தடுப்பூசி: ஊழியரைக் கட்டாயப்படுத்தக்கூடாது

தொற்று அபாயம் அதிகமுள்ள பணியிடச் சூழலில் நிறுவனக் கொள்கையின்படி ஒரு தேவையாக வைத்துக்கொள்ளலாம்

பணி­யா­ளர்­களை கொவிட்-19 தடுப்­பூசி போடச் சொல்லி நிறு­வனங்­கள் கட்­டா­யப்­ப­டுத்­தக்­கூடாது. ஆயி­னும், நிறு­வ­னக் கொள்­கை­யின்படி, தொற்று பர­வும் அபா­யம் அதி­க­மாக உள்ள வேலை­யி­டச் சூழ­லில் பணி­பு­ரி­வோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளச் செய்­வதை ஒரு தேவை­யாக வைத்­துக்­கொள்­ள­லாம்.

புதி­தாக ஆளெ­டுக்­கும்­போது அல்­லது ஆட்­சேர்ப்பு விளம்­ப­ரங்­களின்­போது தடுப்­பூசி போடுவதை ஒரு தேவையாக நிறு­வ­னங்­கள் அறி­விக்­க­லாம். ஆனால், தடுப்­பூசி போட்டுக்­கொள்ள மறுப்­ப­தைக் கார­ணம் காட்டி இப்­போ­தைய ஊழி­யர்­களை வேலை­யிலிருந்து நீக்க முடி­யாது.

மனி­த­வள அமைச்சு, தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ், சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் கூட்­ட­மைப்பு ஆகிய முத்­த­ரப்­புப் பங்­காளி­கள் நேற்று வெளி­யிட்ட ஆலோ­ச­னைக் குறிப்­பில் இந்த வழி­காட்டி நெறி­மு­றை­கள் இடம்­பெற்­றுள்­ளன.

ஊழி­யர்­க­ளைத் தடுப்­பூசி போட நிறு­வ­னங்­கள் கட்­டா­யப்­ப­டுத்­தக்­கூ­டாது என்­ற­போ­தும், மருத்­துவ ரீதி­யில் தகு­தி­யுள்ள ஊழி­யர்­களைத் தடுப்­பூசி போட ஊக்­கு­விக்­க­வும் அதற்கு வழி­வகை செய்­ய­வும் வேண்­டும்.

அத்­து­டன், தொழில் சார்ந்த கார­ணங்­க­ளுக்­காக, தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னரா இல்­லையா எனத் தங்­கள் ஊழி­யர்­க­ளி­டம் நிறு­வ­னங்­கள் கேட்­க­லாம். ஆயி­னும், தடுப்­பூசி போட மறுப்­போ­ரைத் தண்­டிக்­கக்­கூ­டாது.

தொற்று அபா­யம் அதி­க­முள்ள வேலை­யி­டச் சூழ­லில் பணி­பு­ரி­வோர்க்­குத் தடுப்­பூ­சி­யை ஒரு தேவையாக்க விரும்­பும் நிறு­வ­னங்­கள், தடுப்­பூசி போட மறுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கா­கப் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுக்­க­லாம்.

தொற்று அபா­யம் குறை­வாக உள்ள வேறு பணிகளில் அவர்­களை அமர்த்­த­லாம்.

ஆனால், நிறு­வ­னத்­தில் மறு­பணி­ய­மர்த்­தல் தொடர்­பி­லான கொள்­கை­கள் நடப்­பில் இல்­லாத பட்­சத்­தில், மறு­பணி­ய­மர்த்­தல் தொடர்­பான விதி­மு­றை­க­ளுக்­கும் நிபந்­த­னை­க­ளுக்­கும் இரண்டு­ தரப்­பி­ன­ரும் உடன்­பட வேண்­டும்.

ஒத்த வேலை­யி­டச் சூழ­லில் பணி­பு­ரி­வோ­ரில், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத ஊழி­யர்­க­ளுக்­கான பரி­சோ­தனை அல்­லது இல்­லத் தனிமை உத்­த­ர­வின்­கீழ் தங்­கு­மிடச் செலவு போன்ற கொவிட்-19 சார்ந்த செல­வு­கள், தடுப்­பூசி போட்ட ஊழி­யர்­களுக்கு ஆகும் செல­வைவிட கூடு­த­லாக இருப்­பின் நிறு­வ­னங்­கள் அவற்றை வசூ­லிக்­க­லாம்.

அதனை ஊதி­யத்­தி­லி­ருந்து பிடித்­தம் செய்­ய­லாம் அல்­லது உரிய சேவை வழங்­கு­ந­ரி­டம் நேரடி­யா­கச் செலுத்­தும்­படி ஊழி­யர்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­ப­ட­லாம்.

மேலும், தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஊழி­யர்­க­ளுக்­கும் போட்­டுக்­கொள்­ளாத ஊழி­யர்­க­ளுக்­கும் வெவ்­வே­றான விடு­மு­றைக் கொள்­கையை நிறு­வ­னங்­கள் கடைப்­பிடிக்­க­லாம். அதா­வது, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத ஊழி­யர்­கள் வீட்­டில் தங்­கும் உத்­த­ரவை நிறை­வேற்ற வேண்­டி­யி­ருந்­தால், அந்­தக் கால­கட்­டத்­தைச் சம்­ப­ள­மில்லா விடுப்பு நாளா­கக் கணக்­கி­ட­லாம்.

எந்­தச் சூழ­லி­லும், தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள மறுக்­கும் ஊழி­யர்­க­ளைப் பணி­நீக்­கம் செய்­வதோ அல்­லது பணி­யில் இருந்து நீக்கு­வ­தாக மிரட்­டு­வதோ கூடாது என்று நிறு­வ­னங்­களை முத்­த­ரப்­புப் பங்­கா­ளி­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

அப்­படி ஏதே­னும் புகார் வந்­தால் மனி­த­வள அமைச்சு அது குறித்து விசா­ரிக்­கும் என்று சுகா­தார, மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன் தெரி­வித்­துள்­ளார்.

தடுப்­பூ­சியை ஒரு தேவை­யாக்­கும் நிறு­வ­னங்­கள், தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஊழி­யர்­கள் உட­ன­டி­யாக ஏதே­னும் கடு­மை­யான பக்­க­வி­ளை­வு­க­ளால் பாதிக்­கப்­பட்­டால், அவர்­கள் அதி­லி­ருந்து மீளும் வித­மாக ஊதி­யத்­து­டன் கூடு­தல் விடுப்பு வழங்க வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!