கோ பூன் வான்- புதிய நிறுவனத்தின் தலைவர்

சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் தன்­னு­டைய ஊடக தொழில்­க­ளைச் சீர­மைத்து புதிய லாப­நோக்­கற்ற நிறு­வ­ன­த்தை அமைக்கிறது. அந்தப் புதிய நிறு­வ­னத்­திற்கு முன்­னாள் அமைச்­சர் கோ பூன் வான் தலை­மைப் பொறுப்பை ஏற்­கி­றார்.

அந்­தப் பொறுப்­புக்குத் திரு கோ சரி­யா­ன­வர் என்று எஸ்­பி­எச் நிறு­வ­னத்­தின் இப்­போ­தைய நிர்­வாக பங்­கு­தா­ரர்­கள் ஒப்­புக்­கொண்டு இருப்­ப­தாக தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் அறி­வித்­தார்.

புதிய லாப­நோக்­கற்ற நிறு­வ­னம் ஓர் உத்­த­ர­வாத நிறு­வ­ன­மா­கச் செயல்­படும். எஸ்­பி­எச் நிறு­வ­னத்­தின் ஊட­கத் தொழில்­கள் அந்­தப் புதிய நிறு­வ­னத்­தின்கீழ் வரும்.

எஸ்­பி­எச் நிறு­வ­னத்­தின் ஊடகத் தொழில்­க­ளின் சீர­மைப்பு, அதன் பங்­கு­தா­ரர்­க­ளின் அங்­கீ­கா­ரத்­துக்கு உட்­பட்­டது.

பல்­வேறு உயர் பத­வி­களில் 25க்கும் அதிக ஆண்­டு­கள் பொதுச் சேவை அனு­ப­வத்­து­டன் கூடிய திரு கோ, அந்தப் புதிய நிறு­வ­னத்­திற்கு வலு­வான உத்­திபூர்வ தலைமைத் துவத்தை வழங்­கு­வார் என்று அமைச்­சர் திரு ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

புதிய நிறு­வ­னத்­துக்குத் தலை­வர் பொறுப்பை ஏற்க திரு கோ ஒப்­புக்­கொண்டு இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

திரு கோ 19 ஆண்­டு­கால சேவைக்­குப் பிறகு அர­சி­ய­லில் இருந்து 2020ல் ஓய்வு பெற்­றார்.

கடை­சி­யாக அவர் உள்­கட்­ட­மைப்­புக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரா­க­வும் போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ரா­க­வும் பணி­யாற்­றி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!