வீட்டிலேயே குணமடையுங்கள்

நிலைமையை விளக்கி தடுப்பூசி போட்டுக்கொண்ட கொவிட்-19 நோயாளிகளுக்கு அமைச்சர் வலியுறுத்து

முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட இளம் வய­தினர் கொவிட்-19 தொற்­றுக்கு ஆளா­னால் வீட்­டி­லேயே தங்­கி­யி­ருந்து குண­ம­டைய வேண்­டும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் அறி­வுரை கூறி இருக்­கி­றார்.

மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு நெருக்கடிகள் அதி­க­ரித்து வரு­வதை அவர் சுட்­டிக்­காட்டி இருக்­கி­றார்.

"நம் மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் சுகா­தார பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­க­ளுக்­கும் சுமை அள­வுக்கு அதி­க­மாக கூடக் கூடாது. இதுவே சுகா­தார அமைச்­சின் இப்­போ­தைய ஆகப் பெரிய சவால்.

"இந்­தப் பிரச்­சி­னையைச் சமா­ளிக்க ஆன அனைத்­தை­யும் செய்து வரு­கிறோம்," என்று அவர் ஃபேஸ்புக்­கில் நேற்று குறிப்­பிட்­டார்.

"இத­னால்­தான் முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட இளம் வய­தி­னர், வீட்டி­லேயே சிகிச்­சை பெற்று குண­ம­டைய வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றார்­கள்," என்­றார் அவர்.

லேசான அறி­கு­றி­க­ளு­டன் கூடி­ய­வர்­கள் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்­வ­தற்குப் பதி­லாக தனியார் மருத்­து­வர்­க­ளைப் பார்க்­க­லாம் அல்­லது பரி­சோ­தனை மருந்­த­கங்­களை நாட­லாம் என்றார் அவர்.

சில பொது மருத்­து­வ­ம­னை­க­ளுக்குச் செல்­லும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து இருக்­கிறது. லேசான சுவாசத் தொற்று அறி­கு­றி­க­ளு­டன் அவர்­கள் விபத்து, அவ­சர சிகிச்­சை பிரி­வு­க­ளுக்கு விரைந்து இருக்­கி­றார்­கள் என்று சுகாதார அமைச்சு தெரி­வித்­திருந்தது.

அதற்கு அடுத்த நாளன்று அமைச்­சர் இவ்­வாறு கருத்து கூறி இருக்­கி­றார்.

அத்­த­கைய மருத்­து­வ­ம­னை­க­ளின் பெயர்­களை அமைச்சு குறிப்­பி­ட­வில்லை என்­றா­லும்­கூட சிங்­கப்­பூர் பொது மருத்து­வ­மனை, தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­மனை ஆகி­யவை தங்­கள் நிலை மையை விளக்கி அண்­மை­யில் ஃபேஸ்புக்­கில் தக­வல்­க­ளைப் பதி­வேற்றி இருந்­தன.

அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் அதிக எண்­ணிக்­கை­யில் நோயா­ளி­கள் வந்­த­தா­க­வும் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்கு சிகிச்­சை­யில் முன்­னுரிமை கொடுக்­கப்­படும் என்றும் அவை கூறின.

கொவிட்-19 நோயா­ளி­களைச் சமா­ளிக்­கும் அள­விற்கு மருத்­து­வ­மனை வளம் இருக்­குமா என்­பதே கொரோனாவுக்கு எதி­ரான போராட்­டத்­தில் ஒரு முக்கி­ய­மான அள­வீடு என்று திரு ஓங்கும் அவர் தலைமை வகிக்­கும் சிறப்­புப் பணிக்­குழு­வும் திரும்பத் திரும்பக் கூறி வந்­துள்­ளன என்பது முக்கியமானது.

அமைச்­சர், சுகா­தார அமைச்­சின் தகவல் ஒன்றை­யும் நேற்று தமது ஃபேஸ்புக் செய்­தி­யில் சுட்­டிக்­காட்­டி­னார்.

கொவிட்-19 கிருமி தொற்­றிய ஒரு­வருக்குக் கடு­மை­யான பாதிப்­பு­கள் ஏற்­படு­வ­தற்­கான வாய்ப்­பு­கள், அவ­ரின் வயதை­யும் அவர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு இருக்­கி­றாரா என்­ப­தையுமே பெரும்­பா­லும் சார்ந்­தி­ருக்­கும் என்று அந்தத் தக­வல் தெரி­வித்­தது.

மே மாதம் 1ஆம் தேதி முதல் சென்ற வியா­ழக்­கி­ழமை வரை கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் 98 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மா­ன­வர்­க­ளி­டம் அறி­கு­றி­கள் அறவே இல்லை அல்­லது லேசான அறி­கு­றி­களே காணப்­பட்­டன.

அவர்­கள் முற்­றி­லும் குண­ம­டை­யும் வரை தொடர்ந்து அதே நிலையே நீடிக்­கும் என்­ப­தால் முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட இளம் வய­தி­னர் வீட்­டி­லிருந்தே முறை­யான சிகிச்­சை பெற்று குண­ம­டைய வேண்­டும் என்று வலி­யுறுத்­தப்படுவதாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!