நீக்கப்படும் தனிமை உத்தரவு, எளிதாகும் விதிமுறைகள்

கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­கும் அவர்­க­ளு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தோ­ருக்­கும் தனிமை உத்­த­ர­வு, அனு­மதி இல்­லா­மல் விடுப்பு எடுப்­ப­தற்குக் கார­ணம் கேட்­கும் முறையும் நீக்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவர்­க­ளுக்­கான எளி­மைப்­ப­டுத்­தப்­பட்ட விதி­மு­றை­கள் நாளை முதல் நடப்­புக்கு வரும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சுகா­தா­ரப்

பரா­ம­ரிப்பு விதி­மு­றை­களை எளி­தில் புரியவைக்­க­வும் தனிமை உத்­த­ரவு அதி­கா­ரி­கள் உட்­பட அர­சாங்க வளங்­கள் எதிர்­நோக்­கும் பணிச்­சு­மை­யைக் குறைக்­க­வும் இந்த மாற்­றம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

புதிய நடை­மு­றை­யின்­கீழ் கொவிட்-19க்கான அறி­குறி இருந்து கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக உறுதி செய்­யப்­ப­டு­வோர், அறி­குறி இல்­லா­த­போ­தி­லும் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக உறுதி செய்­யப்­

ப­டு­வோர், பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தோர் ஆகி­யோ­ருக்­கான மூன்று

விதி­மு­றைப் பிரி­வு­கள் உள்ளன.

அறி­குறி இருந்­தால் ஏஆர்டி பரி­சோ­தனை செய்­து­கொள்ள மருத்து­ வரை நாட வேண்­டும். கிரு­மித்­தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டால் வீட்­டி­லேயே இருந்து வீட்­டில் குண­ம­டை­தல் திட்­டத்­தின்­கீழ் அடுத்து என்ன செய்­வது என்­ப­தைத் தெரிந்­து­கொள்ள காத்­தி­ருக்க வேண்­டும். முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வ­ராக இருந்­தால் பத்து நாட்­களில் அவர் வழக்­க­நி­லைக்­குத் திரும்­ப­லாம். தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் 14 நாட்­கள் கழித்து வழக்­க­நிலைக்குத் திரும்­ப­லாம்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முடி­யாத 12 வய­துக்­கும் குறை­வான சிறு­வர்­கள் பத்து நாட்­கள் கழித்து வழக்­க­நி­லைக்­குத் திரும்­ப­லாம்.

தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளும் கால­கட்­டம் நிறை­வ­டைந்­த­தும் மின்­னி­யல் தகவல் குறிப்­பு வழங்­கப்­படும். அறி­குறி இல்­லா­த­போ­தி­லும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் 72 மணி நேரத்­துக்கு தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும். அதை­ய­டுத்து, கிரு­மித்­தொற்று இல்லை என்று உறுதி செய்­யப்­பட்­டால் அவர்கள் வழக்­க­நி­லைக்­குத் திரும்­ப­லாம். தொடர்ந்து பாதிக்­கப்­பட்­டி­ருந்­தால் குண­ம­டை­யும் வரை அவர்­கள் தின­மும் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும். மூச்­சுத் திண­றல் அல்­லது கடு­மை­யான காய்ச்­சல் போன்ற பாதிப்­பு­கள் ஏற்­ப­டா­த­வரை இப்­

பி­ரி­வி­னர் மருத்­து­வரை நாடத் தேவை­யில்லை. கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டும் அறி­குறி இல்­லா­தோர் தொடர்ந்து வீட்­டி­லி­ருந்து பணி­

பு­ரி­ய­லாம். பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தோ­ருக்கு இனி தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­டாது. மாறாக, அவர்­

க­ளுக்கு சுகா­தார ஆபத்து

எச்­ச­ரிக்கை விடுக்­கப்­படும். அதை­அடுத்து, அவர்­கள் தானி­யங்கி இயந்­தி­ரங்­க­ளி­லி­ருந்து ஏஆர்டி சாத­னங்­க­ளைப் பெற்­றக்­கொண்டு ஏழு நாட்­க­ளுக்கு தங்­கள் உடல்­

ந­லத்­தைக் கண்­கா­ணிக்க வேண்­டு­ம். கிருமித்தொற்று ஏற்படவில்லை என்று அன்றாடம் செய்துகொள்ளும் பரிசோதனையில் தெரியவந்தால் அவர்கள் வெளியே செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!