மலேசியா: அதிகரிக்கும் தொற்று

மலேசியா: அதிகரிக்கும் தொற்று

2 mins read
68bc3e04-18d6-423f-b3fe-799fe8cfd4bc
மலேசியா பொருளியலைத் திறந்துவரும் வேளையில் தொற்று அதிகரித்துள்ளது. படம்: ராய்ட்டஸ் -

மலே­சி­யா­வில் நேற்று 6,517 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இது அக்­டோ­பர் மாதம் 22ஆம் தேதிக்குப் பிறகு பதி­வான ஆக அதி­க­மான தொற்று எண்­ணிக்கை ஆகும்.

தொடர்ந்து மூன்­றா­வது நாளாக 6,000க்கும் மேலான தொற்றுச் சம்­ப­வங்­கள் அங்கு பதி­வா­கி­யுள்­ளன.

ஒவ்­வொரு தொற்று சம்­ப­வத்­தா­லும் சரா­ச­ரி­யாக புதி­தாக இன்­னொரு தொற்று சம்­ப­வம் நேற்று ஏற்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கிருமித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வ­ரி­டம் இருந்து சரா­ச­ரி­யாக வேறு எத்­தனை பேர்க்குத் தொற்று பர­வ­லாம் என்­ப­தைக் குறிப்­பி­டும் 'ஆர்-நாட் (R0) மதிப்பு ஒன்றை எட்­டி­யுள்­ளது. நேற்று முன்­தி­னம் இது 0.99 ஆக இருந்தது.

இதன்­தொ­டர்­பில், மலே­சிய சுகா­தார அமைச்­சின் தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா, சில மாநி­லங்­களில் நோய்த்­தொற்று விகி­தம் உண்­மை­யில் 1க்கு மேல் இருப்­ப­தாக நேற்­றைய ஃபேஸ்புக் பதி­வில் தெரி­வித்­துள்­ளார்.

ஜூலை பிற்­ப­கு­தி­யில் இருந்து குறைந்து வந்த தொற்று விகி­தம் அக்­டோ­பர் 20ஆம் தேதி முதல் அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யது.

மருத்­து­வ­ம­னை­ சேர்க்­கை­யை­யும் மற்ற முக்­கிய அறி­கு­றி­க­ளை­யும் கண்­கா­ணித்து வரு­வ­தாக சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­டின் டுவிட்­டர் பதி­வில் தெரிவித்தார்.

தேசிய அள­வில் கடந்த ஏழு நாள்­களில் கிரு­மித்­தொற்­றுக்­காக மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை, அதற்கு முந்­திய வாரத்­தைக் காட்­டி­லும் 3.3% குறைந்­தது. ஆனா­லும், திரெங்­கானு (33%), கோலா­லம்­பூர் (17%), நெகிரி செம்­பி­லான் (10%) ஆகிய வட்­டா­ரங்­களில் அது கூடி­யுள்­ளது.

மலாக்­கா­வி­லும் சர­வாக்­கி­லும் சட்­ட­மன்­றத் தேர்­தல் நடக்­க­வி­ருப்­ப­தும் மக்­க­ளி­டையே அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. வியா­ழக்­கி­ழமை நில­வ­ரப்­படி, மலே­சி­யா­வில் கிட்­டத்­தட்ட 75.7 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­க­வும் 78.3 விழுக்­காட்­டி­னர் குறைந்­தது ஒரு தடுப்­பூ­சி­யே­னும் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.