சமூகத்தில் மேலும் 177 பேர் கிருமித்தொற்றால் பாதிப்பு

சமூ­கத்­தில் புதி­தாக 177 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கச் சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

அவர்­களில் 90 பேர், முன்­னர் கொரோனா தொற்­றி­யோ­ரு­டன் தொடர்­பில்­லாத வகை­யில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இப்­ப­டித் தொடர்­பில்லா வகை­யில் கிருமி தொற்­றி­யோ­ரைப் பொறுத்­த­வரை, ஒரு­நா­ளில் இதுவே ஆக அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­டோ­ரில் 54 பேர் முன்­னர் கிருமி தொற்­றி­யோ­ரு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்­றும் அவர்­கள் ஏற்­கெ­னவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­ட­னர் என்­றும் கூறப்­பட்­டது.

தொடர்­பி­ருந்த வகை­யில் 33 பேரை கொரோனா தொற்­றி­யது கண்­கா­ணிப்­புப் பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­கள் மூலம் உறு­தி­செய்­யப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் ஒரு­வர் 70 வய­திற்கு மேற்­பட்­ட­வர். அவர் இன்­னும் இரண்­டா­வது தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை.

வெளி­நாட்­டிலிருந்து வந்­தோ­ரில் மூவர் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. அம்­மூ­வ­ரும் வீட்­டில் தங்­கும் உத்­த­ரவை நிறை­வேற்­றி­ய­போது, அவர்­கள் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது உறுதிப்­ப­டுத்­தப்­பட்­டது.

மொத்­தத்­தில், சிங்­கப்­பூ­ரில் நேற்று 180 புதிய கொரோனா பாதிப்­பு­கள் பதி­வா­யின. இதனை­ அடுத்து, நாட்­டின் ஒட்­டு­மொத்த கொரோனா பாதிப்பு 67,800ஆக உயர்ந்­தது.

நேற்று முன்தின நிலவரப்படி, எட்டுப் பேருந்துச் சந்திப்பு நிலையத் தொற்றுக் குழுமங்களில் மொத்தம் 276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருமி தொற்­றி­யோ­ரில் 463 பேர் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­களில் 19 பேர்க்­குச் செயற்கை உயிர்­வாயு தேவைப்­ப­டு­கிறது; ஐவர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் கவ­லைக்­கி­ட­மான நிலை­யில் உள்­ள­னர்.

இத­னி­டையே, சிங்­கப்­பூர்­வா­சி­களில் 80 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­க கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­தா­க­வும் 83 விழுக்­காட்­டி­னர் குறைந்­தது ஒரு­தடுப்­பூசியேனும் போட்­டுக்­கொண்டிருப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!