மூத்தோர் உள்ளிட்ட சிலருக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசிகள்

சிங்­கப்­பூர், 60 வயது அல்­லது அதற்­கும் மேற்­பட்ட வயதுள்ள முதி­ய­வர்­கள், நோய் தடுப்­பாற்­றல் மிக­வும் குறை­வாக இருப்­போர், மூத்­தோர் பரா­ம­ரிப்பு வச­தி­களில் தங்­கி­ யி­ருப்­போர் உள்­ளிட்ட சில குறிப்­பிட்­டோ­ருக்கு இந்த மாதத்­தி­லி­ருந்து பூஸ்­டர் தடுப்­பூ­சி­களைப் போடத் தொடங்­கும்.

சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று நடை­பெற்ற கொவிட்-19 கிரு­மிக்கு எதி­ரான அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்­குழு நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் இதைத் தெரி­வித்­தார்.

தொற்று, கடும் நோய் பாதிப்பு போன்­ற­வற்­றி­லிருந்து மூத்­தோர் அதி­கப் பாது­காப்பைப் பெற­வும் தொற்­றுப்பரவல் வெகுவாக உயர்ந்து அதி­க­மா­னோர் கடும் நோய் பாதிப்­­புக்கு உள்­ளா­வ­தைத் தடுக்­க­வும் 'பூஸ்டர்' தடுப்­பூ­சி­கள் போடப்­ப­டு­வ­தாக சுகாதார அமைச்சு நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

இரண்டு தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்ட ஆறு முதல் ஒன்­பது மாதங்­க­ளுக்­குள் மூத்­தோ­ருக்கு 'எம்­ஆர்­என்ஏ' வகைத் தடுப்­பூ­சி ­க­ளின் 'பூஸ்­டர்' தடுப்­பூ­சி­களை மூத்­தோர் போட்­டுக்கொள்ள வேண்­டும் என்­றும் அது கூறி­யது.

அதன்­படி, இவ்­வாண்டு மார்ச் மாத வாக்­கில் இரண்டு தடுப்­பூசி ­க­ளை­யும் போட்­டுக்கொண்ட 60 வயது அல்­லது அதற்­கும் மேற்­பட்ட வயதுள்ள மூத்­தோர், மூன்­றா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள இம்­மா­தப் பிற்­ப­கு­தி­யில் தகுதி பெறு­வார்­கள் என்றது அமைச்சு.

புற்­று­நோய் சிகிச்சை பெறு­ப­வர் கள், உறுப்­பு­மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்­ட­வர்­கள், கடைசி கட்ட சிறுநீரக நோயாளிகள் உள்ளிட்ட நோய் தடுப்­பாற்­றல் மிக­வும் குறைந்­த­வர்­கள் இரண்­டா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட இரண்டு மாதங்களில், ஏற்­கெ­னவே பெற்ற அதே 'எம்­ஆர்­என்ஏ' வகை தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்கொள்­ள­வேண்­டும் என்று அமைச்சு கூறி­யது. இது, இவர்களுக்கு தொடக்­கத்­தி­லேயே தடுப்­பாற்­றல் போதிய அளவு செயல்­ப­டு­வதை உறு­தி­செய்­யும் என்று சுகாதார அமைச்சு விளக்­கி­யது.

கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் தொடர்­பான நிபு­ணர் குழு இப்­பரிந்­து­ரை­களை முன்­வைத்­தது.

'பூஸ்­டர்' தடுப்­பூ­சி­கள் குறித்த உல­க­ளா­வி­யத் தர­வு­களை குறிப்­பாக தடுப்­பூ­சி­க­ளின் செ­யல்­திறன், பாது­காப்பு ஆகி­ய­வற்றை ஆராய்ந்து பரிந்­து­ரை­கள் செய்­யப்­பட்­டதாக அது தெரிவித்தது.

'பூஸ்­டர்' தடுப்­பூசித் திட்­டத்­தை சிலருக்குத் தொடங்­க­வேண்­டும் என்ற பரிந்­து­ரை­களை ஏற்றுக்­ கொண்­ட­தாக அமைச்சு கூறி­யது. மூத்­தோ­ருக்கு கடும் கிரு­மித்தொற்று ஏற்­ப­டும் அபா­யம் உள்­ள­தா­க­வும் முன்கூட்டியே இரண்டு தடுப்­பூ­சி­கள் போட்­டுக் கொண்­ட­தால் அவர்­களுடைய நோய் தடுப்­பாற்றல் குறையலாம் என்றும் அது குறிப்பிட்டது.

'கட்டுப்பாடுகள் அதிகரிக்கப் படாது' - 2ம் பக்கத்தில்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!