இந்தியா: 20 மில்லியன் மக்கள் பாதிப்பு

இந்­தி­யா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்குத் தொடர்ந்து 12 நாட்­க­ளாக நாள்­தோ­றும் 300,000 பேருக்­கும் அதிக மக்­கள் பாதிக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள்.

அந்த நாட்­டில் தொற்று கார­ண­மாக பாதிக்கப்பட்ட மொத்த மக்­களின் எண்­ணிக்கை 20 மில்­லி­யனைத் தொட்­டு­விட்­டது. 24 மணி நேரத்­தில் 3,417 பேர் மாண்­டு­விட்­ட­தாக நேற்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். மொத்­தம் 218,959 பேர் மாண்டு இருக்­கி­றார்­கள்.

மருத்­து­வ­ம­னை­களில் படுக்­கை­கள் இல்லை, ஆக்­சி­ஜன் இல்லை, மாண்­டு­போ­ன­வர்­க­ளின் உட­லுக்கு எரி­யூட்ட முடி­ய­வில்லை. சவக்­கிடங்குகளில் இட­மில்லை என்று நாட்­டின் பல பகு­தி­களில் இருந்­தும் நாள்­தோ­றும் அபயக்குரலைக் கேட்கமுடிவதாக ஊடகங்கள் தெரி­விக்­கின்றன.

இந்­நி­லை­யில், குறைந்­த­பட்­சம் 11 மாநி­லங்­க­ளி­லும் யூனி­யன் பிர­தே­சங்­க­ளி­லும் பல்­வேறு நிலை­களில் பல்­வேறு கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்டு உள்ளன.

தலை­ந­கர் டெல்லி, மகா­ராஷ்­டிரா, கர்­நா­டகா, மேற்கு வங்­கா­ளம் ஆகி­ய­வற்­று­டன் இப்­போது ஒடி­சா­வில் இரண்டுவார கால முடக்­கம் அறி­விக்­கப்­பட்டுள்­ளது.

உத்­த­ரப் பிர­தே­சம், அசாம், தெலுங்­கானா, ஆந்­தி­ரப் பிர­தே­சம், ராஜஸ்­தான் ஆகிய மாநி­லங்­களில் இரவு நேர அல்­லது வார முடிவு முடக்­கம் நடப்பில் உள்ளது.

நாட­ளா­வி­ய­ முழு முடக்­கத்தை அமல்­ப­டுத்­தும்­படி மத்­திய அர­சுக்கு கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு ஆலோ­சனை கூறி இருக்­கிறது.

என்­றா­லும் பொரு­ளி­யல் பாதிப்பு­க­ளைக் கருத்­தில்­கொண்டு நாட­ளா­விய முடக்­கத்தை அமல்­படுத்த மத்­திய அர­சு தயங்­கு­கிறது.

இவ்­வே­ளை­யில், அமெ­ரிக்­கா­வின் ஃபைசர் நிறு­வ­னம் தனது தடுப்­பூ­சிக்கு வேக­மாக அனு­மதி அளிக்­கும்­படி கேட்டு இந்­திய அர­சுடன் பேச்சு நடத்தி வரு­வ­தாக ஃபைசர் அதி­காரி ஆல்­பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!