சிங்கப்பூரின் மின்னிலக்கமயம் அடுத்த மாற்றத்துக்கு தயாராகிறது
சிங்கப்பூரின் மின்னிலக்கமயம் புதிய மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது.
எதிர்காலத்தில் சைக்கிள் ஓட்டுபவர்களும் வாகனம் ஓட்டு பவர்களும் ஒருவருக்கு ஒருவர் எப்படிச் செயல்படுகிறார்கள் என் பதுகூட இந்த மின்னிலக்கமயத்தால் ஆராயப்படும்.
இதற்காக கண்காணிப்புக் கேமரா, உணர்வுக் கருவிகளில் இருந்து சேகரிக்கப்படும் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படும்.
இது, போக்குவரத்து கொள்கைளை வகுப்பதற்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொவிட்-19 நோயாளிகளின் நடமாட்டத்தையும் கம்பியில்லாத் தொடர்பு மூலம் கவனிக்க முடியும்.
இவை, சிங்கப்பூரின் மின்னிலக்கமயமாக்கலை அடுத்த கட்டத் திற்கு இட்டுச் செல்லும் 174 மில்லியன் வெள்ளி மதிப்பிலான புதிய ஆய்வுத் திட்டங்களின் கீழ் அறிவிக்கப்பட்ட சில திட்டங்களாகும்.
அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோவுடன் சேர்ந்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் 54 மில்லியன் வெள்ளி செலவில் புதிய ஆயுவுக்கூடத்தை அமைத்துள்ளது.
மற்றொரு முயற்சியாக, தொழில்நுட்ப, தற்காப்பு, பொறியியல் நிறுவனமான எஸ்டி இன்ஜினியரிங், நான்கு பங்காளிகளு டன் சேர்ந்து 120 மில்லியன் வெள்ளி மதிப்பிலான கூட்டு ஆய்வுத் திட்டத்தில் ஈடுபடவிருக்கிறது.
சிஸ்கோ-என்யுஎஸ் ஆய்வுக் கூடத்தை நேற்று தொடங்கி வைத்துப் பேசிய வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், புதுமைகளைப் புகுத்தவும் புதிய வர்த்தக மாதிரிகளை உருவாக்கவும் நிறுவனங்களுக்கு இடையிலான இத்தகைய கூட்டு முயற்சிகள் தேவை என்றார்.
அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட 'சிஸ்கோ' போன்ற நிறுவனத்தின் வழியை மற்ற நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சிஸ்கோ-என்யுஎஸ் கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள புதிய துரித மின்னிலக்கப் பொருளியல் ஆய்வகம், பல துறைகளை உள்ளடக்கிய ஆய்வுகளில் ஈடுபட விருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு, சுகாதாரப் பராமரிப்பு, இணையப் பாதுகாப்பு, நகர்ப்புற உள்கட்டமைப்பு, வேலையிட உற்பத்தி போன்ற துறைகளில் புதிய புத்தாக்க வழிகளையும் தீர்வுகளையும் அது கண்டறியும்.
தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் ஆதரவுடன் 17 தொழில்நுட்ப தீர்வுகளையும் 12 உற்பத்தி மற்றும் சேவைகளை உருவாக்கவும் சிஸ்கோ-என்யுஎஸ் ஆய்வுக் கூடம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த நவீன தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் பயன்படுத்தி மின்னிலக்க உத்திகளுக்கு மாறி போட்டித் திறனுடன் விளங்கலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் 25 பில்லியன் ஆய்வு, புத்தாக்கம், நிறுவன 2025ஆம் ஆண்டு திட்டத்தின் ஒரு பகுதி இது.
என்யுஎஸ் கென்ட் ரிட்ஜ் வளாகத்தில் புதிய ஆய்வுக்கூடம் அமைந்துள்ளது. இதன்மூலம் இருபது ஆய்வு, மேம்பாட்டு வேலை வாய்ப்புகள் உருவாகும். ஏறக்குறைய 100 ஆய்வாளர்கள், பகுப்பாய்வாளர்கள், பொறியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி வாய்ப்புகள் கிடைக்கும்.
இதற்காக சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் 100க்கும் மேற்பட்ட உள்ளூர் நிறுவனங்களுடன் ஆய்வுக்கூடம் சேர்ந்து செயல்படவிருக்கிறது.
"புத்தாக்க வழிகளால் நிறுவனங்கள் செலவுகளைக் குறைத்து உற்பத்தியை பெருக்கி, வருமானத்தை அதிகரித்து மேம்பட்ட நிலையை அடைய முடியும்," என்று அமைச்சர் கான் மேலும் தெரிவித்தார்.