புக்கிட் பாஞ்சாங்கிலும் காலாங்கிலும் புதிதாக இரண்டு பலதுறை மருந்தகங்கள்

புக்கிட் பாஞ்சாங்கிலும் காலாங்கிலும் புதிதாக இரண்டு பலதுறை மருந்தகங்கள் சனிக்கிழமையன்று திறக்கப்பட்டன. ஒவ்வொன்றும், மருத்துவ பராமரிப்பு சார்ந்த வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. புக்கிட் பாஞ்சாங் பலதுறை மருந்தகத்தில் தாதிமை இல்லம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

புக்கிட் பாஞ்சாங் பலதுறை மருந்தகத்தில் 365 படுக்கைகளும் 60 பகல்நேர பராமரிப்பு இடங்களும் உள்ளன. காலாங் பலதுறை மருந்தகம், குவோங் வாய் ஷு மருத்துவமனையுடன் இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. நாட்பட்ட, சிக்கலான மருத்துவப் பிரச்சினைகளைக் கொண்ட நோயாளிகளுக்காக மருத்துவமனையின் நீண்ட கால பராமரிப்பு வசதியில் 128 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

யூனோசில் அமையும் புதிய பலதுறை மருந்தகம், வரும் டிசம்பர் மாதம் திறக்கப்படும். மூத்தோர் பராமரிப்பு நிலையத்துடன் அந்த மருந்தகம் இணைக்கப்பட்டுள்ளது.

“சுகாதார வசதிகள், சமூக பராமரிப்பு வசதிகள் ஆகியவற்றை (விளையாட்டு வசதிகள்உட்பட) பலதுறை மருந்தகங்களுடன் இணைத்து அவற்றைத் திறக்கும்போது, முழுமையான பராமரிப்பையும் மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கான இணைத் திட்டங்களை உருவாக்கும் வாய்ப்புக்கு வகைசெய்கிறோம்,” என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங், இன்று நடைபெற்ற புக்கிட் பாஞ்சாங் பலதுறை மருந்தகத் திறப்பு விழாவின்போது கூறினார்.

புக்கிட் பாஞ்சாங், காலாங் பலதுறை மருந்தகங்களையும் சேர்த்து சிங்கப்பூரில் தற்போது 22 பலதுறை மருந்தகங்கள் உள்ளன. அடுத்த ஒன்பது ஆண்டுகளில்வசதிகளுடன் கூடிய மேலும் ஒன்பது ஒருங்கிணைந்த வசதிகளுடன் கூடிய மேலும் ஒன்பது பலதுறை மருந்தகங்கள் திறக்கப்படும் என்று திரு ஓங் தெரிவித்தார். 2030ஆம் ஆண்டுக்குள் பலதுறை மருந்தகங்களின் எண்ணிக்கையை 32ஆக உயர்த்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!