எம்.பி. பதவி துறந்த ரயீசா கான் மீதான விசாரணை தொடரும் என அறிவிப்பு

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பொறுப்­பைத் துறந்த ரயீசா கானுக்கு எதி­ரான விசா­ர­ணையை உரி­மைக் குழு தொட­ரும் என நாடா­ளு­மன்ற அலு­வ­லர் தெரி­வித்­துள்­ளார். விசா­ர­ணைக்­குப் பின்­னர் உரிய நேரத்­தில் அக்­குழு தனது அறிக்­கையை மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கும் என்­றும் அவர் கூறினார். நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த ரயீசா கான், 27, அப்­ப­த­வி­யில் இருந்து வில­கு

­வ­தாக செவ்­வாய் இரவு 10.47 மணிக்கு மன்ற நாய­கர் டான் சுவான்-ஜின்­னுக்குக் கடி­தம் அனுப்­பி­னார். அவ­ரது பதவி வில­கல் குறித்த அறி­விப்பு நேற்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு முறைப்­படி தெரி­விக்­கப்­பட்­டது.

எம்.பி. பத­வி­யைக் கைவிட்ட அதே­நே­ரம் பாட்­டா­ளிக் கட்­சி­யி­லி­ருந்­தும் திரு­வாட்டி ரயீசா வில­கி­விட்­டார். இதனை அக்­கட்சி தனது ஃபேஸ்புக் வாயி­லா­கத் தெரி­வித்­துள்­ளது. திரு­வாட்டி ரயீசா கான் நாடா­ளு­மன்­றத்­தில் பொய் சொன்­ன­தாக கடந்த நவம்­பர் 1ஆம் தேதி ஒப்­புக்­கொண்­டதை அடுத்து, அதை விசா­ரிப்­ப­தற்­காக ஒழுங்கு நட­

வ­டிக்­கைக் குழு அமைக்­கப்­பட்­டது.

இவ்­வாண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி நடந்த நாடா­ளு­மன்ற விவா­தத்­தின்­போது, பாலி­யல் வன்­மு­றைத் தாக்­கு­த­லுக்கு உள்­ளான பெண் ஒரு­வர் புகார் அளிக்­கச் சென்­ற­போது அந்­தச் சம்­ப­வத்தை காவல்­துறை தவ­றா­கக் கையாண்­ட­தாக திரு­வாட்டி ரயீசா கூறி­யி­ருந்­தார்.

அந்­தப் பெண்­ணு­டன் தானும் சென்­ற­தாக அவர் அப்­போது கூறி­னார். ஆனால் அப்­படி ஒரு சம்­ப­வம் நிக­ழ­வில்லை என்று பின்­னர் அவர் ஒப்­புக்­கொண்­டார்.

திரு­வாட்டி ரயீசா, கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்­த­லில் செங்­காங் குழுத்­தொ­கு­தி­யில் போட்­டி­யிட்டு வென்ற பாட்­டா­ளிக் கட்சி அணி­யில் இடம்­பெற்று இருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!