கடும் நோயிலிருந்து காக்கும் தடுப்பூசிகள்

இங்­குள்ள தடுப்­பூ­சி­க­ளுக்கு கிருமித் தொற்­றைத் தடுப்பதில் சுமார் 40% செயல்­திற­ன் உள்ளது என்­ற­போ­தும், அவை கடும் நோய்­கள், மர­ணங்­க­ளைத் தடுப்­ப­தில் அதிகச் செயல்­தி­றன் மிக்­கவை என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறி­னார்.

அமைச்­சு­கள் நிலைப் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரான அவர், நேற்­றைய செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் இதைத் தெரிவித்தார்.

டெல்டா வகைக் கிரு­மி அதி­கம் தொற்­றக்­கூ­டி­யது என்­ப­தால் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட அதி­க­மா­னோர் அத­னால் பாதிக்­கப்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"தடுப்­பூ­சி­கள் ஒரு­வ­ரைத் தொற்­றி­லி­ருந்து பாது­காக்­கின்­றன. ஆனால் 'ஆன்­டி­பா­டிஸ்' எனும் நோய் எதிர்ப்­புப் புர­தங்­கள் சில மாதங்­களில் குறை­வ­தால் அந்தப்­பா­து­காப்­பின் வலு குறை­யும்," என்­றார் திரு ஓங்.

முழு­மை­யா­கத் தடுப்­பூ­சி போட்டுக்கொண்ட ஒரு­வருக்கு கொவிட்-19 கிருமி தொற்­றவே தொற்­றாது என்­ப­தில்லை என்று சுகா­தார அமைச்­சின் மருத்­து­வச் சேவை­கள் பிரி­வின் இயக்­கு­நர் இணைப் பேரா­சி­ரி­யர் கென்­னத் மாக் தெரி­வித்­தார்.

எனி­னும் தீவிர சிகிச்­சைக்­­கான தேவையையும் மர­ணங்­களையும், தடுப்­பூ­சி­கள் பெரு­ம­ளவு குறைப்­ப­தாக அவர் சொன்­னார்.

"கடந்த 28 நாட்­களில் தடுப்­பூ­சி போட்­டுக்கொள்­ளாது கிரு­மி தொற்றி கடு­மை­யாகப் பாதிக்கப் பட்டவர்கள் அல்­லது உயிர் இழந்­த­வர்­க­ளின் விகி­தம் 9.2% ஆகும். ஆனால், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களில் 1.3 விழுக்­காட்­டி­ன­ருக்­குத்­தான் அவ்­வா­றான பாதிப்­பு­கள் ஏற்­பட்­டன," என்­றார் டாக்­டர் மாக்.

கடும் நோய்த்­தொற்று, மர­ணம் ஆகி­ய­வற்­றின் விகி­தம் தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­களில் ஏழு மடங்கு குறைவு.

தடுப்­பூ­சி­கள் தரும் பாது­காப்பை இது காட்­டு­கிறது என்று அவர் கூறி­னார்.

சினோ­வேக் தடுப்­பூ­சி­யின் செயல்­தி­றன் பற்­றிய கேள்­விக்­குப் பதி­ல­ளித்த டாக்­டர் மாக், அது பற்­றிய போதிய தர­வு­கள் இல்லை என்­று தெரிவித்தார்.

சினோ­வேக் போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று ஏற்­ ப­டு­கிறது என்­பதை இப்­போ­தைக்குச் சொல்ல முடியாது என்று டாக்டர் மாக் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!