253 பேர் பாதிப்பு: ஓராண்டுக்குப் பிறகு சமூகத்தில் அதிக தொற்று

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி உள்­ளூ­ரில் 253 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதிக்­குப் பிறகு உள்­ளூ­ரில் பதி­வாகியிருக்­கும் ஆக அதிக அன் றாடத் தொற்று எண்­ணிக்கை இது.

புதிய 253 நோயா­ளி­களில் 84 பேர் ஏற்­கெ­னவே நோய் தொற்­றி­ய­வர்­கள் மற்­றும் தனிமை உத்­த­ர­வில் இருப்­ப­வர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள். கண்­கா­ணிப்பு நட

­வ­டிக்­கை­யின்­போது இதர 53 பேரி­டம் நோய் தொற்­றி­யது கண்­ட­றி­யப்­பட்­டது.

அவர்­களில் யாரும் தனி­மைப்­

ப­டுத்­தப்­ப­டாத நிலை­யில் தொற்று இருந்­தது தெரிய வந்­தது. நேற்­றைய மொத்த எண்­ணிக்­கை­யில் எஞ்­சிய 116 பேருக்கு எவ்­வி­தத் தொடர்­பும் இல்­லாத நிலை­யில் நோய் தொற்­றி­யி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக அமைச்சு கூறி­யது.

தொடர்பு இல்­லாத நிலை­யில் உள்­ளூ­ரில் பதி­வாகி இருக்­கும் ஆக அதிக எண்­ணிக்கை இது.

மேலும், புதி­தாக தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வர்­களில் 70 வய­துக்கு மேற்­பட்ட இரு மூத்­தோ­ரும் உள்­ள­னர். அவ்­வி­ரு­வ­ரும் ஒரு தடுப்­பூசி மட்­டுமே போட்­டுக்­கொண்­டுள்­ள­தால் கடும் உடல்­ந­லக் குறைவை எதிர்­நோக்­கும் ஆபத்­தில் உள்­ளோ­ரா­கக் கரு­தப்­ப­டு­கின்­ற­னர்.

வெளி­நா­டு­களில் இருந்து சிங்­கப்­பூர் வந்த ஆறு பேருக்­கும் நேற்று தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. அவர்­களில் இரு­வ­ருக்கு இங்கு வந்­தது முதல் தனிமை உத்­த­ர­வில் வைக்­கப்­பட்ட நிலை­யில் தொற்று இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

இதர நால்­வ­ருக்கு சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கி­ய­தும் நடத்­தப்­படும் பரி­சோ­த­னை­யில் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. இவர்­க­ளை­யும் சேர்த்து நேற்று தொற்று உறுதி செய்­யப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 259. இத­னைத் தொடர்ந்து சிங்­கப்­பூ­ரில் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 68,469க்கு அதி­க­ரித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!