உலகம் பொருளியல் மீட்சிகாணும் வேளையில் ஒருங்கிணைந்த மீள்திறனைக் கட்டியெழுப்புவது அத்தியாவசியமான தேவை என சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டின் ஜி-20 உலகத் தலைவர்கள் மாநாட்டில் கொவிட்-19 கொள்ளைநோய் தொடர்பான அம்சங்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன.
உலகப் பொருளியல் தொடர்ந்து மீட்சி கண்டு வந்தாலும் அது இன்னும் சம அளவை எட்டாத நிலையில் உலக ஒத்துழைப்பின் அவசியத்துக்கான அழைப்பை பிரதமர் லீ விடுத்தார்.
ஜி-20 மாநாட்டில் நேற்று நடைபெற்ற உலகப் பொருளியல் மற்றும் உலக சுகாதாரம் தொடர்பான அரங்கில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.
"இனிவரும் காலத்தில் தடுப்பூசி தயாரிப்பையும் அவற்றின் வழங்கலையும் விரைவு
படுத்துவது இன்னும் அதிகமான நீடித்த, சமமான மீட்சியை உறுதி செய்யும்.
"அதேநேரம் நீண்டகாலப்போக்கில் கொள்ளைநோய் எதிர்ப்புக்கான ஆயத்தநிலையும் சமாளிப்புத் திறனும் அவசியமானவையாகக் கருதப்படும்," என்றார் திரு லீ.
இவ்வாண்டு ஜி-20 மாநாடு இத்தாலியில் நடத்தப்பட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜி-20 தலைவர்கள் நேரடியாக வருகையளித்து மாநாட்டில் கலந்துகொண்டு வருகின்றனர்.
கொள்ளைநோய் பரவலின்போது முன்
களத்தில் பணிபுரிந்தவர்களைச் சிறப்பிக்கும் வண்ணம் சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்
களுடன் இணைந்து உலகத் தலைவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
உலக ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதில் இத்தாலியின் தலைமைத்துவம் குறித்து திரு லீ கருத்துரைத்தார்.
தொடர்ந்து ஜி-20 நாடுகளின் சுகாதார, நிதி அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்ைப அவர் வரவேற்றார்.
இனி புதிதாக தொற்றக்கூடிய கொள்ளை நோய்களை அரசாங்கங்கள் ஒன்றிணைந்து சமாளிக்கும் வகையில் உலகப் பணிக்குழு ஒன்றை அந்த அமைச்சர்கள் அறிவித்திருந்தனர். இதுபோன்ற நடவடிக்கைகள் சுகாதாரப் பராமரிப்பு நிதியளிப்புக்கான அவசியமான தொடக்கம் என்றார் பிரதமர் லீ.
"தற்போதைய உலகளவிலான பொது சுகாதாரத்திற்கு கணிசமான அளவில் நிதி தேவைப்படுகிறது. அதன் மீது கவனம் செலுத்தக்கூடிய ஒட்டுமொத்த நடவடிக்கைக்கான காலமும் அதிகமாக உள்ளது.
"இந்நிலையில் நம்பகத்தன்மையுடனான உலக ஆட்சிமுறைகளை உள்ளடக்கிய, நீடித்த நிலைத்தன்மையுடனான நிதியளிப்புக்குரிய திட்டமிடல் அவசியமாகிறது. உலக சுகாதாரப் பாதுகாப்பில் நிலவும் இடைவெளியைப் பூர்த்தி செய்ய இது உதவும்," என்று திரு லீ தெரிவித்தார். இந்த அம்சங்களை உலக சுகாதார நிறுவனம் கவனத்தில் கொண்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.
ஜி-20 உயர்மட்ட சுயேச்சைக் குழுவுக்கு சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் இணைத் தலைமை ஏற்றதை நினைவுபடுத்திய திரு லீ, இக்குழுவுக்குப் பங்களிப்பதில் சிங்கப்பூர் மகிழ்ச்சி அடைகிறது என்றார்.
அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு, உலக சுகாதார நிறுவனம், அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் போன்ற அமைத்துலக அமைப்புகளுடன் உலகத் தலை வர்கள் இன்னும் அதிகமாக இணைந்து பணியாற்ற பிரதமர் லீ தமது உரையில் அழைப்பு விடுத்தார்.