மலேசியாவுக்குப் புதிய துணைப் பிரதமர்

அம்னோ கட்­சி­யின் துணைத் தலை­வர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் மலே­சி­யா­வின் துணைப் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

தமது தலை­மை­யி­லான அர­சாங்­கத்­திற்கு அளித்து வரும் ஆத­ர­வைத் திரும்­பப் பெறு­வது தொடர்­பில் அம்னோ உச்­ச­மன்றம் நேற்று கூடி ஆலோ­சிக்­க­வி­ருந்த நிலை­யில், அதற்கு முன்­பாக பிர­த­மர் முகை­தீன் யாசின் இந்த அறி­விப்பை வெளி­யிட்­டார்.

தற்­காப்பு அமைச்­ச­ர் பொறுப்பிலும் திரு இஸ்மாயில் நீடிப்­பார்.

அம்­னோ­வைச் சேர்ந்த இன்­னோர் அமைச்­ச­ரான ஹிஷா­மு­தீன் ஹுசேன், புதிய வெளி­யு­றவு அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டு இருக்­கி­றார். திரு இஸ்­மா­யில் வச­முள்ள, கொவிட்-19 பர­வல் தடுப்பு விவ­கா­ரத்­தைக் கையாண்டு வரும் பாது­காப்­புக் குழு­மத் துறை­யும் திரு ஹிஷா­மு­தீன் வச­மா­கும்.

புதிய நிய­ம­னங்­கள் குறித்து மாமன்­ன­ருக்­குத் தெரி­வித்து இருப்­ப­தா­க­வும் அவை உட­ன­டி­யாக நடப்­பிற்கு வரு­வ­தா­க­வும் பிர­த­மர் அலு­வ­ல­கம் கூறியிருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!