2022 இறுதிக்குள் உலகம் முழுமைக்கும் தடுப்பூசி

பணக்கார 'ஜி7' நாடுகளுக்கு பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறைகூவல்

அடுத்த ஆண்­டுக்­குள் உல­கம் முழுதும் உள்ள மக்­க­ளுக்கு கொவிட்-19 தடுப்­பூசி போட 'ஜி7' குழு­வில் இடம்­பெற்­றுள்ள பணக்­கார நாடு­கள் கடப்­பாடு கொள்ள வேண்­டும் என்று பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் அறை­கூ­வல் விடுத்­துள்­ளார்.

ஈராண்­டு­களில் முதன்­மு­றை­யாக ஜி7 நாடு­க­ளின் தலை­வர்­கள் கலந்­து­கொள்­ளும் உச்­ச­நிலை மாநாடு அடுத்த வாரம் பிரிட்­ட­னில் இடம்­பெ­ற­வி­ருக்­கிறது. அப்­போது, உல­கம் முழு­மைக்­கும் தடுப்­பூசி எனும் குறிக்­கோளை அடைய ஜி7 நாடு­க­ளின் தலை­வர்­க­ளி­டம் திரு ஜான்­சன் வலி­யு­றுத்த இருக்­கி­றார்.

"2022ஆம் ஆண்டு இறு­திக்­குள் உலக மக்­கள் அனை­வர்க்­கும் கொரோனா தடுப்­பூசி போடு­வது என்­பது மருத்­துவ வர­லாற்­றில் ஆகப் பெரிய சாத­னை­யாக இருக்­கும்," என்று திரு ஜான்சன் கூறி­யுள்­ளார்.

தென்­மேற்கு இங்­கி­லாந்­தில் உள்ள கார்ன்­வா­லில் வரும் வெள்­ளிக்­கி­ழமை தொடங்­க­வுள்ள மூன்று நாள் உச்­ச­நிலை மாநாட்­டில் பிரிட்­ட­னு­டன் ஜெர்­மனி, பிரான்ஸ், அமெ­ரிக்கா, இத்­தாலி, ஜப்­பான், ஐரோப்­பிய ஒன்­றி­யம் ஆகி­ய­வற்­றின் தலை­வர்­கள் பங்­கேற்க இருக்­கின்­ற­னர்.

கடந்த ஜன­வ­ரி­யில் அமெ­ரிக்க அதி­ப­ரா­கப் பொறுப்­பேற்ற பிறகு திரு ஜோ பைடன் மேற்­கொள்­ளும் முதல் வெளி­நாட்­டுப் பய­ண­மாக இது அமை­யும்.

ஜி7 உச்­ச­நிலை மாநாட்­டின்­போது, இரண்டு பில்­லி­யன் பவுண்டு (S$3.8 பி.) மதிப்­பி­லான தடுப்­பூ­சி­க­ளை­யும் அடுத்த ஆண்­டில் இன்­னும் அதி­க­மா­க­வும் நன்­கொ­டை­யாக வழங்க திரு ஜான்­சன் உறு­தி­யேற்­க­வுள்­ளார்.

"உல­கம் முழு­வ­தும் கொரோ­னாவை வேர­றுக்க எங்­க­ளால் ஆன அனைத்­தை­யும் செய்ய வேண்­டிய பொறுப்பு எங்­க­ளுக்கு இருக்­கிறது," என்று டுவிட்­டர் பக்­கத்­தில் அவர் பதி­விட்­டுள்­ளார்.

முன்­ன­தாக, கடந்த வாரம் லண்­ட­னில் நடந்த ஜி7 நிதி­ய­மைச்­சர்­கள் கூட்­டத்­தின்­போது, தடுப்­பூ­சி­க­ளுக்­கான காப்­பு­ரி­மை­கள் அகற்­றப்­பட வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யு­டன் இருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அமெ­ரிக்க நிதி­ய­மைச்­சர் ஜேனட் யெலன், தடுப்பூசிக் குவிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!