‘ஒரு சில மாதங்களில் தளர்வுகள் சாத்தியம்’

சிங்­கப்­பூ­ரில் கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ரான கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தும் காலம் வெகு­தொ­லை­வில் இல்லை என்ற நம்­பிக்­கையை பிர­த­மர் லீ சியன் லூங் தந்­துள்­ளார்.

பல ஐரோப்­பிய நாடு­க­ளைப் போல சிங்­கப்­பூ­ரும் தளர்­வு­களை நோக்கிச் செயல்­பட்டு வரு­கிறது. உயி­ரி­ழப்­பு­களை இயன்ற அளவு குறை­வாக வைத்­தி­ருக்க முயற்சி செய்கிறது. கட்டுப்பா­டு­க­ளைத் தளர்த்­து­வ­தற்கு ஒரு சில மாதங்கள் ஆகலாம் என்று பிர­த­மர் லீ கூறி­யுள்­ளார்.

இத்­தா­லி­யின் ரோம் நக­ரில் நடந்த ஜி-20 மாநாட்­டில் கலந்து கொள்­வ­தற்­காக அங்கு சென்ற அவர் தமது பய­ணத்­தின் இறு­தி­யில் ஞாயிற்­றுக்­கி­ழமை அன்று சிங்­கப்­பூர் செய்­தி­யா­ளர்­க­ளுக்­குப் பேட்­டி­ய­ளித்­தார்.

தற்­போது பல ஐரோப்­பிய நாடு­களில் முகக்­க­வ­சம் அணிய வேண்­டி­யதில்லை. பாது­காப்பு இடை­வெளி விதி­மு­றை­கள் தளர்த்தப்பட்­டுள்­ளன. மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை மீண்டு வரு­கிறது. அந்த வகை­யில் இத்­தா­லி ­யின் வழியை சிங்­கப்­பூர் பின்­பற்­றுமா என்று செய்­தி­யா­ளர்­கள் அவ­ரி­டம் கேள்வி கேட்­ட­னர்.

இதற்­குப் பதி­ல­ளித்த பிர­த­மர் லீ, இத்­தா­லியை சிங்­கப்­பூர் நில வரத்­து­டன் ஒப்­பிட்டு விளக்­கம்­அளித்­தார்.

"இத்­தாலி 60 மில்­லி­யன் மக்­கள்­தொ­கை­யைக் கொண்­டது. இதுவரை அங்கு 4.7 மில்­லி­யன் பேர் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். ஏறக்­கு­றைய 132,000 பேர் இறந்­து­விட்­ட­னர்.

"சுமார் 5.45 மில்­லி­யன் மக்­கள்­தொகை கொண்ட சிங்­கப்­பூரை இத்­தாலி நில­வ­ரத்­து­டன் ஒப்­பிட்­டால் 440,000 தொற்­றுச் சம்­ப­வங்­கள் ஏற்­பட்­டி­ருக்க வேண்­டும். 11,000 முதல் 12,000 பேர் தொற்­றால் இறந்­தி­ருக்க வேண்­டும். ஆனால் சிங்­கப்­பூ­ரில் ஞாயிறு வரை 200,000க்கும் கீழ் தொற்றுச்­ சம்­பவங்­கள் உள்­ளன. 407 பேர் மர­ண­ம­டைந்­துள்ளனர்.

"தொற்­றால் பாதிக்­கப்­பட்டு குண­ம­டைந்­த­வர்­கள் எண்­ணிக்­கை­யைப் பார்த்­தால் இத்­தாலி தற்­போ­துள்ள நிலையை சிங்­கப்­பூர் பாதிக்கு மேல் கடந்­து­விட்­டது," என்று திரு லீ குறிப்பிட்டார்.

குறை­வான உயி­ரி­ழப்­பு­க­ளு­டன் சிங்­கப்­பூர் அந்த நிலையை எட்ட வேண்­டும் என்று வலியுறுத்திய அவர், நிலைமை மீண்­டும் மாறக்­கூ­டும்," என்று எச்­ச­ரித்­தார்.

இதற்கு ஐரோப்பாவில் தொற்றுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்க வேண்டிய அவசியம் ஏற்படுமா என்று நிலைமையை ஐேராப்பிய அரசாங்கங்கள் உன்னிப்பாகக் கவனித்து வரு வதாக அவர் சொன்னார்.

"பல நாடுகளில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது. குளிர்காலம் வருவதால் தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது. குளிரான வறண்ட பருவநிலையில் கிருமி உயிர்வாழும் சாத்தியம் அதிகம். இந்த நிலைமை நமக்கும் ஏற்படலாம். இதனால் சிங்கப்பூரில் மீண்டும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் சூழல் ஏற்படலாம். ஆனால் நாம் முன்னேறி வரு கிறோம். கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் சூழலை அடையும் நம்பிக்கை நமக்குள்ளது," என்று பிரதமர் லீ தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!