12ஆம் தேதி முதல் ஐவர் சேர்ந்து உண்ண அனுமதி

வரும் திங்­கட்­கி­ழமை 12ஆம் தேதி­யில் இருந்து உண­வ­கங்­களில் அதி­க­பட்­சம் ஐவர் ஒரு குழுவாகச் சேர்ந்து உண்ண அனு­ம­திக்­கப்­படுவர்.

கொவிட்-19 பர­வல் தணிந்து வரு­வதா­லும் அதி­க­மான குடி­யி­ருப்­பா­ளர்­கள் தடுப்­பூசி போட்டு வரு­வ­தா­லும் இந்­தத் தளர்வு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த புதன்­கி­ழ­மைக்­குள் மக்­கள்­தொ­கை­யில் மூன்­றில் இரு பகு­தி­யி­னர் குறைந்­தது ஒரு தடுப்­பூ­சி­யே­னும் போட்­டுக்­கொண்­டி­ருப்­பர்.

அந்த இலக்கு எட்­டப்­பட்­ட­தும், கிரு­மிப் பர­வல் நில­வ­ரம் சீராக இருக்­கும் பட்­சத்­தில் கட்­டுப்­பா­டு­கள் மேலும் தளர்த்­தப்­ப­ட­லாம். எடுத்­துக்­காட்­டாக, சமூக ஒன்­று­கூ­டல்­களில் அதி­க­பட்­சம் எட்­டுப் பேர் இடம்­பெ­றும் வகை­யில் கட்­டுப்­பாடு தளர்த்­தப்­ப­ட­லாம்.

இம்­மா­தம் 12ஆம் தேதி­யில் இருந்து, நிகழ்ச்­சிக்கு முந்­திய கொரோனா பரி­சோ­த­னை­யு­டன் 250 பேர்­வரை திரு­மண விழாக்­களில் பங்­கேற்க அனு­ம­திக்­கப்­படு­வர் என்று பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரும் நிதி­ய­மைச்­ச­ரு­மான திரு லாரன்ஸ் வோங் தெரி­வித்­தார்.

உடற்­ப­யிற்­சிக்­கூ­டங்­களும் உடற்­தகுதி நிலை­யங்­களும் இடம்­பெ­றும் 50 பேர்­வரை பங்­கேற்­கும் உள்­ள­ரங்க விளை­யாட்­டு­க­ளை­யும் உடற்­ப­யிற்சி வகுப்­பு­களை­யும் நடத்த முடி­யும்.

பணி­யி­டங்­களில் நடக்­கும் சமூக, கேளிக்கை ஒன்­று­கூ­டல்­களில் அதி­க­பட்­சம் ஐவர் பங்­கேற்­க­லாம் என்­ற­போ­தும் வீட்­டி­லி­ருந்­த­படி வேலை செய்­வது வழக்க­மான நடை­மு­றை­யா­கத் தொட­ரும் என்று நேற்­றைய மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது அமைச்­சர் வோங் சொன்­னார்.

சிங்­கப்­பூ­ரில் தகு­தி­யுள்ள அனை­வர்க்­கும் தடுப்­பூசி வழங்­கப்­பட்டு வரு­கிறது. தடுப்­பூசி போடு­வ­தில் இப்­போ­தைய வேகம் தொடர்ந்­தால், மக்­கள்­தொ­கை­யில் பாதிப் பேர் இம்­மாத இறு­திக்­குள் இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டு­வி­டு­வர் என்று பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ஓங் யி காங் கூறி­னார்.

இப்­போ­தைக்கு, சிங்­கப்­பூர் மக்­கள்­தொ­கை­யில் பத்­தில் நால்­வர் இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டு­விட்­ட­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"பாதிப் பேர் தடுப்­பூசி போட்­டு­விட்­டால், அது கொவிட்-19 தொற்­று­டன் நிரந்­த­ர­மாக வாழ்­வதை நோக்கி நகர்­வதில் நாம் உறு­தி­யான திட்­டத்­தைக் கொண்­டி­ருக்க சரி­யான நேர­மாக அமை­யும்," என்­றார் அமைச்­சர் ஓங்.

பணிக்குழு பரி­சீ­லித்துவரும் பல்­வேறு திட்­டங்­கள் குறித்து அவர் கோடி­காட்­டி­னார்.

குழு­வி­லுள்ள எல்­லா­ரும் தடுப்­பூசி போட்­டி­ருக்­கும் பட்­சத்­தில், குழு­வா­கச் சேர்ந்து உண்­ணு­வது போன்ற தொற்று அபா­யம் அதி­க­முள்ள நட­வ­டிக்­கை­களில் எட்­டுப் பேர்­ வரை இடம்­பெற அனு­ம­திக்­கப்­ப­ட­லாம். இல்­லா­வி­டில், அதி­க­பட்­சம் குழுவிற்கு ஐவர் என்ற வரம்பு நீடிக்­கும்.

அது­போல, பங்­கேற்­கும் அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டி­ருந்­தால், திரை­ய­ரங்கு, கூட்டு வழி­பாடு, கூட்­டங்­கள், மாநா­டு­கள், கண்­காட்­சி­கள், நேரடி நிகழ்ச்­சி­கள், பார்­வை­யா­ளர்­க­ளு­டன் கூடிய விளை­யாட்டு நிகழ்ச்­சி­கள், திரு­மண விழாக்­கள் போன்­ற­வற்­றில் 500 பேர்­ வரை அனு­ம­திக்­கப்­ப­ட­லாம்.

சில வேளை­களில் தடுப்­பூ­சிக்­குத் தகு­தி­பெ­றா­த­வர்­கள், எடுத்­துக்­காட்­டாக 12 வய­துக்­குட்­பட்ட குழந்­தை­கள் இருக்­க­லாம் என்­ப­தைப் பணிக்­குழு கவ­னத்­தில் கொண்­டுள்­ள­தாக திரு வோங் கூறி­னார்.

அத­னால், அப்­பி­ரி­வின்­கீழ் வரு­வோர் எட்­டுப் பேர் கொண்ட குழு­வில் சேர்ந்து உண­வுண்ண சில வழி­காட்டி நெறி­முறை­கள் வகுக்­கப்­படும் என்று அவர் குறிப்­பிட்­டார். எடுத்­துக்­காட்­டாக, நிகழ்ச்­சிக்கு­முன் அவர்­கள் கிரு­மித்­தொற்­றுப் பரி­சோதனை செய்­து­கொள்ள வேண்­டி­ இருக்­கலாம்.

அடுத்­த­கட்­டத் தளர்­வு­க­ளின்­போது அதி­க­மான ஊழி­யர்­கள் பணி­யி­டங்­களுக்­குத் திரும்ப அனு­ம­திக்­கப்­ப­ட­லாம். மொத்த ஊழி­யர்­களில் எத்­தனை பேர் இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­ட­னர் என்­ப­தைப் பொறுத்து அது அமை­ய­லாம்.

இதற்­கி­டையே, அமைச்­சு­கள்­நிலை பணிக்குழு அறி­வித்­துள்ள புதிய தளர்வு­கள் மக்­க­ளுக்கு உற்­சா­க­ம­ளித்­தி­ருக்­கும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்­கம் வழி­யா­கத் தெரி­வித்து இருக்­கி­றார்.

"ஐவர் வரை சேர்ந்து உண்ணலாம். திருமண வரவேற்புகள், உடற்பயிற்சிக் கூடங்கள், உடற்தகுதி நிலையங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிக முக்­கி­ய­மாக, தடுப்­பூசி நட­வடிக்கை திட்­ட­மி­டட்­ட­படி சென்­று­கொண்­டி­ருப்­ப­தைப் பிர­த­மர் சுட்­டிக்­காட்­டி இருக்கிறார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர்க்கு நன்றி கூறிக்­கொண்ட அவர், தடுப்­பூசி போடா­த­வர்­கள் முடிந்­த­ள­விற்கு விரை­வில் அதற்­குப் பதிவு செய்­து­கொள்­ளு­மா­றும் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!