அமைச்சர் ஓங்: தொற்று மட்டுப்பட்டுள்ள நாடுகளுடன் கூடிய எல்லைகளை அரசுகள் திறந்தால் சாத்தியம் 2021ல் சில விமானப் பயண வாய்ப்புகள்

கொவிட்-19 கிரு­மித்­தொற்று குறைந்து இருக்­கும் வட்­டா­ரங்­களுடன் கூடிய தங்­கள் எல்­லை­களை எச்­ச­ரிக்­கை­யு­டன் அர­சாங்­கங்­கள் திறந்­து­வி­டும் பட்­சத்­தில் இந்த ஆண்­டில் பாது­காப்­பு­டன் கூடிய சில விமா­னப் பய­ணங்­கள் தொடங்­கும் வாய்ப்புள்ளதாக போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்துள்ளார்.

ஆசிய பசி­பிக் பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு அமைப்­பின் (ஏபெக்) வர்த்தக ஆலோ­சனை மன்­றம் ஏற்­பாடு செய்த எல்­லை­கள் திறப்பு பற்­றிய மெய்­நி­கர் கலந்­து­ரை­யா­ட­லில் பேசிய அவர், தொற்று அதி­க­மாக இருக்­கும் இடங்­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக வேண்டும் என்­றும் தெரி­வித்­தார்.

தடுப்­பூசி பலன் தரு­கிறது என்­பதை வலி­யு­றுத்­திய அவர், இந்த ஆண்­டில் விமா­னத் தொழில்­துறை வேக­மாக மீட்­சி­ய­டைந்­து­வி­டும் சாத்­தி­யம் இல்லை என்­றா­லும் அந்­தத் துறை மீட்­சி­ய­டை­யத் தொடங்­கும் வாய்ப்பு இருப்­ப­தா­கக் கூறி­னார்.

புதிய உரு­மா­றிய கொவிட்-19 கிரு­மித்­தொற்று மிரட்­டலை எதிர்­நோக்­கும் நாடு­க­ளு­டன் எல்லை திறப்பு பற்றி பேசு­வது இப்­போது பொருத்­த­மா­ன­தாக இருக்­காது என்­பதை அமைச்­சர் திரு ஓங் ஒப்­புக்­கொண்­டார்.

இருந்­தா­லும் எல்­லை­க­ளைத் திறப்­பது என்­பது நாடு­களை, நகர்­களை, தொழில்­களை, மக்­களை இணைப்­ப­தற்கு அவ­சி­ய­மா­னது என்­பதை அவர் வலி­யு­றுத்­தி­னார். இதுவே மானிட இனத்­தின் விருப்­பம் என்­றும் அவர் கூறி­னார்.

விமான மையங்­க­ளா­க­வும் அனைத்­து­லக நிதிச் சேவை­மையங்­க­ளா­க­வும் இருந்து வரும் சிங்­கப்­பூ­ரும் ஹாங்­காங்­கும் அந்­தப் பணி­க­ளைத் தொடர்ந்து ஆற்றி வர வேண்­டு­மா­னால் அவற்­றின் விமான நிலை­யங்­களும் விமான நிறு­வ­னங்­களும் தொடர்ந்து செயல்­பட வேண்­டிய தேவை இருப்­ப­தை அமைச்சர் சுட்­டி­னார்.

ஹாங்­காங்­கும் சிங்­கப்­பூ­ரும் மே 26ல் இரு தரப்பு பயண ஏற்­பாடு தொடங்­கும் என்று அறி­வித்து உள்­ளன.

எல்­லை­க­ளைப் பாது­காப்­பா­கத் திறந்­து­வி­டு­வ­தற்­குத் தேவைப்­படும் நான்கு முக்­கிய நட­வ­டிக்­கை­களை­யும் திரு ஓங் கோடி காட்­டி­னார்.

கொவிட்-19 கிரு­மியை வெற்றி ­க­ர­மான முறை­யில் கட்­டுப்­படுத்தி இருக்­கும் நாடு­க­ளுக்கு மட்­டும் எல்­லை­க­ளைத் திறப்­பது, கொரோனா பரி­சோ­த­னை­களை நடத்­து­வது, தடுப்­பூசி, பய­ணி­கள் மூலம் கிரு­மி பர­வு­வ­தைத் தடுக்­கும் பரஸ்­பர பாது­காப்பு ஏற்­பா­டு­கள் ஆகி­யவை அந்த நான்கு நட­வ­டிக்­கை­கள் என்றாரவர்.

கலந்­து­ரை­யா­ட­ல் நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய ஹாங்­காங்­கின் வர்த்­த­கப் பொரு­ளி­யல் மேம்­பாட்­டுத் துறை பிர­மு­கர் எட்­வர்ட் யாவ், எல்­லை­க­ளைத் திறப்­ப­தில் அர­சாங்­கங்­கள் அறி­வி­ய­லுக்கு முக்­கி­யத்­து­வம் தர வேண்­டும் என்று குறிப்­பிட்­டார்.

"தலை­சி­றந்த ஒன்­றுக்­காக திட்­ட­மிட வேண்­டும். மோச­மான விளை­வு­கள் ஏற்­ப­ட­லாம் என்று எதிர்­பார்த்து அதற்கு தயா­ரா­க­வும் இருக்க வேண்­டும்.

"பிரச்­சி­னை­கள் வரும்­போது ஊக்­கம் குறைந்து போய்­வி­டக் கூடாது. அனு­ப­வங்­களில் இருந்து கற்­றுக்­கொண்டு முன்னேற வேண்­டும்," என்று திரு யாவ் வலி யுறுத்திக் கூறி­னார்.

கலந்­து­ரை­யா­ட­லுக்­குப் பிறகு குழு விவா­திப்­பு­கள் இடம்­பெற்­றன.

பல்­வேறு எல்­லை­க­ளுக்கு இடை­யில் முர­ணற்ற பயண நிபந்­த­னை­களை நடை­மு­றைப்­ப­டுத்த ஒன்­றா­கச் சேர்ந்து நாடு­கள் செயல்­பட வேண்­டும் என்று அதில் குரல் எழுப்­பப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!