்கள் சென்று வர அனு­ம­திக்­கும் வகை­யில் தடுப்­பூசிச் சான்­றி­தழை பரஸ்­ப­ரம் அங்கீ­கரிப்­பது பற்­றி­யும் இரு­வ­ரும் பேசி­னர்.

சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் பிறப்­பிக்­கும் சுகா­தா­ரச் சான்­றி­தழ்­களைத் தொழில்­நுட்ப ரீதி­யில் பரஸ்­ப­ரம் சரி­பார்க்க ஏதுவாக இரு நாட்டு அமைப்­பு­க­ளுக்­கும் இடை­யில் உடன்­பாடு ஏற்­பட்டு இருப்­பதை இந்த இரண்டு அமைச்­சர்­களும் வெளி­யிட்ட கூட்­ட­றிக்கை வர­வேற்­றது.

கொவிட்-19 சூழ­லி­லும் சிங்­கப்­பூர், மலே­சியா இரு தரப்பு உற­வு­களும் ஒத்­து­ழைப்­பும் தொடர்ந்து வலு­வாக இருந்து வரு­வ­தாக கூட்­ட­றிக்­கை­யில் அமைச்­சர் கள் தெரி­வித்­த­னர்.

சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் தங்­களுடைய எல்­லை­களை ஒரு போதும் முற்­றி­லும் மூடவே இல்லை என்று தெரி­வித்த டாக்­டர் பால­கி­ருஷ்­ணன், மருந்து, உணவு, இதர பொருட்­கள் எல்லை வழி­யா­கச் சென்று வர இன்­ன­மும் அனு­மதி வழங்­கப்­ப­டு­வ­தைச் சுட்­டிக்­காட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் குறிப்­பாக சிங்­கப்­பூ­ருக்­கும் ஜோகூ­ருக்கும் இடையே நில­வும் மிக­வும் சிறப்பு வாய்ந்த உறவு கார­ண­மாக அத்­த­கைய அனு­ம­தி­கள் வழங்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் கருணை அடிப்­ப­டை­யில் மக்­களை அனு­ம­திப்­பது போன்ற சிறப்பு ஏற்­பா­டு­கள் இடம்­பெ­று­வதற்­கும் இதுவே கார­ணம் என்­றும் அவர் கூறி­னார்.

கொவிட்-19 தொற்று இரு நாடு­களுக்கும் தொடர்ந்து சவா­லாக இருந்து வந்­தா­லும் சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் தொடர்ந்து அணுக்­க­மா­கச் சேர்ந்து பாடு­படும்; ஒன்று மற்­றொன்­றுக்கு ஆத­ரவு அளிக்­கும்; இரு நாட்டு மக்­க­ளுக்கு இடைப்­பட்ட உறவு பாது­காக்­கப்­பட்டு பேணி வளர்க்­கப்­படும் என்­றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்­டர் விவியன் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!