இந்தியா: ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் குள்ள மனிதர் இவர்தான்!

மூன்­றடி உய­ரமே இருக்கும் கட்டி­பள்ளி சிவ­லால், 42, இந்­தி­யா­வில் வாகன ஓட்­டு­நர் உரி­மம் பெற்ற முதல் குள்ள மனி­தர் என்ற பெரு­மை­யைப் பெற்றுள்ளார்.

ஹைத­ரா­பாத் நக­ரில் ஒரு தனி­யார் நிறு­வ­னத்­தில் பணி­யாற்றி வரும் திரு சிவ­லா­லுக்­குத் தமது உய­ரம் கார­ண­மாக பய­ணம் செய்­வது நாளுக்கு நாள் சிர­ம­மாக இருந்­தது. அத­னால், தற்­சார்­பு­டன் இருக்க வேண்­டிய தேவையை இவர் உணர்ந்­தார்.

"முன்­னெல்­லாம், என்­னால் வண்டி ஓட்ட முடி­யாது என்­ப­தால் பொதுப் போக்­கு­வ­ரத்­தை­யும் டாக்சி­க­ளை­யும் நம்­பி­யி­ருக்க வேண்டி இருந்­தது. அவ்­வாறு செல்­லும்­போது டாக்சி டிரை­வர்­கள், வழிப்­போக்­கர்­களில் சிலர் என்­னைப் பார்த்து கிண்­டல் செய்­வர். அத­னால், எப்­ப­டி­யே­னும் கார் ஓட்­டக் கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று முடி­வு­செய்­தேன்," என்­றார் திரு சிவ­லால்.

அமெ­ரிக்­கா­வில் குள்ள மனிதர் ஒரு­வர் காரோட்­டும் காணொளி­யைப் பார்த்த பிறகு தம்­மா­லும் வாக­னம் ஓட்ட முடி­யும் என்ற நம்­பிக்கை பிறந்­தது என்­றார் இவர்.

அதன் இயக்­க­மு­றை­யைப் பற்றி அறிந்­து­கொள்ள இவ­ரும் அமெ­ரிக்கா சென்­றார்.

கார் ஓட்­டு­வது தம்­மால் முடி­யாத செய­லல்ல என்­பதை அறிந்து கொண்ட பிறகு, வாடிக்­கை­யாளர்­கள் கேட்­டுக்­கொண்­ட­படி காரை வடி­வமைத்­துத் தரும் ஒரு­வரை ஹைத­ரா­பாத்­தில் திரு சிவ­லால் சந்­தித்­தார்.

"என்­னு­டைய கால்­க­ளுக்கு எட்­டும் வகை­யில் 'மிதி­கட்­டையை' உயர்த்தி அமைத்­தேன். ஆனா­லும், பல்­வேறு கார­ணங்­க­ளைச் சொல்லி, ஹைத­ரா­பாத்­தில் உள்ள ஓட்­டு­நர் பயிற்­சிப் பள்­ளி­களில் பல­வும் எனக்கு கார் ஓட்­டக் கற்­றுத்­தர மறுத்­து­விட்­டன," என்று வருத்­தத்­து­டன் கூறி­னார் இவர்.

இருப்­பி­னும், இஸ்­மா­யில் என்ற தம் நண்­ப­ரின் துணை­யு­டன் ஒரு­வழி­யாக இவர் கார் ஓட்­டக் கற்­றுக்­கொண்­டார்.

இப்­போது தம் மனை­விக்கு கார் ஓட்­டக் கற்­றுக்­கொ­டுத்­து­வரு­கி­றார் திரு சிவ­லால்.

குள்ள மனி­தர்­கள் பிறரை நம்பி­யி­ரா­மல் தற்­சார்­பு­டன் இருக்க உதவ வேண்­டும் என்ற நோக்­கத்­தில், அவர்­க­ளுக்­கென சிறப்பு ஓட்­டு­நர் பயிற்­சிப் பள்ளி ஒன்­றைத் தொடங்­க­வும் இவர் திட்­ட­மிட்டு வரு­கிறார்.

"என்­னைப் போன்­றோ­ர் கார் ஓட்­டக் கற்­றுக்­கொண்டு, தற்­சார்­பு­டன் திகழ மாநில அரசு ஆத­ரவு வழங்க வேண்­டும்," என்று இவர் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

'கியர்' இல்­லாத இவ­ரது காருக்கு தெலுங்­கானா அரசு அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!