ஆங் சான் சூச்சிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை

மியன்மாரின் முன்னைய அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

அவர் ராணுவத்துக்கு எதிராக மக்களைத் தூண்டியதாகவும் கொவிட்-19 கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளை மீறியதாகவும் கூறி மியன்மார் நீதிமன்றம் அந்தத் தண்டனையை விதித்தது.

ராணுவ ஆட்சியாளர்களின் பேச்சாளர் இன்று (டிசம்பர் 6) இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய மியன்மார் ராணுவம், திருவாட்டி சூச்சியை ரகசிய இடத்தில் தங்க வைத்திருக்கிறது.

ஊழல், ரகசிய சட்டத்தை அத்துமீறியது, தேசத் துரோகம் உள்ளிட்ட மொத்தம் 11 குற்றச்சாட்டுகளை திருவாட்டி சூச்சியின்மீது ராணுவ ஆட்சியாளர்கள் சுமத்தியுள்ளனர்.

அவர் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

அவை திருவாட்டி சூச்சியின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு திட்டமிடப்பட்டவை என்றும் அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

திருவாட்டி சூச்சியுடன், பதவியிலிருந்து நீக்கப்பட்ட மியன்மாரின் முன்னைய அதிபர் வின் மின்ட்டுக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில் ஆயுதம் ஏந்தாத பொதுமக்களுக்கு எதிராக அளவுக்கு அதிகமான வன்முறையை பயன்படுத்துவோர் மீது மியன்மார் ராணுவம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

யங்கூனில் உள்ள ஐக்கிய நாட்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் இதைத் தெரிவித்தார்.

ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின்மீது ராணுவத்தினர் இருந்த வாகனம் மோதியது.

அதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!