கவனிப்பாரின்றி தங்குவிடுதியில் பரிதவிப்பு

புதி­தாக ஜூரோங் பகு­தி­யில் எழுப்­பப்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர் தங்கு­வி­டு­தி­யில் குழப்பநிலை. குறை­பா­டு­கள் உள்ள வசிப்­பி­டம், கொவிட்-19 தொடர்­பில் விரைந்து மருத்­துவ உதவி பெறுவதில் வசதியின்மை குறித்து அத்­தங்­கு­வி­டு­தி­யில் வசிக்­கும் ஊழி­யர்­கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ள­னர்.

ஜூரோங்­கின் 'வெஸ்ட்­லைட் ஜாலான் துக்­காங்' தங்­கு­வி­டுதி நிலை­மை­யைக் காட்­டும் படங்­களும் காணொ­ளி­களும் செவ்­வாய்க்­கிழமை­யி­லி­ருந்து பல்­வேறு இணை­யத்­த­ளங்­களில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. தாங்­கள் எவ்­வாறு நடத்­தப்­ப­டு­கி­றார்­கள் என்­பது குறித்து ஊழி­யர்­கள் தங்­க­ளின் குமு­றல்­களை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

நிலைமை முற்­றிய நிலை­யில் நேற்று முன்­தி­னம், தங்­கு­வி­டுதி நிர்­வா­கத்­தி­ன­ரி­டம் பேச ஊழி­யர்­கள் ஒன்று திரண்­டு­விட்­ட­னர்.

அதன் பிறகு கல­கத்­த­டுப்பு போலிஸ் படை அவ்விடத்திற்கு வர­வ­ழைக்­கப்­பட்­ட­னர்.

தங்­கு­வி­டு­தி­யின் 2,000 ஊழி­யர்­களில் கிட்­டத்­தட்ட 500 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­ட­தாக 'வீசெட்' செய்­தித் தளத்­தி­டம் ஊழி­யர்­கள் தெரி­வித்­த­னர்.

இருப்­பி­னும், மருத்­துவ உதவி பெறு­வ­தில் தங்­க­ளுக்­குப் போது­மான வசதி செய்து தரப்­ப­ட­வில்லை என்­றும் தொற்று கண்­ட­வர்­களை முறை­யா­கத் தனி­மைப்­ப­டுத்­தும் முயற்சி மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­றும் கூறப்­ப­டு­கிறது.

கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள், தங்­கு­வி­டுதி அறை­க­ளுக்கு வெளியே நடை­பாதை­களில் உறங்­கு­வ­தா­கக் காட்­டும் படங்­கள் இணை­யத்­தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

மருத்­துவ உதவி கிட்­டும்­வரை அறை நண்­பர்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று பர­வா­மல் இருக்க, நோயாளி­கள் இவ்­வாறு செய்­த­தாகக் கூறப்­ப­டு­கிறது.

வெவ்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த தங்­கு­வி­டு­தி­வா­சி­கள் திரண்டு தங்­க­ளின் வேத­னை­யைக் கூறி­ய­தாக அறி­யப்­ப­டு­கிறது.

புழுக்­கள் உள்ள உண­வும் கெட்­டுப் போன உண­வும் தங்­க­ளுக்­குத் தரப்­ப­டு­வ­தா­க­வும் சில ஊழி­யர்­கள் கூறி­யுள்­ள­னர்.

முதற்­கட்ட விசா­ர­ணை­யில், கொவிட்-19 தொற்று இருப்­பதாக உறுதி­செய்­யப்­பட்ட ஊழி­யர்­களை முறை­யான வளா­கங்­க­ளுக்கு அனுப்பு­வ­தில் தாம­தம் ஏற்­பட்­டி­ருப்­பதை மனி­த­வள அமைச்சு கண்­ட­றிந்­த­தா­கக் குறிப்­பிட்­டது.

"தங்­கு­வி­டு­தி­களில் வசிக்­கும் எங்­கள் வெளி­நாட்டு ஊழி­யர் சகோ­த­ரர்­க­ளுக்­குக் குறித்த நேரத்­தில் தகுந்த மருத்­துவ உதவி கிடைப்­பதை நான் உறு­தி­செய்­வேன்," என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் இதன் தொடர்பில் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!