ஆட்சி மாற்றம்; தமிழக முதல்வராகும் திமுக தலைவர் ஸ்டாலின்

இந்­தி­யா­வின் தென்­கோடி மாநி­ல­மான தமிழ்­நாட்­டில் சென்ற மாதம் நடந்து முடிந்த 16வது சட்­ட­மன்­றத் தேர்­தல் மிக முக்­கி­ய­மான பல முடி­வு­களை ஏற்­ப­டுத்தி தந்­துள்­ளது.

மாநி­லத்­தில் 10 ஆண்டு காலம் பதவி வகித்த அதி­முக ஆட்­சிக்கு அந்­தத் தேர்­த­லின் மூலம் முடிவு ஏற்­பட்டு திமுக தலை­வர் மு க ஸ்டா­லின் தலை­மை­யில் புதிய ஆட்சி அரி­யணை ஏறு­வ­தற்­கான வாய்ப்பு கிட்டி இருப்­ப­தாக நேற்று இரவு வெளி­யான முடி­வு­கள் தெரி­வித்­தன.

"அரை நூற்­றாண்டு காலம் திமுக­வுக்­குத் தலைமை வகித்த முன்னாள் முதல்வர் மு. கருணா­நி­தி­யின் புதல்­வரான ஸ்டா­லி­னும் ஏறத்­தாழ 50 ஆண்டு காலம் அர­சி­ய­லில் ஈடு­பட்டு வந்­தி­ருக்­கி­றார்.

"அதன் ஒட்­டு­மொத்த விளை­வாக மாநி­லத்­தின் முதல்­வர் பொறுப்பு இப்­போது அவ­ருக்­குக் கைகூடி வந்­தி­ருக்­கிறது என்று அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கி­றார்­கள்.

கடந்த ஏப்­ரல் 6ஆம் தேதி நடந்த தமி­ழக சட்­ட­மன்­றத் தேர்­தல் வாக்கு எண்­ணிக்கை நேற்று 75 இடங்­களில் காலை 8 மணிக்குத் தொடங்­கி­யது. தொடக்­கம் முதலே திமுக கூட்­டணி வேட்­பா­ளர்­கள் முன்­னிலை வகிக்­கத் தொடங்­கியதாக ஊட­கத் தக­வல்­கள் தெரிவித்­தன.

சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று இரவு 9.30 மணி வாக்­கில் மொத்தம் 234 தொகுதிகளில் திமுக கூட்­டணி 156 தொகு­தி­களில் முன்­ன­ணி­யில் இருந்­தது. திமுக மட்­டும் ஆட்சி அமைக்­கத் தேவை­யான 118 இடங்­க­ளைக் கைப்­பற்­றி­வி­டும் அறி­கு­றிகள் தெரிந்­தன.

எதிர்த்து மோதிய அதி­முக அணி ஏறத்­தாழ 77 இடங்­களில் முன்­னணி வகித்­த­தாக நேற்று இரவு தக­வல்­கள் தெரி­வித்­தன.

நடந்து முடிந்த தேர்­த­லில் 62.8 மில்­லி­யன் பேர் வாக்­க­ளிக்­கத் தகுதி பெற்­றி­ருந்­த­னர். மொத்­தம் 3,998 வேட்­பா­ளர்­கள் களத்­தில் குதித்­தி­ருந்­த­னர்.

இந்த சட்­ட­மன்­றத் தேர்­தல் பல புது­மை­க­ளைக் கண்­டது. திரா­விட இயக்­கத்­தின் இமா­ல­யத் தலை­வர்­க­ளான கரு­ணா­நிதி, ஜெய­ல­லிதா மறை­வுக்­குப் பிறகு நடந்த முதல் தேர்­தல் இது­வா­கும்.

இந்­தத் தேர்­த­லில் ஏறத்­தாழ 73 விழுக்­காட்­டி­னர் அதா­வது 45.78 மில்­லி­யன் பேர் வாக்­க­ளித்­த­னர். அவர்­களில் 23.17 மில்­லி­யன் பேர் பெண்­கள். 22.6 மில்­லி­யன் பேர் ஆண்­கள். தமிழ்­நாட்­டில் இது­வரை நடந்­துள்ள சட்­ட­மன்­றத் தேர்­தல்­களில் 2021 தேர்­தல்­தான் ஆண்­க­ளை­விட மிக அதி­க­மான பெண்­கள் (5.69 லட்­சம் பேர்) வாக்­க­ளித்­த­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அதி­முக, திமுக அணிகளுடன் அம­முக, மநீம, நாம் தமி­ழர் கட்சி ஆகிய கட்­சி­களும் வேட்­பா­ளர்­களை இறக்­கி­ய­தால் ஐந்­து­முனைப் போட்­டி­யும் இருந்­தது. என்­றா­லும் மநீம தலை­வர் கமல்­ஹா­சன் மட்­டுமே சட்­ட­மன்­றத்­திற்­குச் செல்­வார் என்­பதற்­கான அறி­கு­றி­கள் நேற்று இரவு இலே­சா­கத் தெரிந்­தன.

கொவிட்-19 கட்­டுப்­பாடு கள் கார­ண­மாக வாக்கு எண்­ணிக்கை தாம­த­ம­டைந்­த­தால் முடி­வு­கள் தாம­த­மா­கவே வெளி­வந்­தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!