சிராங்கூன் சாலை - கேம்பல் லேன் சந்திப்பில் பாதசாரிகள் சாலையைக் கடக்குமிடம் மூடல்

தீபாவளி நெருங்குவதை முன்னிட்டு, லிட்டில் இந்தியாவில் கூட்ட நெரிசலைத் தடுக்கும்விதமாக மேம்பட்ட பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்து இருந்தனர்.

சிராங்கூன் சாலை - கேம்பல் லேன் சந்திப்பில் பாதசாரிகள் சாலையைக் கடக்குமிடம், இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 29) முதல் நாளை மறுதினம் (அக்டோபர் 31) வரை மாலை 6 மணியில் இருந்து இரவு 1 மணிவரையிலும் தீபாவளிக்கு முந்திய நாளில் (நவம்பர் 3) மாலை 6 மணியில் இருந்து இரவு 2 மணிவரையிலும் மூடப்படும் என்று சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் தெரிவித்து இருந்தது.

“சுங்கை சாலையிலும் டன்லப் ஸ்திரீட்டிலும் உள்ள மற்ற இரு சாலையைக் கடக்குமிடங்களுக்கு மக்கள் திருப்பிவிடப்படுவர். உச்ச வேளைகளில் லிட்டில் இந்தியாவின் முக்கியப் பகுதிகளில் நெரிசல் ஏற்படாமல் தடுப்பதை இது உறுதிப்படுத்தும்,” என்று கழகம் கூறி இருந்தது.

தீபா­வளி நெருங்க நெருங்க லிட்­டில் இந்­தி­யா­வில் கூட்­டம் அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வாடிக்கையாளர்கள் வெவ்வேறு நேரங்களில் பொருள் வாங்க வசதியாக சில கடைகள் தங்கள் வர்த்தக நேரத்தை நீட்டிப்பதாகத் தெரிவித்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!