புதிய வடிவ குழு மனப்பான்மை இங்கு வேரூன்றும் அபாயம்

கவனம் இல்லைெயனில் நமது அரசியல் பாதிக்கப்படும்: வோங்

சிங்­கப்­பூ­ரில் நிகழ்ந்த ஆக மோச­மான இன­வா­தம் தொடர்பான சம்­ப­வம் என்று சிங்­கப்­பூ­ரர்­கள் பல­ரும் நினை­வு­கூர்­வது 1964 இனக்­க­ல­வ­ரங்­க­ளைத்தான். சீனர்­க­ளுக்­கும் மலாய்க்­கா­ரர்­க­ளுக்­கும் இடை­யில் அப்­போ­து நிகழ்ந்த மோத­லில் 36 பேர் உயி­ரி­ழந்­த­தோடு 560 பேர் காய­ம­டைந்­த­னர்.

ஆயி­னும், இதை­விட மோச­மாக 1854ல் சீன குல வழிப் பிரிவுகளான ஹொக்­கி­யன், டியோ சீ குலங்க ளுக்கிடையில் கல­வ­ரம் மூண்டு, பத்து நாட்­க­ளுக்கு மேல் அது நீடித்­தது. 400 பேர் மாண்­ட­னர், பலர் காய­ம­டைந்­த­னர், 300க்கும் மேற்­பட்ட வீடு­கள் கொளுத்­தப்­பட்­டன.

இது­போன்ற வர­லாற்­று­பூர்வ சம்­ப­வங்­களை நினைவு­கூர்ந்த நிதி அமைச்­சர் லாரன்ஸ் லோங், "தற்­போது நாம் அனு­ப­வித்து வரும் நல்­லி­ணக்­கம் மிக­வும் உறு­தி­யா­னது என்றோ அது நிரந்­த­ரம் என்றோ கரு­திவி­ட­லா­காது," என்­றார்.

கொள்கை ஆய்­வுக் கழ­க­மும் எஸ்.ராஜ­ரத்­தி­னம் அனைத்­து­ல­கப் பள்­ளி­யும் ஏற்­பாடு நேற்று செய்தி ருந்த கருத்­த­ரங்­கில் பங்­கேற்று திரு வோங் உரை­யாற்­றி­னார். வளர்ந்து வள­ரும் புதிய வடி­வி­லான குழு மனப்­பான்மை, அடை­யாள அர­சி­யல்-சிங்­கப்­பூரை இவை எவ்­வாறு பாதிக்­கும் என்­ப­தைப் பற்றி கருத்­த­ரங்கு விவா­தித்­தது.

"மேற்­கத்­திய நாடு­களில் தொடங்­கிய கலா­சா­ரப் போர் இங்கு ஏற்­கெ­னவே புதிய வடி­வி­லான அடை­யாள அர­சி­யலை உரு­வாக்­கி­யுள்­ளது. இன, சமய பிரி­வி­னை­

க­ளுக்கு அப்­பால் அது இங்கு வந்­துள்­ளது. நாம் கவ­ன­மாக இல்­லா­விட்­டால் புதிய வடி­வி­லான குழு மனப்­பான்மை இங்கு எளி­தாக வேரூன்­றி­வி­டும். அதன் பிறகு நமது அர­சி­யல்­கூட புதிய அடை­யா­ளப் பிரச்­சி­னை­க­ளால் வரை­ய­றுக்­கும் நிலை உரு­வா­கி­வி­டும்," என்று எச்­ச­ரித்­தார் திரு வோங்.

பாலின அடை­யா­ளம், இனம், அர­சி­யல் நிகழ்ச்­சி­கள் போன்ற கலா­சார விவ­கா­ரங்­கள் தொடர்­பாக வெவ்­வேறு சமூ­கக் குழுக்­

க­ளுக்கு இடை­யில் நிக­ழும் பூச­லைக் குறிப்­பிட்டு அவர் பேசி­னார்.

பல­வித குழு அடை­யா­ளங்­கள் கலந்த தேச­மா­கவே சிங்­கப்­பூர் எப்­போ­தும் இருந்­து­வ­ரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அமைச்­சர், குறிப்­பாக, மூன்று வித நாக­ரிங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக இது உள்­ளது. சீனா, இந்­தியா ஆகிய ஆசிய நாக­ரி­கங்­க­ளு­டன் தென்­கி­ழக்­கா­சிய நாக­ரி­க­மும் இதில் இணைந்­துள்­ளது என்­றார் திரு வோங். வெவ்­வேறு இனங்­களும் வெவ்­வேறு சம­யக் குழுக்­களும் நல்­லி­ணக்­கத்­து­டன் இங்கு வாழும் முறை திடீ­ரென ஏற்­பட்­ட­தல்ல என்­றும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!