ஆண்டிறுதித் தேர்வு ரத்து

தொடக்கப் பள்ளி 3, 4ஆம் வகுப்பு மாணவர்க்குத் தேர்வு நடக்காது

தொடக்­க­நிலை 3, 4ல் பயி­லும் மாண­வர்­க­ளுக்­கான ஆண்­டி­றுதித் தேர்­வு­கள் ரத்து செய்­யப்­பட்­டு உள்­ளன. சமூ­கத்­தில் கொவிட்-19 பரவல் தொடர்ந்து கூடி வரு­வ­தை­ய­டுத்து, கல்வி அமைச்சு இந்த ­நடவடிக்கையை எடுத்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் கடந்த ஆண்டு கொரோனா பர­வத் தொடங்­கி­ய­தில் இருந்து, தேர்­வு­கள் ரத்து செய்­யப்­பட்­டி­ருப்­பது இதுவே முதல்­ முறை. இத­னால் ஏறக்­குறைய 70,000 மாண­வர்­கள் பாதிக்­கப்­படு­வர் என்று அறி­யப்­படு­கிறது.

ஆயி­னும், பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளு­டன் தொடக்­க­நிலை 5 மாண­வர்­க­ளுக்­கான ஆண்­டி­று­தித் தேர்­வு­கள் நடத்­தப்­படும் என்று அமைச்சு அறிக்­கை­யில் தெரி­வித்து இருக்­கிறது.

தொடக்­க­நிலை 1, 2 மாண­வர்­கள் ஆண்­டி­று­தித் தேர்வு எழுது­வ­தில்லை.

தொடக்­க­நிலை 3 முதல் 6 வரை­யி­லான மாண­வர்­க­ளுக்­கு வரும் 11ஆம் தேதி திங்­கட்­கி­ழமை­யில் இருந்து பள்­ளி­களில் நேரடி வகுப்­பு­கள் தொடங்­கும்.

தொடக்­க­நிலை 1, 2 மாண­வர்­கள் 13ஆம் தேதி புதன்­கி­ழமை­யில் இருந்து பள்­ளிக்­குத் திரும்­பு­வர் என்று கல்வி அமைச்சு அறி­வித்­தது. சென்ற மாதம் 27ஆம் தேதி­யில் இருந்து தொடக்­க­நிலை 1-5 மாண­வர்­கள் வீட்­டி­லி­ருந்­த­படி கற்று வரு­கின்­ற­னர்.

தொடக்­க­நிலை 1-5 மாண­வர்­களின் பெற்­றோர்­, இன்று 8ஆம் தேதி அல்­லது நாளை 9ஆம் தேதி தங்­க­ளின் பிள்ளை­களி­டம் 'ஏஆர்டி' பரி­சோ­தனை மேற்­கொள்ள வேண்­டும்.

பரி­சோ­தனை முடி­வு­க­ளைத் தங்­க­ளுக்கு அனுப்­பப்­படும் ஓர் இணைப்­பின் வழி­யாக அவர்­கள் தெரி­விக்க வேண்­டும்.

தொடக்­கப் பள்­ளி­க­ளுக்­கான நேரடி வகுப்­பு­கள் வரும் திங்­கள் முதல் படிப்­ப­டி­யா­கத் தொடங்­கும்.

பள்­ளிக்­கூ­டங்­க­ளுக்கு எப்­போது திரும்­பு­வது என்­பது பற்­றிய மேல் தக­வல்­கள் சிறப்புக் கல்வி பள்­ளிக்­கூடங்களைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்குத் தெரி­விக்­கப்­படும் என அமைச்சு குறிப்­பிட்­டது.

கல்வி அமைச்சு இதர பல விவ­ரங்­க­ளை­யும் நேற்று அறிக்கை யில் அறி­வித்­தது. அக்­டோ­பர் 22ஆம் தேதி பள்ளி விடு­முறை நாளாக இருக்­கும்.

இது சிறப்­புக் கல்வி பள்­ளிக்­கூ­டங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­களுக்­குப் பொருந்­தாது.

தொடக்­கப்­ பள்ளி 3 மற்­றும் 4 மாண­வர்­க­ளுக்குத் தேர்­வு­கள் ரத்து செய்­யப்­ப­டு­வ­தால் ஆண்டு முழு­வ­தும் இடம்­பெற்ற பள்­ளிக்­கூட அடிப்­ப­டை­யி­லான பல­த­ரப்­பட்ட மதிப்­பீ­டு­க­ளைச் சேர்ந்த தக­வல்­க­ளைப் பள்­ளிக்­கூ­டங்­கள் பயன்­படுத்­தும்.

அதை வைத்து மாண­வ­ரின் கற்­றல், முன்­னேற்­றம் பற்­றிய அறிக்கை­யை­யும் கருத்­து­க­ளை­யும் பரிந்­து­ரை­க­ளை­யும் பள்­ளிக்­கூ­டங்­கள் செய்­யும்.

தொடக்­கப்­ பள்­ளி­களில் நேரடி வகுப்­பு­கள் தொடங்­கு­வ­தை அடுத்து, துணைப்­பாட வகுப்பு நிலை­யங்­கள், கல்வி செறிவூட்டல் நிலை­யங்­கள், தனி­யார் கல்வி நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றில் 12 மற்­றும் அதற்­கும் குறைந்த வயதுள்ள மாண­வர்­க­ளுக்­கான நேரடி வகுப்­பு­கள் அடுத்த திங்­கட்­கி­ழமை முதல் தொடங்­க­லாம்.

இருந்­தா­லும் கூடியவரை இத்­த­கைய வகுப்­பு­களை இணை­யம் மூல­மா­கவே நடத்­தும்­படி அந்­தக் கல்வி நிலை­யங்­களை அமைச்சு கேட்­டுக்­கொண்­டது.

இத­னி­டையே, தொடக்­க­நிலை மூன்­றாம், நான்­காம் நிலை மாண­வர்­க­ளுக்­கான ஆண்­டி­று­தித் தேர்வு ரத்து செய்­யப்­பட்­டது வர­வேற்­கத்­தக்­கது என்று பெற்­றோர்­ தெரி­வித்­த­னர்.

ஆண்­டி­று­தித் தேர்வு ரத்து செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து தமிழ் முரசு செய்­திக் குழு சில பெற்­றோரிடமி­ருந்து கருத்து சேகரித்­தது. அவர்­களில் பெரும்­பா­லா­னோர் தேர்வு ரத்தை வர வேற்பதாகக் கூறினர்.

"தேர்வு எழுத முடி­யா­த­தைப் பெரி­தும் பொருட்­ப­டுத்­த­வில்லை. ஆசி­ரி­யர்­கள் விட்­டுப்­போன பாடங்­களை வகுப்­ப­றை­யில் சொல்­லிக்­கொ­டுக்க இது நல்ல தரு­ணம் என நம்­பு­கி­றேன்," என்று சின்­மின் தொடக்­கப்­ பள்­ளி­யில் மூன்­றாம் நிலை­யில் படிக்­கும் மக­ளின் தந்­தை­யும் கணினித் துறை நிர்­வா­கி­யு­மான 39 வயது கிரு‌ஷ்ணா குமார் தெரி­வித்­தார்.

"இத்­த­ரு­ணத்­தில் பிள்­ளை­களின் பாது­காப்பே முக்­கி­யம், ஆத­லால் பள்ளி விடு­முறை வரும் வரை­ வீட்­டி­லி­ருந்தே அவர்­கள் கற்­ப­தா­க­வும் இருந்­தால், அதற்கு முழு ஆத­ர­வும் தரத் தயார்," என கேன்­பரா தொடக்­கப்­ பள்ளி நான்­காம் நிலை­யில் படிக்­கும் மக­ளின் தாயா­ரான சொந்த தொழில் நடத்தும் 45 வயது திரு­மதி கோ.ந. கவிதா கூறி­னார்.

கூடு­தல் செய்தி:

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!