ஓங்: வீட்டிலேயே குணமடையும் ஏற்பாடு மேம்பட்டு வருகிறது

சிங்­கப்­பூ­ரில் வீட்­டி­லேயே குண­ மடை­யும் செயல்­திட்­டம், அதிகமாகி வரும் கொவிட்-19 நோயா­ளி­ களைக் கையா­ளும் அள­வுக்கு முற்­றி­லும் ஆயத்­த­மாக இல்லை என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

எனினும் தொற்று கூடு­வதைக் கருத்­தில்­கொண்டு அதைச் சமா­ளிக்க தேவை­யான திட்­டங்­களை நாடு தீட்டி இருக்­கிறது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

திட்­ட­மி­டு­தல், ஆற்­றல், மனி­த ­வ­ளம் ஆகி­ய­வற்­றில் எப்­போ­துமே நாம் இரண்­டடி முத­லி­டத்­தில் இருக்­கி­றோம் என்ற திரு ஓங், இருந்­தா­லும் வீட்­டி­லி­ருந்தே குண­ம­டை­யும் செயல்­திட்­டம் எதிர்­பார்த்­த­படி இல்லை என்­பதை தான் முற்­றி­லும் ஏற்­றுக்­கொள்­வ­தா­கக் கூறினார்.

அத்திட்­டம் 21 நோயா­ளிக­ளு­டன் பாதி பரி­சோ­த­னை­யில் இருந்ததது. அப்­போது கொவிட்-19 தொற்று அதி­க­ரித்து சுகா­தார பரா­ம­ரிப்பு முறைக்­கு சுமை கூடி­யது. அத­னால் திட்­டத்தை உடனடியாக விரி­வு­ப­டுத்த வேண்­டிய தேவை ஏற்­பட்­டது என்று அமைச்சர் விளக்­கி­னார்.

தங்­க­ளு­டைய தனிப்­பட்ட சூழ்­நிலை பற்றி ஆலோ­சனை பெறு ­வ­தற்­கு சுகா­தார அமைச்­சு­டன் தொடர்­பு­கொள்ள முடியவில்லை; அடுத்­த­தாக எதைச் செய்­வது என்­ ப­தும் புரி­ய­வில்லை என பல­ரும் புகார் தெரி­வித்­திருந்தனர்.

வீட்­டி­லேயே குண­ம­டை­யும் திட்­டத்­தில் இப்­போது ஏறத்­தாழ 9,800 பேர் இருக்­கி­றார்­கள். 2,800க்கும் மேற்­பட்­ட­வர்­கள் தங்­க­ளு­டைய 10 நாள் வீட்­டில் குண­ம­டை­யும் ஏற்­பாட்டை பூர்த்தி செய்துள்ளனர். அன்­றா­டம் புதி­தாக கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­­வோ­ரில் பாதிக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் வீட்­டி­லேயே குண­ ம­டை­யும் திட்­டத்­தில் வைக்­கப்­ப­டு­கி­றார்­கள். இந்த விகி­தாச்­சா­ரம் வரும் வாரங்­களில் கூடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு வீட்­டி­லேயே குண­ம­டை­யும் ஏற்­பாடு இயல்­பா­ன­தாக இருக்­கிறது.

கொவிட்-19 நோயா­ளி­களில் 98 விழுக்­காட்­டி­ன­ருக்கு லேசான அறி­கு­றி­கள் அல்­லது அறவே அறி­குறி­கள் இல்லை. அவர்­க­ளுக்­குச் சிறப்புப் பரா­ம­ரிப்பு எது­வும் தேவைப்­ ப­ட­வும் இல்லை என்­பதே இதற்­கான கார­ணம் என்றார் அமைச்­சர்.

பாட்­டா­ளிக் கட்சி உறுப்­பி­ன­ருக்­குப் பதி­ல­ளித்து பேசிய அமைச்­சர், கிருமித்தொற்று கூடு­வ­தைக் கருத்­தில்­கொண்டு அதற்­கேற்ற திட்­டங்­களை அர­சாங்­கம் வகுக்­க­வில்லை என்று பொருள்­பட கருத்­து­ரைப்­பது உண்­மை­யல்ல என்­றார். அர­சாங்­கம் பொதுச் சுகா­தார வல்­லு­நர்­ க­ளு­டன் அணுக்­க­மா­கச் செயல்­பட்டு வருவதை அவர் சுட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ரில் நாள் ஒன்­றுக்­குப் புதி­தாக கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­வோ­ரின் எண்­ணிக்கை 5,000லிருந்து 10,000 ஆகக்­கூடும் என்று அந்த வல்­லு­நர்­கள் கணித்துள்ளனர்.

கிரு­மி­யோ­டு­தான் வாழ­வேண்டி இருக்­கும் என்று திட்­ட­மிட்டு அந்­தத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தும்­போது தொற்றுக் கூடும் என்று திரும்­பத் திரும்ப அர­சாங்­கம் வலி­யு­றுத்தி வந்­தி­ருப்­ப­தை­யும் அமைச்­சர் சுட்­டிக்­காட்­டி­னார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று மொத்­தம் 15 உறுப்­பி­னர்­கள் கொவிட்-19 தொடர்­பான கேள்­வி­களை எழுப்­பி­னார்­கள். அவர்­களில் பல­ரும் வீட்­டி­லேயே குண­ம­டை­யும் செயல்­திட்­டத்­தைப் பற்­றி­யும் அது எப்­படி செயல்­ப­டுத்­தப்­ப­டு­கிறது என்­பது குறித்­தும் கேட்­ட­னர்.

மேலும் செய்திகள் பக்கம் 4ல்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!