எரிசக்திச் சந்தை ஆணையம் உறுதி

சிங்கப்பூரில் சவால்களை எதிர்கொள்ளும் மின்சார விநியோக சில்லறை வர்த்தகர்களுடன் அணுக்கமாகப் பணியாற்றி வருவதாக எரிசக்திச் சந்தை ஆணையம் தெரிவித்துள்ளது. உலகளாவிய எரிபொருள் விலையேற்றம், நிலையற்ற சந்தை நிலவரங்கள் ஆகியவற்றால் ஏற்பட்ட 'வழக்கத்திற்கு மாறான சூழல்' இந்த சவால்களை உருவாக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

மின்விநியோக சில்லறை வர்த்தகர்கள் தங்களது பணிகளைக் கைவிட்டாலோ அல்லது தற்

காலிகமாக நிறுத்திவிட்டாலோ வாடிக்கையாளர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று ஆணையம் கூறியுள்ளது.

அதேநேரம் தங்களது பணிகளை இப்போதைக்குத் தொடர விரும்பாத சில்லறை வர்த்தகர்கள் தங்களிடம் உள்ள வாடிக்கையாளர்களை தேசிய மின் சேவை அமைப்பான எஸ்பி குழுமத்திற்கு மாற்றிவிடுவதன் மூலம் தங்களது பணிகளைத் தாராளமாக நிறுத்திக்கொள்ள ஆணையம் அனுமதிக்கிறது. முன்னதாக வாடிக்கையார்கள் மாற்றம் தொடர் பில் ஒரே மாதிரி ஒப்பந்தத்தில் இருக்கும் மற்ற நிறுவனங்களை அவை அணுகவேண்டும்.

பணிகளை முழுமையாக நிறுத்த விரும்பும் வர்த்தகர்களும் தங்களது வாடிக்கையாளர்களை எஸ்பி குழுமத்திற்கு மாற்றிவிட வேண்டும். இந்த மாற்றம் சுமுகமாக நடைபெறுவதை ஆணையம் கண்காணித்து உறுதி செய்யும்.

மூன்று நாட்களில் இரு மின்விநியோக வியாபார நிறுவனங்கள் திறந்தநிலை மின்சாரச் சந்தையில் இருந்து அடுத்தடுத்து வெளியேறியதைத் தொடர்ந்து ஆணையத்தின் அறிக்கை வெளி வந்துள்ளது. ஐஸ்விட்ச் (iSwitch), ஓஎச்எம் (Ohm) எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் அவை. சந்தையின் நிலையற்ற போக்கு, தாக்குப் பிடிக்க முடியாத விலைத் திட்டங்கள் ஆகியவற்றை வெளியேற்றத்திற்கான முக்கிய காரணங்

களாக அவை குறிப்பிட்டன.

மேலும், வெஸ்ட் எலெக்ட்ரிசிட்டி சப்ளை, டைமண்ட் எலெக்ட்ரிக் ஆகிய மின்விநியோக நிறு

வனங்கள் புதிய வாடிக்கையாளர் சேர்ப்பை நிறுத்தி உள்ளன.

"இதுபோன்ற சூழல்களில் வாடிக்கையாளர்களுக்கான மின் விநியோகம் பாதிக்கப்படாது. வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்தி இருந்தால் மின்கட்டணம் கழித்தது போக எஞ்சிய தொகையை அவர் களிடம் திருப்பித் தரவேண்டி

யது வர்த்தக நிறுவனங்களின் பொறுப்பு," என்றது ஆணையம்.

பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு; மின் விநியோகம் தடைபடாது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!