‘மூத்தோர் காலம் தாழ்த்தாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்’

காலம் தாழ்த்­தா­மல் உட­ன­டி­யாக கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும்­படி மூத்­தோ­ரி­டம்

பிர­த­மர் லீ சியன் லூங் வலி­யு­றுத்தி உள்­ளார்.

நிலைமை கைமீறி போவ­தற்கு முன் மூத்­தோர் தடுப்­பூசி

போட்­டுக்­கொள்ள வேண்­டும்

என்­றார் அவர்.

60 வய­து மற்றும் அதற்கு மேற்­பட்ட ஏறத்­தாழ 200,000 மூத்­தோர் இன்­னும் கொவிட்-19 தடுப்­பூசி

போட்­டுக்­கொள்­ள­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மூத்­தோர் அடிக்­கடி வெளியே செல்­லா­மல் இருந்­தா­லும் குடும்­பத்­தார் அல்­லது நண்­பர்­க­ளி­ட­மி­ருந்து அவர்­க­ளுக்கு கொவிட்-19 கிருமி பர­வும் அபா­யம் இருப்­ப­தாக தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பிர­த­மர் லீ பதி­விட்­டார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று மூத்­தோ­ரின் உயி­ருக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்­றார் அவர்.

குறிப்­பாக, நீரி­ழிவு, உயர் ரத்த அழுத்­தம் போன்ற நாள்­பட்ட நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கும் மூத்­தோ­ரின் உடல்­நி­லைக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று

கூடு­தல் சிக்­கலை ஏற்­ப­டுத்­தக்­

கூ­டும் என்று திரு லீ கூறி­னார்.

"கொவிட்-19 கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து தடுப்­பூசி உங்­க­ளைப் பாது­காக்­கும். தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் சில­ருக்­குப் பக்­க­வி­ளை­வு­கள் ஏற்­ப­ட­லாம். ஆனால் அவை

கடு­மை­யா­ன­தல்ல.

"ஓரிரு நாட்­க­ளுக்கு உடல்­ந­லம் சரி­யில்­லா­மல் இருக்­கக்­கூ­டும். ஆனால் அதிலிருந்து சீக்கிரம் குணமடைந்துவிடுவீர்கள். கொவிட்-19 கிரு­மிக்கு எதி­ரான நோய் எதிர்ப்­புச் சக்­தியை உங்­கள் உடல் உற்­பத்தி செய்­வ­தால் நீங்­கள் அவ்­வாறு உணர்­வீர்­கள்," என்று தடுப்­பூ­சி பாது­காப்புமிக்கது என்பதை உறுதி செய்து காணொளி ஒன்றை அவர் வெளி­யிட்­டார்.

69 வயது திரு லீ, தமது இரண்­டா­வது கொவிட்-19 தடுப்­பூ­சியை கடந்த ஜன­வரி மாதம் 29ஆம் தேதி­சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் போட்­டுக்கொண்டார்.

70 வய­து மற்றும் அதற்­கு மேற்­பட்­டோ­ரில் ஏறத்­தாழ 70 விழுக்­காட்டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தாகக் கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று தெரி­விக்­கப்­பட்­டது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள மூத்­தோர் முன்­ப­திவு செய்­யத் தேவை­யில்லை.

அவர்­கள் நேர­டி­யாக ஏதே­னும் ஒரு பல­துறை மருந்­த­கம் அல்­லது தடுப்­பூசி நிலை­யத்­துக்­குச் சென்று தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம்.

வீட்­டை­விட்டு வெளியே செல்ல சிர­மப்­படும் மூத்­தோ­ருக்கு உத­வும் வகை­யில் நட­மா­டும் தடுப்­பூசிக் குழுக்­களை குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­க­ளுக்கு சுகா­தார அமைச்சு அனுப்­பி­யுள்­ளது.

இக்­கு­ழுக்­கள் தற்­போது புக்­கிட் மேரா, செங்­காங், தெம்­ப­னிஸ், ஈசூன் உட்­பட 10 குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­களில் செயல்­பட்டு வரு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!