வெளிநாட்டு ஊழியர் மீது ஏறிய லாரி; விபத்தில் ஐவர் காயம்

சிசில் ஸ்த்ரீட், கிராஸ் ஸ்த்ரீட் சந்­திப்­பில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­ப­க­லில் ஒரு காரும் லாரி­யும் மோதிக் கொண்­ட­தில் ஐவர் காய­ம­டைந்­த­னர்.

காரு­டன் மோதிய வேகத்­தில் லாரி­யின் பின்­பு­றத்­தில் இருந்த இரண்டு வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சாலை­யில் விழுந்­த­தாக விபத்தை நேரில் பார்த்­த­வர்­கள் கூறி­னர்.

காரு­டன் மோதிய பின்­னர் லாரி ஓட்­டு­நர் அதைப் பின்­னால் செலுத்­தி­ய­தா­க­வும் சாலையில் விழுந்த ஊழி­யர்­க­ளில் ஒரு­வர் மீது லாரியை ஏற்றி­ய­தா­க­வும் சம்­ப­வத்­தைத் பார்த்த 55 வயது ஆட­வர் ஷின் மின் செய்­தித்­தா­ளி­டம் கூறி­னார்.

காய­ம­டைந்த ஊழி­யர் வலி­யில் துடித்து அல­றி­னார் என்­றும் நினை­வி­ருந்­த­போ­தும் அவ­ரால் பேச முடி­ய­வில்லை என்­றும் அந்த ஆட­வர் தெரி­வித்­தார்.

காரில் இருந்த ஓட்­டு­ந­ரும், உடன் இருந்த பய­ணி­யும் அதிர்ச்­சி­யில் இருந்­தது போல காணப்­பட்­ட­தா­க­வும் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் வரும் வரை அவர்­கள் காரை விட்டு வெளி­யே­ற­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்­டார். விபத்து நடந்த இடத்­துக்கு நான்கு ஆம்­பு­லன்­சு­கள் சென்­ற­தைச் காணொ­ளி­கள் காட்­டின.

அச்­சம்­ப­வம் பற்றி மாலை 5.44 மணிக்­குத் தக­வல் கிடைத்­த­தாக போலி­சார் கூறி­னர். 28 வயது, 34 வய­துள்ள இரண்டு ஆட­வர்­கள், காரை ஓட்டிய 58 வயது மாது, அதில் இருந்த 60 வயது பயணி ஆகி­யோர் சிங்­கப்­பூர் பொது மருத்­துவ மனைக்­குச் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். போலிஸ் விசா­ரணை தொடர்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!