தடுப்பூசியை பலர் நாடுகின்றனர்

பக்­க­வி­ளை­வு­க­ளுக்கு அஞ்சி, கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சி­யைச் சிலர் போட்­டுக்­கொள்­ளா­மல் தாம­தித்­த­னர். தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள், உண­வங்­காடி நிலை­யங்­கள் உட்­பட எல்லா இடங்­க­ளி­லும் அமர்ந்து உணவு உண்ண முடி­யாது என்று சனிக்­கி­ழ­மை­யன்று அறி­விக்­கப்­பட்­டதை அடுத்து, மனதை மாற்­றிக்­கொண்­ட­னர்.

சனிக்­கி­ழமை முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வ­தற்­காக மேலும் பலர் தங்­களை நாடி வரு­வ­தாக மருந்­த­கங்­களும் தனி­யார் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் சேவை வழங்­கு­நர்­களும் தெரி­வித்­துள்­ளன.

சமூ­கத்­தில் பதி­வா­கும் கொவிட்-19 சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­வ­தால் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் உண­வங்­காடி நிலை­யங்­கள், காப்­பிக் கடை­களில் அமர்ந்து உண­வ­ருந்­த­வும் கடைத்­தொகுதி­களுக்­குள் செல்­ல­வும் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்­கள் என்று அறி­விக்­கப்­பட்­டது.

அத்துடன் 11 நாடு­க­ளுக்­குத் தனிமை உத்­த­ரவு ஏது­மின்றி, தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் செல்­லக்­கூ­டிய சிறப்­புப் பய­ணத் தடத் திட்­ட­மும் (விடி­எல்) அறி­விக்­கப்­பட்­டது. இந்­நி­லை­யில், தடுப்­பூ­சியை நாடி வரு­வோ­ரில் பெரும்­பா­லா­னோர் 'பூஸ்­டர்' தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வ­தாக பிர­தான தனி­யார் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வழங்­கு­நர்­கள் தெரி­வித்­த­னர். வார இறு­தியை அடுத்து பூஸ்ட்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள வரு­வோ­ரில் 20% அதி­கரிப்பு இருப்­ப­தாக 12 தடுப்­பூசி மையங்­களைக் கொண்ட 'ராஃபிள்ஸ் மெடிக்­கல் குரூப்' குறிப்­பிட்­டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!