முடுக்கிவிடப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள்

சில ஆப்­பி­ரிக்க நாடு­களில் தலை­தூக்­கி­யுள்ள உரு­மா­றிய கொவிட்-19 கிருமி வகைக்கு (பி1.1.529) உலக சுகா­தார நிறு­

வ­னம் ஓமிக்­ரான் என்று பெய­ரிட்­டுள்­ளது. ஓமிக்­ரான் என்­பது கிரேக்க மொழி­யின் 15வது எழுத்­தா­கும். இந்த வகை கிருமி­யால் பொது­மக்­க­ளின் உடல்­ந­ல­த்­துக்கு ஆபத்து ஏற்­படும் சாத்­தி­யம் உள்­ள­தாக அது எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

ஓமிக்­ரான் கிருமி வகை மற்ற கொவிட்-19 கிருமி வகை­யை­விட வேக­மா­கப் பர­வக்­கூ­டி­யதா, உயி­ருக்கு ஆபத்து விளை­விக்­கக்­கூ­டி­ய­தா, தடுப்­பூ­சி­யைக் கொண்டு அதை முறி­ய­டிக்­க­லாமா என்­பதை கண்­டு­பி­டிக்க விஞ்­ஞா­னி­கள் விரை­கின்­ற­னர்.

தென்­னாப்­பி­ரிக்­கா­வின் கௌடெங் மாநி­லத்­தில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரில் ஏறத்­தாழ 90 விழுக்­காட்­டி­னர் ஓமிக்­ரான் கிருமி வகை­யால் நோய்­வாய்ப்­பட்­டுள்­ள­னர். இந்­தப் புது­வ­கைக் கிரு­மி­யால் தென்­னாப்­பி­ரிக்­கா­வில் திடீ­ரென்று பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை மள­ம­ள­வென அதி­கரித்­துள்­ளது.

தென்­னாப்­பி­ரிக்க மக்­கள்­தொ­கை­யில் கிட்­டத்­தட்ட 24 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். ஆப்­பி­ரிக்க கண்­டத்­தின் மக்­கள்­தொ­கை­யில் நான்கு விழுக்­காட்­டி­னர் மட்­டுமே முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

நேற்று முன்தினம் நிலவரப்படி தென்னாப்பிரிக்காவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் குறைந்தது எட்டு பேருக்கு ஓமிக்ரான் கிருமி தொற்றியருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆப்­பி­ரிக்க நாடான போட்ஸ்­வா­னா­வில் நால்­வ­ருக்­கும் ஹாங்­காங்­கில் இரு­வ­ருக்­கும் இஸ்­‌ரே­லி­லும் பெல்­ஜி­யத்­தி­லும் தலா ஒரு­வ­ருக்­கும் ஓமிக்­ரான் கிரு­மி­யால் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. அண்­மை­யில் தென்­னாப்­பி­ரிக்கா, மலாவி, எகிப்து ஆகிய நாடு­களில் பய­ணம் மேற்­கொண்­ட­வர்­கள் மூலம் ஹாங்­காங், இஸ்­‌ரேல், பெல்­ஜி­யம் ஆகிய நாடு­களில் ஓமிக்­ரான் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

ஓமிக்­ரான் பற்­றிய செய்­தி­கள் வெளி­யா­னது பல அரசாங் கங்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பய­ணக் கட்­டுப்­பா­டு­க­ளைப் பல நாடு­கள் கடு­மை­யாக்­கி­யுள்­ளன. அது­மட்­டு­மல்­லாது, நிதிச் சந்­தை­களும் பாதிப்­ப­டைந்­துள்­ளன.

இந்­நி­லை­யில், தென்­னாப்­பி­ரிக்­கா­வில் உள்ள சுற்­றுப்­ப­ய­ணி­கள் தங்­கள் சொந்த நாடு­க­ளுக்­குத் திரும்ப ஜோகன்னஸ்பர்க் அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் நீண்ட வரி­சை­யில் காத்­துக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

தென்­னாப்­பி­ரிக்­கா­வி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளுக்கு பல நாடு­கள் தடை விதிக்க இருக்­கின்­றன. தடை நடப்­புக்கு வரு­வ­தற்கு முன்பு எப்­ப­டி­யும் சொந்த நாடு திரும்­பி­விட வேண்­டும் என்று பய­ணத்தை பாதி­யி­லேயே முடித்­துக்­கொண்டு விமான நிலை­யத்­துக்­குப் பலர் விரைந்­துள்­ள­னர்.

தென்­னாப்­பி­ரிக்­கா­வி­லி­ருந்து வரும் விமா­னங்­க­ளுக்கு பிரிட்­டன் தடை விதித்­துள்­ளது. அமெ­ரிக்கா, கனடா ஆகி­ய­வற்­று­டன் பல ஐரோப்­பிய நாடு­களும் அதே நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளன.

இதற்­கி­டையே, தென்­னாப்­பி­ரிக்­கா­வி­லி­ருந்து இரண்டு விமா­னங்­கள் நெதர்­லாந்­தின் ஆம்ஸ்­டர்­டாம் நகரை நேற்று அடைந்­த­தாக நெதர்­லாந்து சுகா­தார அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அந்த விமா­னங்­களில் பய­ணம் செய்த ஏறத்­தாழ 600 பேரில் பல­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்று அச்­சம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவர்­க­ளுக்கு ஓமிக்­ரான் கிருமி தொற்­றி­யுள்­ளதா என்­பதை கண்­ட­றிய பரி­சோ­தனை நடத்­தப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது. அந்த ஏறத்­தாழ 600 பய­ணி­களில் 85 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்று பரி­சோ­த­னை­யின் ஆரம்­ப­கட்ட முடி­வு­கள் தெரி­விப்­ப­தாக நெதர்­லாந்து சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் ஹோட்­ட­லில் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

தென்­னாப்­பி­ரிக்­கா­வி­லி­ருந்து வரும் அனைத்து விமா­னங்

களுக்­கும் நெதர்­லாந்து நேற்று தடை விதித்­தது.

புது­வகை கொவிட்-19 கிருமி வகை­யால் உல­க­ளா­விய நிலை­யில் பதற்­றம் நில­வி­வ­ரும் நிலை­யில், நியூ­யார்க்­கில் அவ­ச­ர­நிலை பிர­க­ட­னம் செய்­யப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் தற்­போ­தைய கொவிட்-19 நடை­மு­றை­களை மாற்ற வேண்­டுமா என்­பதை தீர்­மா­னிக்க ஓமிக்­ரான் கிருமி வகை தொடர்­பாக கூடு­தல் தக­வல்­கள் தேவை என்று உள்­ளூர் நிபு­ணர்­க­ளான பேரா­சி­ரி­யர் டியோ யிக் யிங், சூ லீ யாங் ஆகிய இரு­வ­ரும் ஸட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் தெரி­வித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!