தேக்கா நிலையத்தின் முதல் தளம் மூடல்

கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டதால் தூய்மைப் பணிகளுக்காக நாளை ஞாயிறுவரை மூடப்பட்டிருக்கும்

கொவிட்-19 தொற்று கண்­ட­றி­யப்­பட்­டதை அடுத்து, உண­வங்­காடி நிலை­ய­மும் ஈரச் சந்­தை­யும் அமைந்­துள்ள தேக்கா நிலை­யத்­தின் முதல் தளம் நேற்று தொடங்கி நாளை ஞாயிற்­றுக்­கி­ழமைவரை மூடப்­பட்­டி­ருக்­கும்.

இரண்­டாம் தளத்­தில் அமைந்­தி­ருக்­கும் சில்­லறை விற்­ப­னைக் கடை­கள் வழக்­கம்­போல் செயல்­படும்.

உண­வங்­காடி நிலை­யத்­தில் வாடிக்­கை­யா­ளர்­கள் முகக்­க­வ­சத்தை அகற்­றி­விட்டு உணவு உண்­பர் என்­ப­தால் தேக்கா நிலை­யத்­தின் முதல் தளம் மட்டுமே பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக தஞ்­சோங் பகார் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஆல்­வின் டான், ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் தெரி­வித்­தார்.

அச்சத்தைப் போக்கும்விதமாக தாமும் தம் குழு­வி­ன­ரும் பாதிக்­கப்­பட்ட கடைக்­கா­ரர்­கள் பல­ரை­யும் தொடர்­பு­கொண்டு வருவதாக திரு டான் கூறி­னார்.

"தேக்கா சந்­தைக்கு அடிக்­கடி வந்து செல்­வோர்க்­கும் கடைக்­கா­ரர்­க­ளுக்­கும் உறு­தி­ய­ளிக்க முயன்று வரு­கி­றோம். அவர்­கள் ஏற்­கெ­னவே கொவிட்-19 தடுப்­பூசி, குறிப்­பாக 'பூஸ்­டர்' தடுப்­பூசி­யும் போட்­டி­ருந்­தால் அவர்­கள் அதி­கம் கவ­லைப்­ப­டத் தேவை­ இல்லை," என்­றார் திரு டான்.

இருப்­பி­னும், பாது­காப்பு நட­வடிக்­கை­யாக தேக்கா நிலை­யத்­தின் முதல் தளம் மூடப்­பட்­டுள்­ளது என்று அவர் சொன்­னார்.

அத்­து­டன், கடந்த சில மாதங்­களாக தேக்கா நிலை­யத்­தில் பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்தி வரு­வ­தாக திரு டான் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

"நானும் அடிக்­கடி தேக்கா நிலை­யத்­திற்­குச் செல்­வேன். அங்­குள்ள கடைக்­கா­ரர்­கள் பல­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருப்­பதை அறி­வேன். அத­னால், கொரோனா தொற்­றி­னா­லும் அது தங்­க­ளைக் கடு­மை­யா­கப் பாதிக்­கா­மல் அவர்­கள் பாது­காத்­துக்­கொண்­டுள்­ள­னர்," என்று திரு டான் கூறி­யுள்­ளார்.

கடந்த சில வாரங்­க­ளாக, வேண்­டு­மென்றே கொவிட்-19 பாது­காப்பு நடை­மு­றை­களை மீறிய வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கும் கடைக்­கா­ரர்­க­ளுக்­கும் அழைப்­பா­ணை­கள் வழங்­கப்­பட்­டன என்­றும் வர்த்­தக, தொழில் துணை அமைச்­ச­ரு­மான டான் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!