தடுப்பூசி: இந்தியா கோடிக்கணக்கில் சாதனை; மாத இலக்கு 250மி.

இந்­தியா தன் மக்­க­ளுக்குத் தடுப்­பூசி போட்டு, கொவிட்-19 கிரு­மித்­தொற்றை ஒடுக்­கு­வ­தில் உலக சாதனை நிகழ்த்தி வரு­கிறது.

ஒரே நாளில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை 25 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டன.

அதோடு மட்­டு­மின்றி, மாதா­மாதம் 250 மில்­லி­ய­னுக்­கும் அதிக தடுப்­பூ­சி­க­ளைப் பெறு­வது நாட்­டின் இலக்கு என்று அர­சாங்க தக­வல் வட்­டா­ரம் ஒன்று தெரி­வித்துள்ளது.

இந்­தியாவுக்கு இந்த மாதம் ஏறத்­தாழ 200 மில்­லி­யன் கோவிஷீல்டு தடுப்­பூ­சி­யும் 35 மில்லி­யன் கோவேக்­சின் தடுப்­பூ­சி­யும் கிடைக்கும் என்று அந்­தத் தக­வல் வட்­டா­ரம் கூறி­ய­தாக ஏஎன்ஐ செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

இந்­தியா இதற்கு முன்­ன­தாக ஆகஸ்ட் 31ஆம் தேதி ஒரே நாளில் 14.1 மில்­லி­யன் தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டது.

சீரம் தடுப்­பூசி நிறு­வ­னம் சென்ற மாதம் 190 மில்­லி­யன் குப்பி தடுப்­பூசி மருந்தை வழங்­கி­யது. இந்த மாதம் 200 மில்­லி­யன் குப்பி தடுப்­பூசி மருந்தை அது வழங்­கும்.

ஸைடஸ் கெடிலா நிறு­வ­னம் இந்த மாத முடி­வில் கொவிட்-19 தடுப்­பூசி மருந்தை வழங்­கும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஆகை­யால் நாட்­டில் தடுப்­பூசி பற்­றாக்­குறை இருக்­காது என்று அந்த அரசுத் தரப்பு தெரி­வித்­தது.

பூஸ்­டர் தடுப்­பூ­சி­க­ளைப் பொறுத்­த­வரை, போதிய தக­வல்கள் கிடைக்­க­வில்லை என்­றும் ஆகை­யால் பூஸ்­டர் தடுப்­பூசி தேவையா என்­பது பற்றி இப்­போ­தைக்கு முடிவு எது­வும் இராது என்­றும் தக­வல் வட்­டா­ரங்­கள் குறிப்­பிட்­டன.

முத­லில் தன் மக்­க­ளுக்குத் தடுப்­பூ­சி­யைப் போட்­டு­விட்டு பிறகு மற்ற நாடு­க­ளுக்குத் தடுப்­பூ­சியை ஏற்­று­மதி செய்­வதே இந்­தி­யா­வின் முன்­னு­ரிமை என்­றும் ஒரு தக­வல் வட்­டா­ரம் கூறி­யது.

இத­னி­டையே, இந்­தி­யா­வில் கடந்த ஜன­வரி மாதம் 16ஆம் தேதி தடுப்­பூசி இயக்­கம் தொடங்­கி­யது முதல் 800 மில்­லி­யன் தடுப்­பூசி போடப்­பட்டு இருப்­ப­தாக சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மண்­டா­வியா தெரி­வித்து இருக்­கி­றார்.

இவ்­வே­ளை­யில், இந்­தி­யா­வில் தடுப்­பூ­சி­யில் பெரும் சாதனை படைத்­துள்ள கோவா மாநி­லத்தின் சுகா­தார ஊழி­யர்­கள், அந்த மாநில மக்­களி­டம் பேசிய பிர­த­மர் நரேந்திர மோடி, தனது பிறந்­த­நா­ளில் 25 மில்லியன் தடுப்பூசி சாதனை படைக்­கப்­பட்­டது தனக்கு மிக பெரு­மை­யா­க­வும் மகிழ்ச்­சி­யா­க­வும் இருக்­கிறது என்­றார்.

இமாச்­சலப் பிர­தே­சம், கோவா, சண்­டி­கர், லட்­சத்­தீ­வு­கள் ஆகி­ய­வற்­றில் 100 விழுக்­காட்டினருக்கு முதல்­ த­வணை தடுப்­பூசி போடப்­பட்டு உள்­ளதை பிர­த­மர் மோடி தனது செய்­தி­யில் சுட்­டினார்.

நாட்­டில் முன்­க­ளப்­ப­ணி­யா­ளர்­கள், சுகா­தா­ரத் துறை ஊழி­யர்­கள் அனை­வ­ரும் மும்­மு­ர­மாக செயல்­படு­வது மிக­வும் பாராட்­டுக்­கு­ரி­யது என்­றார் அவர்.

இத­னி­டையே, சனிக்­கி­ழமை 24 மணி நேரத்­தில் புதி­தாக 30,773 பேருக்கு தொற்று உறு­தி­யா­ன­தா­க­வும் 309 பேர் மர­ண­மடைந்­த­தா­க­வும் அரசுத் தரப்பு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!