விக்டோரியா கல்லூரி மாணவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை

விக்­டோ­ரியா தொடக்­கக் கல்­லூ­ரி­யில் கொவிட்-19 பரிசோதனை நடத்தும் பணி நேற்றுத் தொடங்­கியது. ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யாக இருந்­தா­லும் மாண­வர்­கள் சோதனை செய்­து­கொள்­வ­தற்­காக காலையில் கல்­லூ­ரிக்­கு வந்தனர்.

அனை­வ­ரும் கல்லூரிச்­ சீ­ரு­டை­யில் இருந்­த­னர். பிர­தான நுழைவு வாயில் வழி­யாக வந்த மாண­வர்­கள் பரிசோதனை முடிந்த கையோடு பக்­க­வாட்­டில் இருந்த வாயில் வழி­யாக வெளி­யே­றி­னர்.

அந்­தக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒரு­வ­ருக்­கு கடந்த வெள்­ளிக்­கி­ழமை தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தால் அவ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­பட்ட மாண­வர்­க­ளி­டம் கொவிட்-19 சோதனை நடத்­தப்­படு­கிறது.

அந்த மாண­விக்குப் புதன்­கிழமை பின்­னே­ரத்­தில் திடீர் உடல் நலக் குறைவு ஏற்­பட்­டது. மறு­நாள் அவர் மருத்­து­வ­ரி­டம் சென்­றார். அதன் பிறகு அவ­ருக்­குத் தொற்று இருப்­பது சோத­னை­யில் தெரிய வந்­தது. அதை­ய­டுத்து கல்­லூ­ரி­யில் கிரு­மிப்­ ப­ர­வ­லைத் தடுக்கும் நோக்­கத்­தோடு அடுத்­த­டுத்து அதி­ரடி நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டன.

மாண­வி­யு­டன் தொடர்­பில் இருந்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­பட்ட 95 மாண­வர்­களும் எட்டு ஊழி­யர்­களும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக கல்வி அமைச்சு சனிக்­கி­ழ­மை­யன்று தெரி­வித்­தது. மாண­வி எப்­படி கிரு­மித் தொற்­றுக்கு ஆளா­னார் என்­பது தெரி­ய­வில்லை.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ளர்­கள் நேற்று காலை 11.00 மணி­ய­ள­வில் கல்­லூ­ரிக்­குச் சென்­ற­போது வெளியே பெரிய அள­வில் வரி­சையோ கூட்­டமோ காணப்­ப­ட­வில்லை. ஆனால் சில மாண­வர்­கள் தங்­க­ளு­டைய நண்­பர்­க­ளுக்­கா­கக் காத்­தி­ருந்­த­னர்.

கல்­லூரி வளா­கத்­திற்கு வெளியே நிறுத்­தப்­பட்­டி­ருந்த காரில் பெற்­றோ­ர், பரிசோதனை முடிந்து திரும்­பும் பிள்­ளை­க­ளுக்­கா­கக் காத்­தி­ருந்­த­னர். பள்­ளி­யின் வர­வேற்பு மண்­ட­பத்­தில் பரிசோதனை நடத்தப்பட்டது. காத்­தி­ருக்க வேண்­டிய அவ­சி­யம் இல்­லா­மல் சுமுக­மாக பரிசோத­னைகள் நடத்­தப்­பட்­ட­தாக மாண­வர்­கள் சிலர் கூறி­னர்.

முன்­னெச்­ச­ரிக்கையாக இன்று திங்­கட்­கி­ழ­மைக்­குள் மாண­வர்­கள், ஊழி­யர்­கள், வரு­கை­யா­ளர்­கள் உட்­பட 2,000 பேருக்கு மேல் கொவிட்-19 பரிசோதனை நடத்­தப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பரிசோதனை முடி­யும் வரை வீட்­டில் இருந்து கற்­கும் நடை­முறை மேற்­கொள்­ளப்­படும் என்று கல்வி அமைச்சு கூறி­யுள்­ளது.

இதனிடையே, சக மாண­வி ஒரு­வ­ருக்குத் தொற்று ஏற்­பட்­டது சில மாண­வர்­க­ளுக்கு வியப்பை ஏற்­ப­டுத்­தி­யது. இங்கு தொற்­றுச்­சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்ள வேளை­யில் மாண­வி ஒரு­வ­ரும் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தால் சில மாண­வர்­கள் கவலை அடைந்­துள்­ள­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!