சிறாருக்கு தடுப்பூசி: சிங்கப்பூர் இம்மாதம் முடிவு செய்யும்

சிங்­கப்­பூ­ரில் 5 வயது முதல் 11 வயது வரைப்­பட்ட சிறார்­க­ளுக்கு ஃபைசர்-பயோ­என்­டெக் தடுப்­பூசி­யைப் போட­லாமா, வேண் டாமா என்­பது பற்றி இம்மாதப் பிற்­ப­கு­தி­யில் வல்­லு­நர் குழு முடிவு செய்­யும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரிவித்து இருக்­கி­றார்.

அமெ­ரிக்­கா­வில் இதே வய­துள்ள சிறார்­க­ளுக்கு ஃபைசர் தடுப்­பூ­சியைப் போட­லாம் என்று அமெ­ரிக்க உணவு, மருந்து நிர்­வாக அமைப்பு அண்­மை­யில் அங்­கீ­கா­ரம் வழங்­கி­யது.

அதை­ய­டுத்து திரு ஓங் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.

கொவிட்-19 பணிக்குழு செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய அமைச்­சர், ஃபைசர் நிறு­வ­னம் மருந்­தக சோத­னை­களை நடத்தி 5 முதல் 11 வயது வரைப்­பட்ட சிறார்­க­ளுக்கு, பெரி­ய­வர்­க­ளுக்­கான ஊசி மருந்­தில் மூன்­றில் ஒரு பங்கைப் பரிந்­து­ரைத்­தது என்­பதை­யும் அதை­ய­டுத்து அமெ­ரிக்க உணவு, மருந்து நிர்வா­க அமைப்பு இதன்­ தொடர்­பில் முடிவு எடுத்­த­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 தடுப்­பூசி தொடர்­பான சிங்­கப்­பூ­ரின் வல்­லு­நர்­கள் குழு, அமெ­ரிக்க ஆய்வு பற்­றிய தக­வல்­களை ஆராய்ந்­தது.

ஒட்­டு­மொத்­த­மாக 5 முதல் 11 வயது வரைப்­பட்ட சிறாருக்குத் தடுப்­பூசி போடு­வது நன்மை­யளிக்­கும் ஒரு நடை­முறை என்று அது மதிப்­பிட்டு உள்­ள­தா­க­வும் அமைச்­சர் குறிப்பிட்டார்.

இதன்­தொ­டர்­பில் சுகா­தார அமைச்சு, ஆய்வு ஒன்றை நடத்­தும் என்­றும் அமைச்­சர் ஓங் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!