ஐந்தில் ஒரு வெளிநாட்டு ஊழியர் தடுப்பூசியில் முழுமை

சிங்­கப்­பூ­ரில் உள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட விவ­ரம் மனி­த­வள அமைச்சு சார்­பில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. தங்­கு­வி­டு­தி­களில் வசிக்­கும் ஐந்­தில் ஓர் ஊழி­யர் அல்­லது 55,000 ஊழி­யர்­கள் இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­டுள்­ள­தாக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். மே 31 வரை­யி­லான நில­வ­ரம் இது.

இதர 67,000 ஊழி­யர்­கள் முதல் தவணை தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

ஆறு வாரம் முதல் எட்டு வாரம் வரை­யி­லான கால­ இடைவெளியில் இவர்­கள் தங்­க­ளது இரண்­டா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வர் என அந்தப் பேச்சாளர் கூறி­னார்.

'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தாள் எழுப்­பிய வினாக்­

க­ளுக்கு நேற்று அவர் பதி­ல­ளித்­தார்.

"தங்­கு­வி­டு­தி­க­ளைச் சேர்ந்த மேலும் அதி­க­மான வெளி­நாட்டு ஊழி­யர்­கள் முழுமையாகத் தடுப்­பூ­சி போட்­டுக்­கொண்ட பின்­ன­ரும் கொவிட்-19 நில­வ­ரத்­தில் முன்­னேற்­றம் ஏற்­பட்ட பின்­ன­ரும் அவர்­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­கள் படிப்­ப­டி­யா­கத் தளர்த்­தப்­படும்," என்­றார் அவர்.

சற்று முன்­னோக்­கிப் பார்க்­கை­யில், மே மாதம் 2ஆம் தேதி நில­வ­ரப்­படி 42,000 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­ட­னர்.

அப்­போது இரண்­டாம் மனி­த­வள அமைச்­ச­ராக இருந்த டான் சீ லெங், சிலேத்­தார் தடுப்­பூசி நிலை­யத்­திற்கு வரு­கை­ய­ளித்­த­போது இவ்விவ­ரத்தை வெளி­யிட்டு இருந்­தார்.

கொவிட்-19 மீதான நிபு­ணர் குழு­வும் சுகா­தார அமைச்­சும் அளித்த பரிந்­து­ரைக்கு ஏற்ப இரண்­டா­வது தடுப்­பூ­சிக்­கான கால இடை­வெளி ஆறு முதல் எட்டு வாரம் வரை நிர்­ண­யிக்­கப்­பட்­டது என்று அமைச்­சின் பேச்­சா­ளர் நேற்று கூறி­னார்.

இந்தக் கால இடை­வெளி இதற்கு முன்­னர் மூன்று வாரம் முதல் நான்கு வாரம் வரை இருந்­தது.

மே 19ஆம் தேதி முதல் தடுப்­பூ­சிக்­குப் பதிவு செய்­த­வர்­க­ளின் கால இடை­வெளி நீட்­டிக்­கப்­படும் என கடந்த மாதம் அதி­கா­ரி­கள் அறி­வித்­த­னர்.

சிங்­கப்­பூ­ரின் மக்­கள்­தொ­கை­யில் சுமார் 30 விழுக்­காட்­டி­னர் இது­வரை இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்டுள்­ள­னர். 39 மற்­றும் அதற்­குக் குறைந்த வய­து­டை­ய­வர்­க­ளுக்­கான தடுப்­பூசி பதிவு இம்­மா­தம் நடுப்­ப­கு­தி­யில் தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் கிரு­மிப் பர­வல் நில­வ­ரம் கடந்த ஆண்டு வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் ஆக மோச­மான நிலையை எட்­டி­யது. அன்­றா­டம் நூற்­றுக்­க­ணக்­கான தொற்­றுச் சம்­ப­வங்­கள் அவ்­வி­டு­தி­களில் பதிவு செய்­யப்­பட்­டன.

கடந்த ஆண்டு ஏப்­ர­லில் அந்த எண்­ணிக்கை உச்­சத்­தைத் தொட்­டது. பின்­னர் படிப்­ப­டி­யா­கக் குறை­யத் தொடங்­கி­யது.

குறிப்­பாக, கடந்த ஆண்டு அக்­டோ­பர் முதல் ஆகக் குறைந்த எண்­ணிக்கை அல்­லது பூஜ்­யம் என்ற அள­வில் தங்­கு­வி­டு­தி­களில் தொற்று எண்­ணிக்­கை பதி­வாகி வரு­கிறது.

இதுவரை அவ்­வி­டு­தி­களில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை 54,500. பாதிக்­கப்­ப­டாத ஊழி­யர்­

க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது.

இவர்­க­ளுக்கு தடுப்­பூசி போட்டு முடிப்­ப­தும் வழக்­க­மாக நடத்­தப்­பட்டு வரும் கிரு­மித்­தொற்று பரி­சோ­த­னை­களும் கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ராக தங்­கு­வி­டு­தி­களை மீட்­பதில் முக்­கிய பங்கு வகிப்­ப­தாக பேச்­சா­ளர் மேலும் குறிப்­பிட்­டார்.

இந்த வழக்­க­மான பரி­சோ­த­னை­க­ளுக்கு இடை­யில் விரை­வுப் பரி­சோ­த­னை­களும் மேற்­கொள்­ளப்பட்டு வரு­கின்­றன.

இது­போன்று அடிக்­கடி பல­வி­த­மான பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­வது புதிய தொற்­றை­யும் அது வேக­மா­கப் பர­வும் சாத்­தி­யத்­தை­யும் அடை­யா­ளம் காணப் பெரி­தும் உத­வும் என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!