தென்கொரியாவில் நீளும் கொரோனா கொடுங்கரம்

முதன்முறையாக ஒருநாள் பாதிப்பு மூவாயிரத்தைத் தாண்டியது

தென்­கொ­ரி­யா­வில் முதன்­மு­றை­யாக ஒரே நாளில் மூவா­யி­ரத்­திற்­கும் மேற்­பட்­டோரை கொவிட்-19 தொற்­றி­விட்­டது.

இவ்­வா­ரத்­தில் தொடர்ந்து மூன்று நாள்­கள் விடு­முறை விடப்­பட்­டதை அடுத்து, மக்­கள் கட்­டுப்­பா­டு­க­ளைப் பின்­பற்­று­வ­தில் சற்று அலட்­சி­யம் காட்­டி­யி­ருக்­க­லாம் என்­றும் அதுவே கொரோனா தொற்று உயர கார­ண­மாக இருந்­தி­ருக்­க­லாம் என்­றும் சொல்­லப்­படு­கிறது.

தென்­கொ­ரி­யா­வில் நேற்று முன்­தி­னம் புதி­தாக 3,273 பேர்க்­குக் கிரு­மித்­தொற்று உறு­திப்­படுத்­தப்­பட்­டது என்று கொரிய நோய்க் கட்­டுப்­பாட்டு, தடுப்பு மையம் தெரி­வித்­தது.

புதி­தாக பாதிக்­கப்­பட்­டோ­ரில் 3,245 பேர் உள்­நாட்­டில் இருப்­ப­வர்­கள் என்­றும் 28 பேர் வெளி­நா­டு­களில் இருந்து வந்­தோர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து, அந்­நாட்­டில் ஒட்­டு­மொத்த கிருமி பாதிப்பு 298,402ஆக­வும் உயி­ரி­ழப்பு 2,441 ஆக­வும் உயர்ந்­தன.

உள்­ளூ­ரில் கிருமி தொற்­றி­யோ­ரில் 77 விழுக்­காட்­டிற்­கும் மேற்­பட்­டோர் சோல் நகரையும் அதனை ஒட்­டி அமைந்துள்ள பகுதி­க­ளை­யும் சேர்ந்­த­வர்­கள் எனக் கூறப்­பட்­டது.

"நன்­றி­தெ­ரி­விக்­கும் விடு­முறை நாளை­யொட்டி அதி­க­மா­னோர் பய­ணம் செய்­த­தும் அப்­போது ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் இடை­யி­லான தொடர்பு அதி­க­மாக இருந்­த­துமே தொற்று பாதிப்பு வெகு­வே­க­மாக உயர்ந்து வரு­வ­தற்கு முக்­கி­யக் கார­ணம் என்று மதிப்­பிட்­டுள்­ளோம்," என்­றார் நோய்க் கட்­டுப்­பாட்டு, தடுப்பு மையத்­தின் இயக்­கு­நர் ஜியோங் இயுன் கியோங்.

அதி­கம் பர­வும் தன்மை கொண்ட உரு­மா­றிய 'டெல்டா' கிரு­மியே பாதிக்­கப்­பட்­டோ­ரில் பல­ரை­யும் தாக்­கி­யி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

அடுத்த ஓரிரு வாரங்­க­ளுக்கு கொரோனா தொற்று ஏறு­மு­கத்­தில் இருக்­கும் என்ற திரு­வாட்டி கியோங், இந்­தக் கால­கட்­டத்­தில் தனிப்­பட்ட ஒன்­று­கூ­டல்­க­ளைத் தவிர்க்­கும்­படி அல்­லது தள்ளி வைக்­கும்­படி பொது­மக்­களை வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

தென்­கொ­ரி­யா­வில் கொரோனா உயி­ரி­ழப்பு விகி­தம் 0.82% என மிகக் குறைந்த அள­வி­லேயே இருந்து வரு­கிறது. எளி­தில் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்ள மூத்த குடி­மக்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளித்து கொவிட்-19 தடுப்­பூசி போட்­டதே அதற்­குக் கார­ணம் என்று நோய்க் கட்­டுப்­பாட்டு, தடுப்பு மையம் கூறி­யது.

இத­னி­டையே, பரி­சோ­தனை செய்­வ­தும் அதி­க­ரித்­துள்­ளது. கடந்த வாரத்­தில் மட்­டும் 227,874 கிரு­மிப் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இது, அதற்கு முந்­திய வாரத்­தைக் காட்­டி­லும் 50% அதி­கம்.

விடு­முறை முடிந்து வேலைக்­குத் திரும்­பு­வோர், கொரோனா தொற்­றுக்­கான இலே­சான அறி­கு­றி­கள் இருந்­தா­லும் பரி­சோதனை செய்­து­கொள்ள வேண்­டும் என்று அதி­கா­ரி­கள் அறி­வு­றுத்தி வரு­கின்­ற­னர்.

அங்கு கொரோனா தொற்று அடுத்த வாரம் உச்­சத்தை எட்­ட­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மொத்­தம் 52 மில்­லி­யன் மக்­கள் வாழும் தென்­கொ­ரி­யா­வில் கடந்த வியா­ழக்­கி­ழமை நில­வ­ரப்­படி 73.5 விழுக்­காட்­டி­னர் குறைந்­தது ஒரு தடுப்­பூ­சி­யே­னும் போட்டுக்­கொண்­டுள்­ள­னர்; கிட்­டத்­தட்ட 45 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டு­விட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!